ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 மார்., 2009

உண்ணாவிரதம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 05, 2009 No comments


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மார்ச் 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அதிமுக தலைவி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும், வருகிற 10-ந்தேதி அதிமுக சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். மற்ற மாவட்டத் தலை நகரங்களில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அதில் முதலில் எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு நிதியை அளித்து தொடங்கி வைக்க உள்ளேன். அந்தந்த மாவட்டங்களில் வைக்கப்படும் உண்டியலில் செலுத்தப்படும் நிதிகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் பின்னர் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.என்று கூறியுள்ளார்.

நன்றி;

இந்நேரம் வலைப்பூ

தெருமுனை பிரச்சார கூட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 05, 2009 No comments

தி.மு.க.அரசின் நிதி நிலை அறிக்கை சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெருவில் நடைப்பெற்றது. ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றியபெருந் தலைவருமான முத்துபெருமாள் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாண்டியன், வரவேற்புரையாற்றினார்.தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். கருவறையில் இருந்து கல்லறை வரை மக்களின் தேவை அறிந்து நலதிட்டங்களை அறிவித்து மக்களுக்காகவே உழைக்கக்கூடிய ஆட்சி கலைஞர் தலைமையிலான இந்த அரசு தான் என்றும், இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளின் படி இடஓதுக்கீடு கொடுத்ததும்,மேலும் அமைச்சரைவையில் முஸ்லிம்களை அமைச்சர்களாக்கி அழகு பார்ப்பதும் கலைஞர் தலைமையிலான இந்த அரசுதான் என்றார். எனவே வர இருகின்ற மக்களவை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ், துணை தலைவர் செழியன், வழக்கறிஞர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதி முனவர் ஹூஸைன், காண்டீபன், பைசல், அன்சாரி, அஷ்ரப் அலி, பாவாஜான், ஹபிபூர்ரஹ்மான் மற்றும் தி.மு.க முன்னோடிகள் கலந்துக்கொண்டனர்.

1 மார்., 2009

அரசு மருத்துவமனையில்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 01, 2009 No comments


உள்ளாட்சிதுறை அமைச்சர் திரு,மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, பால், பழம், பிரட். வழங்கப்பட்டது
ஓன்றிய பெருந்தலைவர் முத்துபெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ், பேரூராட்சி மன்ற துனை தலைவர் செழியன்
தி.மு.க. நகரசெயலாளர் பாண்டியன், இளைஞர் அணி முனைவர் ஹீசைன், பைசல், கவுன்சிலர்கள் பாவாஜான், ஹாஜா கமால்,அபாகான்,
தி.மு.க. முன்னோடிகள் தங்கவேல், Eng. அருள்வாசகம், கோமு, ஆரிபுல்லா, ஜாபர்,ஹாரிஸ். மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

26 பிப்., 2009

ஆர்ப்பாட்டம்...இது...ஆர்ப்பாட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 26, 2009 No comments

பரங்கிப்பேட்டை பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ஒழுக்க சீர்கேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.நகர செயலாளர் G.வல்லரசன் தலைமை தாங்கினார்,கடலூர் மாவட்ட செயலாளர் திரு,T.மணி வாசகம் கண்டண உரையாற்றினார்.நகர செயலாளர் பேசுகையில், ஆசிரியர்களை மாணவர்கள் மாதா பிதா குரு தெய்வம் எனசொல்வார்கள் ஆனால் அந்த ஆசிரியர்களோ, மாணவிகள் முன்னால் அருவறுக்கதக்க முறையில் சண்டையிட்டுள்ளார்கள். இது மிகவும் கண்டிக்கதக்கது இந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதுமட்டுமில்லாமல், அனைத்து ஆண் ஆசிரியர்களையும் பணியிடைமாற்றம் செய்யவேண்டுமென்றார்,இல்லையெனில்இந்திய கம்யூனிஸ்ட் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துமென்றார்.மாவட்ட செயலாளர் T. மணிவாசகம் பேசுகையில் இந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பொருத்தவரை பெண் ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கபடவேண்டும், ஆசிரியர் தாழ்வு மனப்பான்மையால் ஒருவரையொருவர் சண்டையிட்டு கொண்டிருந்த போது நீண்டகாலமாக சண்டையை கண்டுக்கொள்ளாத தலைமை ஆசிரியர் மீது கல்வி இலாகா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சமுக பொறுப்பை உணர்ந்து மற்றவர்கள் மதிக்க தக்கமுறையில் தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றார்.

4 பிப்., 2009

மனிதநேய மக்கள் கட்சி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 04, 2009 1 comment

அரசியலில் பங்கு பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தன் ஆதரவில் மனிதநேய மக்கள் கட்சி என்கிற புதியகட்சியை பிப்ரவரி 7ம் தேதி துவக்குகிறது. இதற்கான துவக்கவிழா தாம்பரத்தில் நடக்கிறது.இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நிருபரிடம் கூறுகையில்,தமுமுக ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு 7ம் தேதி தாம்பரத்தில் நடக்கிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்பட இருக்கிறது. துவக்க விழா மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கட்சியின் பொதுச் செயலாளராக அப்துல் சமது, பொருளாளராக ஹாரூன் ரஷீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமுமுக சமூக சேவை அமைப்பாக தொடர்ந்து செயல்படும்.இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் செயல்படலாம்.ராமநாதபுரம், வேலூர், நெல்லை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். அவற்றில் எதாவது இரண்டு தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்றார் .