ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

31 அக்., 2012

இன்று மாலை கரையை கடக்கும் ...

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், அக்டோபர் 31, 2012 No comments






 வங்க கடலில் உருவாகியுள்ள நீலம் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் இன்று  மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேதாரண்யம் தொடங்கி திருவள்ளூர் வரை கடலோர மாவட்டங்களில் திங்கள் இரவிலிருந்து கன மழை பெயந்து வருகிறது. கிணறு, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புயல் மற்றும் கன மழையை எதிர்கொள்ளும் வகையில் கடலோர மாவட்டங்களில் மீட்பு பணிக்கு தயார் நிலையில்  அரசுஊழியர்கள் உள்ளனர். நமதூர் பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி சார்பில் முன்னேற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக பேரூராட்சி மனற தலைவர் M.S.முஹமமது யூனுஸ் தெரிவித்தார், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சார்பாகவும் ஸாதிமஹால் மற்றும் மினி மஹால் ஆகியவை தயார் நில்லையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு எற்படாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக




30 அக்., 2012

விடாத மழை...பரங்கிப்பேட்டையில்

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், அக்டோபர் 30, 2012 No comments



சென்னைக்கு தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயல் சின்னமாக மாறும் என்றும், இதனால் கன மழை பெய்யும் என்பதாலும்,சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடலூர் உட்பட பல மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து சென்றதால் நாகப்பட்டினம்,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.


இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையானது, நேற்று அதிகாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரங்கிப்பேட்டையில் நேற்று இரவில்லிருந்து விடாமல் மழைபெய்துவருகிறது தெருக்கள்தோரும் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது











.

27 அக்., 2012

வாழ்த்துகிறோம்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, அக்டோபர் 27, 2012 No comments

பரங்கிப்பேட்டை முஸ்லிம் பொதுமக்கள் அனைவர்களுக்கும் தனது பெருநாள்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது   http://portonovonews.blogspot.in








Funny photo effects

26 அக்., 2012

பாரதிய ஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, அக்டோபர் 26, 2012 No comments

 பாஜக தேசிய தலைவர் நிதின் கட்கரி நடத்தி வரும் தொழில்கள் தொடர்பாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. 

புதிய குற்றச்சாட்டுகள்: 1999ஆம் ஆண்டில் கட்கரி மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி தனியார் நிறுவனங்களுக்குச் சாலை அமைப்பதற்கான அனுமதியை அளித்தார். அதில் ரூ. 165 கோடிக்கு அவர் ஆதாயம் பெற்றார் என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. 

மேலும், இந்த ஊழல் பணத்தை கொண்டு தனது கார் டிரைவர் உள்பட பல்வேறு பினாமிகளின் பெயர்களில் 18 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இது தவிர தனது நிறுவனத்துக்காக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அரவிந்த் கேஜரிவால் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

சிந்திக்கவும்: இந்நிலையில் கட்கரிக்கு கட்சியின் மானம் கெட்ட மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கட்கரி மீதான குற்றச்சாட்டுகள் பாஜகவின் உள்கட்சி விவகாரம் என்று கழுவிற மீனில் நழுவுற மீனா ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. 
பின் குறிப்பு: கர்நாடக பாரதிய ஜனதாவின் முன்னாள் முதல்வர் இடையூரப்பா நில மோசடி முதல் பல்வேறு ஊழல்களை புரிந்தார். இப்பொழுது தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார். இதுதான் இந்த கொள்கை கோமான்களின் யோக்கிதை.

நன்றி;http://www.sinthikkavum.net

23 அக்., 2012

பரங்கிப்பேட்டை மழைக்கால புகைப்படங்கள் -2

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், அக்டோபர் 23, 2012 No comments








 இன்று காலை வெயில்  உதித்தநிலையில் திடீரென மழை பெய்ந்தது  ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்துஓடியது சின்னதெருவில் மழைநீர் வடிய வழி இல்லாநிலையில் தண்ணீர் தேங்கி சிறிய குட்டைபோல் காட்சியளித்தது குறிபிடதக்கது.


22 அக்., 2012

பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், அக்டோபர் 22, 2012 No comments




தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருச்சி, விழுப்புரம், காஞ்சி , கடலூர் , நீலகரி உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமறை கடந்த 16ம் தேதி துவங்கியதை தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களுக்கு இது வரை 21 பேர் பலியாகியுள்ளனர். நிவாரண பணிகளுக்கு அரசு தயார் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். நிவாரண தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மழை காரணமாக ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பலத்த மழை காரணமா நீர் வரத்து அதிகரித்துள்ளது. நெல்லையில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.