ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

17 செப்., 2012

அமெரிக்காவின் மதவெறிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், செப்டம்பர் 17, 2012 No comments

.இஸ்லாத்தையும், இறைத்தூதர் நபிகள் நாயகத்தையும் இழித்து யூதுஅமெரிக்கர் இயக்கிய திரைப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், படத்தை நீக்க மறுக்கும் கூகிள் மற்றும் அதன் அங்கமான யூ-டியூப் தளங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு மீராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு சென்றது.
 ஜமாத் தலைவர் டாக்டர்  நூர் முஹம்மது தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் ,இளைஞர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் திரளாக கலந்துக்கொண்டு அமெரிக்காவிற்க்கு எதிரான தமது கண்டனைத்தை பதிவுசெய்தனர்


 கண்டன முழக்கங்கங்களுடன் பெரிய மதகுவரை பேரணி வந்தவர்கள்  அங்கிருந்து வாகனங்களில் பி.முட்லுரர் எம்.ஜி.ஆர் சிலை அருகே  . மாபெரும் கண்டன போராட்டமும் மனித சங்கிலியும் நடைபெற்றது.





15 செப்., 2012

முகநூலின் கடலூர்-பரங்கிபேட்டை திண்ணை குழுமம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, செப்டம்பர் 15, 2012 No comments

முகநூலின் கடலூர்-பரங்கிபேட்டை திண்ணை குழுமம் சார்பாக கடலூர் மற்றும் பரங்கிபேட்டையில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் விபத்து விழிப்புணர்வு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது,இதற்கான ஏற்பாடுகளை திண்ணை அமைப்பாளர் யாசின் அவர்களில் ஆலோசனைப்படி தமீம்,ஹம்துன் அஷ்ரப்,அப்துல் பாசித்,ஜமால் மரைக்காயர்,வலீத்,மதார்ஷா பைசல் மற்றும் திண்ணையின் உறுப்பினர்கள் மேற்கொண்டனர். 

2 செப்., 2012

பயங்கரங்களின் நிழலில்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, செப்டம்பர் 02, 2012 No comments



குஜராத் இனப்படுகொலையை நிகழ்த்திய நரேந்திர மோடியின் அடியாட்கள் 116 பேருக்கு கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் அளித்துள்ளது. இந்த படுகொலைகளை நடத்தியவர்களில் ஒருவரான மாயாபேன் கோட்னானிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த நரேந்திர மோடி, பஜ்ரங் தளத்தின் பாபு பஜ்ரங்கி ஒரு அமைச்சருக்கு இனையான அந்தஸ்துடன் தான் இந்த தீர்ப்பு வரும் வரை வலம் வந்தார். குஜராத 2002 தெகல்காவின் புலனாய்வு வெளிவந்த போது அதற்கு நான் எழுதிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.............................

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நாட்களாக நினைவு கொள்ள வேண்டியவை – அக்டோபர் 25,26, 2007. இந்த இரு நாட்களும் பல செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட காட்சிகள், ஒரு நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக மவுனத்தில் உறையச் செய்தது. 2000 முஸ்லிம்களை கொன்று குவித்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள், முதல் முறையாக காமிராக்கள் முன் தோன்றி பெருமிதம் பொங்க – தங்களின் செயல்களை துல்லியமாக விவரித்தார்கள். அரசு அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், பா.ஜ.க தலைவர்கள், பஜ்ரங் தள் தொண்டர்கள் எனப் பலரும் கொலைகாரர்களில் அடக்கம்.
இந்த குற்றங்களின் பாதுகாவலர்களான தில்லி பா.ஜ.க. தலைவர்கள் கமுக்கமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், காங்கிரஸ் ஏன் அமைதி காக்கிறது? இந்த கொலைக்காரர்களில் பலர் தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் பெரும் பொறுப்புகளில் உள்ளதாலா? அல்லது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர், கோத்ரா இனப்படுகொலையிலேயே பங்கு கொண்டதாலா? இல்லை எனில் இவர்களின் மவுனம், துல்லியமான சமிக்ஞைகளை கொண்டிருக்கிறதா?
’தெகல்கா’வின் அரிய புலனாய்வு பற்றி நாடாளுமன்றத்தில் பேசியவர்கள் இடதுசாரிகல், லாலு பிரசாத், மாயாவதி ஆகியோர் மட்டுமே. மனித உரிமை ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் என இந்த சமூகத்தின் ஒரு சிறிய பகுதி பேசியிருக்காவிட்டால், மொத்தத்தில் இந்த புலனாய்வுகள் கரைந்து போயிருக்கும் ஊடகங்கள் கூட மேலோட்டமாகப் பேசிவிட்டு, வேறு கதைப்புகள் நோக்கிச் சென்று விட்டன. அதிலும் பலர் தொடர்ந்து தெகல்கா’வின் இந்த பாணி இதழியலை வசை பாடத் தவறவில்லை. ஊடகங்களுக்கு இன்று அரசு மற்றும் இந்திய – வெளிநாட்டு முதலாளிகளின் தயவின்றி வாழத் தெரியாது. தனித்துவமான ஒரு வாழ்க்கையை தீர்மானித்த தெகல்கா’வால் எந்தத் தயக்கமுமின்றி – அதிகாரங்களுக்கு எதிராக துணிவுடன் உரக்க பேச முடிகிறது.
ஆயுத போர ஊழல், சாகிரா ஷேக், ஜெசிகா லால், சஞ்சய் தத், மோடியின் போலி என்கவுன்டர்கள் என 25- க்கும் மேற்பட்ட மறைக்கபட்ட உண்மைகளை வெளிக்கொணர முடிந்தது. இது போன்ற இதழியலாளர்கள் இல்லையென்றால், மெல்ல மெல்ல ஒரு நிலப்பரப்பின் மக்கள் சமூகம் அடிமைகளாக உருமாற்றம பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. மறுபுறம் நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை, போராடுபவர்களை இந்த நாடு அடையாளம் காண மறுக்கிறது. கிரிகெட் விளையாடும் சச்சின் தேண்டுல்கர் உலகப் பிரபலம். ஆனால், தன் உயிரை பணயம் வைத்து குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை 5 ஆண்டுகளாக நடத்தும் தீஸ்தா செதல்வாத்தை, ஏன் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை? ஒரு மாபெரும் நாகரீகம், வளரும் பொருளாதாரமாக, மட்டுமே சுருங்கிப்போனது.
தெகல்கா’ புலனாய்வு உண்மைகள் வெளிவந்ததும் உலகம் முழுவதிலிருந்தும் குடிமைச் சமூகத்தின் குரல்கள் உருப்பெறத் தொடங்கின. உயிரைப் பணயம் வைத்து ஆறு மாதங்கள் புலனாய்வை மேற்கொண்ட ஆஷிஷ் கேத்தன் மற்றும் தெகல்கா’ குடும்பத்தினருக்கு – வழக்கறிஞர்கள், சட்டநிபுனர்கள், எழுத்தாளர்கள், போராளிகள் என பெருங்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்தார்கள். நம் காலத்தின் உண்மையான நாயகர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். ஆம், அதிகாரத்துக்கு எதிராக கலகம் செய்யும் வீரர்கள்.
வேறு வகையில் பார்த்தால், இது யார் செய்திருக்க வேண்டிய வேலை? 2002 பிப்ரவரி இறுதியில் இனப்படுகொலை நடத்தப்பட்டது. அடுத்த ஆறுமாத காலத்தில் விசாரனைகள் நிகழ்ந்து, மறு விசாரணையும் நடந்து நவம்பர் 2003 வாகிலாவது அரசாங்கம் தனது தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். இந்த தெகல்கா’வின் வாக்குமூலங்களை குஜராத் காவல்துறை அல்லவா பெற்றிருக்க வேண்டும்? இது போன்ற இனப்படுகொலைகளை செய்து வரும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மறுபுறம் ‘பண்பாட்டுக் காவலர்”களைப் போல வலம் வருகின்றன. குருதி தோய்ந்த கரங்களால் கடவுளை தொழுதல், தேர்தலில் முழக்கமிடுதல் என ஒப்பனைகளை கச்சிதமாய் தொடர்கின்றன.
இவ்வளவு கொடூரங்கள் ஆதாரங்களுடன் வெளிவந்த பிறகும், மீண்டும் நரேந்திர மோடி வெற்றி வாகை சூடி பதவியில் அமர்ந்திருக்கிறார். இதில் வியப்படைவதற்கு ஏதும் இருக்கிறதா? எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. மதவாதத்தை கொள்கையாகக் கொண்டவர்கள், குஜராத் சமூகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்கான சூழலை உருவாக்கி வருகிறார்கள். பால்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என அவர்களின் கரங்கள் நுழையாத இடமேயில்லை. 1985 முதல் நரோடாவிலும் கேதாவிலும் ஆயுதப்பயிற்சியளிக்கும் ‘ஷாகா’க்களை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து நடத்தி வருகிறது. லத்தி கம்புகளை எறிந்துவிட்டு அவர்கள் தானியங்கி துப்பாக்கிகளை கையில் பிடித்து, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வன்ம முகாம்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள், அடுத்த கட்டமாக இந்த முகாமில் பங்கு கொண்டவர்கள், குஜராத் அரசின் பல்வேறு துறைகளிலும் பணியில் அமர்த்தப்பட்டாட்கள். தெகல்கா’ வாக்குமூலங்களில் வரும் அனைவரும் இந்த வதை முகாம்களின் அங்கத்தினரே, ஆயுதங்களை வழங்கும் காவல் துறையினர், கொலைக்காரர்களுக்கு ஆதரவாக செய்ல்படும் அரசு வழக்கறிஞர் எனப் பல வேடங்களை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள். இந்த மரண வியாபாரிகளுக்கு இந்திய முதலாளிகள் பக்கபலமாய் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்பானி, ரத்தன் டாடா என இப்பெரும் படை மோடியுடன் அளவளாவியதை நாம் தொலைக்காட்சிகளில் கண்டோம். ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரும் நிதி வழங்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், இந்திய முதலாளிகளுக்கும் தெகல்கா இந்த வாக்குமூலங்களின் தனியான திரையிடலை ஏற்பாடு செய்யலாம்.
சமூகத்தில் விதைக்கபட்டுள்ள இந்த நஞ்சை எப்படி அப்புற்ப்படுத்துவது? தேர்தலுக்குத் தேர்தல் பா.ஜ.க. வை உக்கிரமாய் எதிர்த்து முழுக்கம் போட்டால், மதவாதம் அழிந்துவிடுமா? மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் ஊடக புகைப்பட வெளியீட்டால் நிறைவுறுமா? மதச்சார்பின்மை பேசுகிறவர்கள் மதவாத்த்தை மிகவும் தட்டையாக புரிந்து கொண்டுள்ளார்களா? மதவாத்த்தை எதிர்ப்பதற்கான பண்பாட்டுத் தளத்திலான வேலைதிட்டம் ஏன் உருவாக்கபடவில்லை? கே.என்.பனிக்கர், தீஸ்தா செதல்வாத், ராம் புனியானி போன்று மனதின் அடியாழத்தில் இருந்து தொட்ரந்து பேசுபவர்களின் வார்த்தைகளை நாம் வீணடித்து  விட்டோமா? சாதி ஒழிப்பில் முனைப்பில்லாத்தால் தான், மத எதிர்ப்பை பெயரளவில் நிறுத்திக் கொள்கிறோமா? எத்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் நாம்? மதவெறியின் ஆபத்தை உணராத பெரியாரின் வழித்தோன்றல்களாக கருதிக்கொள்ளும் திராவிடக் கட்சிகள், கூச்ச நாச்சமின்றி மாறி மாறி பா.ஜ.கா.வை தோளில் சுமந்து தமிழகத்தில் வளர்ப்பது சரிதானா?
இந்த தெகல்கா ஆவணங்களின் வாயிலாக மதவெறியின் உண்மை முகத்தை நேரில் காணும் அரிய வாய்ப்பு மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறது. காலம் கனிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரதிகள் கம்பீரமாய் வலம் வரும் போராசிரியர் பந்துக்வாலா, காவல் துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் நம்பிக்க்கின் தூதுவர்களாகத் திகழ்கிறார்கள், இஷான் ஜாப்ரியின் துணைவி சக்கரியா ஜாப்ரி, தெலகாவின் இந்த பதிவுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கிறார். கோத்ராவில் இனப்படுகொலை செய்யபட்ட 2000 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், அகதிகளாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களின் வாழ்க்கை மீட்டெடுக்கபட வேண்டும்.           நன்றி;http://amuthukrishnan.com