ஷரியத் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுவரும் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது, ஆர்டிஓ ரேவதி மற்றும் சமூக நலத்துறை அலுவலர் பேச்சியம்மாள் ஆகியோரை கன்டித்து அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 17.07.12 அன்று மதியம் 3.00 அளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் எதிரிலுள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஹைதர் அலி - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இஸ்மாயில் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பாக்கர் - இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆகியோர் உள்பட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம் பாக்கர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஷரியத் சட்டத்தை காக்க முஸ்லிம்கள் எதையும் செய்வார்கள், தேவையென்றால் ராணுவத்தினர் போன்றும் செயல்படுவார்கள் என்று அரசு அதிகாரிகளை எச்சரித்தார். தமுமுக தலைவர் ஹைதர் அலி பேசும்போது சுப்ரீம் கோர்டே கூறிவிட்டது முஸ்லிம்களின் திருமண வயது 15 என்று அதனால் முஸ்லிம்கள் யாரும் 15 வயதிற்கு மேற்பட்டோர்களின் திருமணத்திற்காக பயப்படவேண்டாம். உங்களுக்கு பயமிருந்தால் இந்த கூட்டமைப்பை அழையுங்கள் எங்கள் சார்பாக 15வயது முதல் 18வயது வரை உள்ள முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்றார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் :
1.ஷரியத் சட்டத்திற்கு எதிராக எந்த அதிகாரிகள் செயல்பட்டாலும் இந்த கூட்டமைப்பு அந்த அநீதிக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும்.
2.முஸ்லிம்களுக்கான தணிஇடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
3.காப்பத்திலுள்ள மணப்பெண் யுரேஷா பேகம் மற்றும் சிறையிலுள்ள மணமகன் சாகுல் ஹமீது ஆகியோரை உடணடியாக விடுவிக்க வேண்டும்.
4. 15-18 வயது வரை யாருக்கேனும் திருமணம் செய்யவேண்டுமானால் இந்த கூட்டமைப்பின் தலைமையிலேயே திருமணம் நடத்தி வைக்கிறோம்.
ஆகிய கோரிக்கைகள் விடுக்கபட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர்,அரியலூர்,திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை,மதுரை,திருச்சி,சேலம்,கடலூர்-பன்ருட்டி, வேலூர், லால்பேட்டை மாவட்ட இஸ்லாமியர்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கூடினார்கள். பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கூடி ஆர்ப்பாட்டம் செய்வது பெரம்பலூருக்கு இதுவே முதல்முறை என்பதால் பெரம்பலூர் பேருந்து நிலைய பகுதியே பரபரப்பாகவும் போர்க்களம் போன்றும் காட்சியளித்தது. சுமார் மாலை 5.30 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைத்து பகுதி மக்களுக்கும் குறிப்பாக கட்சி மற்றும் அமைப்பை சார்ந்தவர்களுக்கும் கூட்டமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி:http://www.vkalathur.net/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக