ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 செப்., 2011

யாருக்கு சீட்டு....?

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், செப்டம்பர் 20, 2011 No comments





பரங்கிப்பேட்டை நகரில் அவ்வப்போது சூழும் கார்மேகங்கள் போல் அல்லாமல் கடந்த சில வாரங்களாகவே தேர்தல் மேகமும் சூழ்ந்தபடியே இருக்கிறது. தனித்தனி சந்திப்புகள், ஆலோசனைகள் என்று தொடரும் இச்சூழல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க-வும், தி.மு.க.வும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான விருப்ப மனுவை பெற்று களத்தில் துடிப்புடன் இருக்கிறது. ஆளும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நகர அவைத்தலைவர் மலை.மோகன், நகர செயலாளர் K.மாரிமுத்து, சிறுபான்மை பிரிவு நிர்வாகி H.ஷாஜஹான், புலவர் C.K.சீனிவாசன், ஜெய்சங்கர் ஆகியோர்கள் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
பேரூராட்சி மன்ற தலைவர் போட்டியில் தி.மு.க. சார்பில் தற்போதைய பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி A.R.முனவர் உசேன், நகர தி.மு.க. செயலாளர் J.பாண்டியன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி காண்டீபன், மகளிரணி பொற்செல்வி என்று நீளும் இப்பட்டியலில் மற்றொரு பிரமுகரும் இருக்கிறார், ஆனால் அவர் மாவட்ட தி.மு.க.நிர்வாகிகளிடம் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை, எனவே சுயேட்சையாக போட்டியிடலாம் என்று தெரிய வருகிறது, எனினும் இச்செய்தி அவர் தரப்பு ஆதரவாளர்களால் மறுக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது போட்டி இடுவார் என்று தெரிய வருகிறது. பா.ம.க சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக தெரிய வருகிறது. சுயேட்சையாகவும் ஓரிருவர் போட்டி இடலாம்.
வார்டுகளை பொறுத்த வரையில் மிகுந்த பரப்பரப்பான தருணங்களாகவே நிமிடங்கள் நகர்கிறது. குறிப்பாக நகுதா மரைக்காயர் தெரு, கோட்டாத்தாங்கரை தெரு தில்லி சாஹிப் தர்கா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 5-வது வார்டில் பலர் போட்டியிட விரும்புவதால் இந்த வார்டு நகரில் பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
தி.மு.க.சார்பில் போட்டியிட 1-வது வார்டில் H.அஜீஸ் அஹமது, U.ஹபீபுர் ரஹ்மான், 2-வது வார்டில் பஷிரியாமா ஜாபர், உம்மா சல்மா, 4-வது வார்டில் செழியன், 5-வது வார்டில் ஜாபர் ஷெரீப், M.G.M.ஹாஜா கமால், 6-வது வார்டில் ஜம்ஷீத் பீவி, 7-வது வார்டில் காண்டீபன், அஹமது, 8-வது வார்டில் கோவிந்தராஜ், காண்டீபன், 9-வது வார்டில் ஜுனைதா, கவுசுன்னிசா, 10-வது வார்டில் பாத்திமா ஹபீபுல்லாஹ், 11-வது வார்டில் அஜீதுத்தீன், S.O.செய்யது ஆஃரிப், H.இப்ராஹீம் ஆகியோர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் H.செய்யது அலி 1-வது வார்டில் போட்டியிடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இதுப்போன்ற உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் ஆர்வம் காட்டாத நிலை இருந்ததால் பெரும்பாலான வார்டுகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர், பின்னர் நிலைமை மெல்ல மாற்றம் அடைந்து ஓரிவருர் என்ற வகையில் தொடர்ந்து, இப்போது பலர் தேர்தல்களில் போட்டியிட ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ உள்ளாட்சி மக்களுக்கு நன்மை தரும் நல்லாட்சியாக அமையட்டும்.
http://www.mypno.com/
நன்றி 

26 பிப்., 2011

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 26, 2011 No comments

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் வருவதையொட்டி, அதிமுக, திமுக உள்ளிட் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வருகி்ன்றன. இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை, முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனை சந்தித்துப் பேசினார். சந்தி்ப்பிற்கு பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த காதர் மொய்தீன் கூறியதாவது, வெற்றிக்கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கூ்டடணி வெற்றிக்கு பாடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார். 

29 டிச., 2010

ஜனவரி 10ல் வாக்காளர் இறுதிப் பட்டியல்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், டிசம்பர் 29, 2010 No comments




வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
1.1.2011ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத்திருத்தம் 25.10.2010 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத்திருத்தம், 2011ன் இறுதிப் பட்டியல்கள் 05.01.2011 அன்று வெளியிடப்படுவதாக இருந்தன.
எனினும், சமீபத்தில் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் பாதிக்கப்பட்டதால் இந்திய தேர்தல் ஆணையம் இறுதிப்பட்டியல்கள் வெளியிடும் தேதியினை தற்போது மாற்றியமைத்துள்ளது. இறுதிப் பட்டியல்கள் 10.01.2011 அன்று வெளியிடப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

16 நவ., 2010

வாக்காளர் சேர்ப்பு முகாம்...

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், நவம்பர் 16, 2010 No comments


பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து இடங்களில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் வாக்காளர் சேர்க்கும் பணி மாவட்ட முழுவதும் பல கட்டங்களாக நடத்தப் பட்டது. புதிய வாக்காளரை சேர்க்க ரேஷன் அட்டை, வயதுக்கான சான்றிதழ் உள்ளிட்ட பல விதிமுறைகள் இருந்ததால் பெரும்பாலானோரின் மனு நிராகரிக் கப்பட்டது. இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்மத்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி, சலங்காரத்தெரு தொடக்கப் பள்ளி, தேசிய தொடக்கப்பள்ளி, நெடுஞ்சாலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.

முகாமில் ரேஷன் அட் டைக்கு பதில் வி.ஏ.ஓ., சான்றிதழ், வயது சான்றிதழுக்கு தந்தை அல்லது தாய் ஒப்புதல் கடிதம் கொடுத் தால் போதும் என விதிமுறைகள் தளர்த்தப் பட்டதால் நேற்று ஏராளமானோர் புதிய வாக்கா ளர்களாக சேர்க்கப் பட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் செழியன், வி.ஏ.ஓ., ராஜாராமன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். நடுவீரப்பட்டு: பண் ருட்டி அடுத்த சி.என். பாளையம் கடைவீதியில் உள்ள நடுநிலைப்பள்ளி மையத்தில் போதிய விண் ணப்பங்கள் இல்லாததால் பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் ஜெராக்ஸ் எடுத்து வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர்.


நன்றி ; தினமலர்