2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் தயாநிதி மாறனுக்கும் பங்கு உண்டு என்று சி.பி.ஐ., நேற்று அம்பலப்படுத்தியது.
ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு விண்ணப்பித்த போது தயாநிதிமாறன் சுமார் 2 ஆண்டுகளாக உரிமம் கொடுக்காமல் இழுத் தடித்தார். இதையடுத்து சிவசங்கரன் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு விற்றார். தயாநிதிமாறன் மிரட்டியதால் தனது நிறுவன பங்குகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக சமீபத்தில் சி.பி.ஐ.யிடம் சிவசங்கரன் வாக்கு மூலம் அளித்தார்.
இந்நிலையில் பிரதமர் தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி மாறன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் தயாநிதியை பதிவி விலகும்படி பிரதமர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.