பரங்கிப்பேட்டை: இன்று பகல் சுமார் 12 மணிக்கு வத்தக்கரை என்றழைக்கப்படும் அன்னங்கோயிலில் உள்ள மீன் விற்பனை மற்றும் கிடங்கு வளாகத்தில் திடீரென்று தீ பிடித்தது. அது மளமளவென்று கட்டுக்கடங்காமல் காட்டுத்தீப் போல் வளாகத்தில் உள்ள அனைத்து கிடங்கு மற்றும் விறபனை நிலையத்திற்கும் பரவியது. நகரத்திலிருந்து லைட்ஹவுஸ் பகுதியை வான் நோக்கிப் பார்த்தால் வெறும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது போன்று ஒரு பயங்கர-பிரமாண்ட தீ விபத்தை இதற்கு முன் பரங்கிப்பேட்டையில் நிகழ்ந்திருக்கிறதா என தெரியிவில்லை. கடல்வாழ் உயிரியல் கல்லூரியிலிருந்து கலங்கரை விளக்கம் வரை மக்கள் வழியெங்கும் நின்று கொண்டு வேடிக்கை பாத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டும் நிலைமையை கட்டுப்படத்த நேரம் பிடித்தது. பரங்கிப்பேட்டை, சிதம்பரம் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வண்டிகள் கடுமையாக போரடினர். பேரூராட்சித் தலைவர், வட்டாட்சியர், காவல் துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீயணைப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டனர்.
குளிரூட்டிகளில் அடைத்து வைக்கபட்ட பல லட்ச மதிப்பள்ள மீன்கள், ஸ்டோரேஜ்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் மட்டுமின்றி கணக்கிலடங்காத பொருட்கள் தீக்கு இரையாயின. சில கேஸ் சிலிண்டர்களும் வெடித்தன. இன்னும் இதுவரை சேத மதிப்பீடு தெரியவில்லை.

நன்றி;
mypno blogspot.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக