ஹம்துன் அஷ்ரப்

4 ஜூலை, 2012

திருப்பூரில் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 4 பேர் கைது

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 04, 2012 No comments

உரிய ஆவணங்கள் இல்லாமல், திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரியர்கள் நான்கு பேர், கைது செய்யப்பட்டனர்.திருப்பூரில், பனியன் ஏற்றுமதி தொடர்பாக, வெளிநாட்டு வர்த்தகர்கள், அதிகளவு வந்து செல்கின்றனர். நைஜீரியா, சோமாலியா நாட்டை சேர்ந்தவர்கள், சுற்றுலா விசாவில் திருப்பூருக்கு வந்து, முறைகேடாக பனியன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் காதர்பேட்டை, ராயபுரம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில், நைஜீரியர்கள் அதிகளவு தங்கியுள்ளனர். பனியனை விலைக்கு வாங்கி, அங்குள்ள நண்பர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி, ஏற்றுமதி வரியிலும், முறைகேடு செய்து வருவதோடு, "செகண்ட்ஸ்' துணிகளையும் வாங்கி, விற்று வருகின்றனர்.சட்ட விரோதமாக தங்கியுள்ள நைஜீரியர்கள் குறித்து, ஏ.எஸ்.பி., தலைமையிலான போலீசார், ஆய்வு நடத்தினர். பல பகுதிகளில் தங்கியிருந்த, 70 நைஜீரியர்களிடம், பாஸ்போர்ட், விசா ஆகியவை, சரி பார்க்கப்பட்டன. இதில், எம்.ஜி.ஆர்., சிலை எதிரே, யுனிவர்சல் ரோடு வீட்டில் தங்கியிருந்த நான்கு பேரிடம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாதது தெரிய வந்தது.நைஜீரியாவின் அனப்பரா கேட் பகுதியை சேர்ந்த, எபிகா மைக்கேல் நவ்யூ, 38, இக்னா கிறிஸ்டோபர் ஒக்கோசோ, 24, நவீனே விக்டர், 37, சின்னோடம் ஹால்டோனேட்டர் 30, ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.




நன்றி; தினமலர்

0 கருத்துகள்: