ஹம்துன் அஷ்ரப்

16 மே, 2011

முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், மே 16, 2011 No comments

சென்னை,மே 16:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா  தமிழக முதலமைச்சராக 3வது முறையாக இன்று நண்பகலில் பொறுப்பேற்றார்.
.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற எழுச்சி மிகு விழாவில் தமிழக கவர்னர் எஸ்.எஸ். பர்னாலா அவருக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட 33 அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியேற்றனர். 

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது தொடர்ந்து ஜெயலலிதாவை புதிய முதல்வராக பதவியேற்க வருமாறு தமிழக கவர்னர் பர்னாலா அவருக்கு அழைப்பு விடுத்தார்.  33 அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா கவர்னரிடம் கொடுத்தார். இன்று காலை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நண்பகல் 12 மணிக்கு பிறகு போயஸ் கார்டனிலிருந்து புறப்பட்டு  மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு 12.25 மணிக்கு வந்தார்.

இருபுறமும் அதிமுக தொண்டர்களும் பொது மக்களும் குழுமியிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  ஜெயலலிதா நேராக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்தார்.  சரியாக 12.40 மணிக்கு தமிழக கவர்னர் பர்னாலா பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு வந்தார். அவரை தலைமைச் செயலாளர் மாலதி  வரவேற்றார்.

விழா மேடைக்கு வந்தபோது ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பவர்களை கவர்னருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஜெயலலிதாவை முதலமைச்சராக பதவியேற்க வருமாறு தலைமைச் செயலாளர் மாலதி  அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மேடைக்கு முன்பு இருந்த மைக் அருகே வந்தார். அவருக்கு தமிழக கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதா ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழி ஏற்றார்.

பதவியேற்ற பின் கவர்னர் மாளிகை குறிப்பேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் அவருக்கு தமிழக கவர்னர் பர்னாலா வாழ்த்து தெரிவித்தார்.  அரங்கத்தில் கூடியிருந்த தலைவர்களும் தொண்டர்களும் பொது மக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர்.  அவர்களுக்கு கவர்னர் பர்னாலா  பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  முதலில் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். பதவியேற்றதும் நேராக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.  இதேபோல மற்ற அமைச்சர்களும் பதவியேற்றதும் முதல்வர் சந்தித்து ஆசி பெற்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா  தமிழக முதலமைச்சராக 3வது முறையாக இன்று நண்பகலில் பொறுப்பேற்றார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற எழுச்சி மிகு விழாவில் தமிழக கவர்னர் எஸ்.எஸ். பர்னாலா அவருக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட 33 அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியேற்றனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது தொடர்ந்து ஜெயலலிதாவை புதிய முதல்வராக பதவியேற்க வருமாறு தமிழக கவர்னர் பர்னாலா அவருக்கு அழைப்பு விடுத்தார்.  33 அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா கவர்னரிடம் கொடுத்தார். இன்று காலை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நண்பகல் 12 மணிக்கு பிறகு போயஸ் கார்டனிலிருந்து புறப்பட்டு  மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு 12.25 மணிக்கு வந்தார்.

இருபுறமும் அதிமுக தொண்டர்களும் பொது மக்களும் குழுமியிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  ஜெயலலிதா நேராக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்தார்.  சரியாக 12.40 மணிக்கு தமிழக கவர்னர் பர்னாலா பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு வந்தார். அவரை தலைமைச் செயலாளர் மாலதி  வரவேற்றார்.

விழா மேடைக்கு வந்தபோது ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பவர்களை கவர்னருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஜெயலலிதாவை முதலமைச்சராக பதவியேற்க வருமாறு தலைமைச் செயலாளர் மாலதி  அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மேடைக்கு முன்பு இருந்த மைக் அருகே வந்தார். அவருக்கு தமிழக கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதா ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழி ஏற்றார்.

பதவியேற்ற பின் கவர்னர் மாளிகை குறிப்பேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் அவருக்கு தமிழக கவர்னர் பர்னாலா வாழ்த்து தெரிவித்தார்.  அரங்கத்தில் கூடியிருந்த தலைவர்களும் தொண்டர்களும் பொது மக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர்.  அவர்களுக்கு கவர்னர் பர்னாலா  பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  முதலில் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். பதவியேற்றதும் நேராக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.  இதேபோல மற்ற அமைச்சர்களும் பதவியேற்றதும் முதல்வர் சந்தித்து ஆசி
பெற்றனர்.

நன்றி;
http://www.maalaisudar.com

0 கருத்துகள்: