ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

30 ஆக., 2012

செய்தி-63

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், ஆகஸ்ட் 30, 2012 No comments


“166 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு” இதுதினமலரின் இன்றைய சுவரோட்டி வாசகம். இதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியில் “மும்பையை உலுக்கிய கசாப்புக்கு தூக்குத் தண்டனை உறுதி”என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பதோடு, தண்டனையை வரவேற்று பா.ஜ.க மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்கள் கூறியிருப்பதை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதாவது தேசத்தின் ஒட்டு மொத்த கருத்தாம் இது.
நடுப்பக்கத்தில் கசாப்பை தூக்குக்கயிறோடு படமாக போட்டிருக்கும் தினமலர் இந்த வழக்கு வந்த பாதையை காலக் குறிப்போடு விளக்கமாக போட்டிருக்கிறது. கசாப் தூக்கு என்பது மேலோட்டமாக செய்தியாக மட்டுமல்லாமல் ஒரு ஆவணம் போன்று வாசகர் மனதில் பதிய வேண்டும் என்பது தினமலரின் அவா. அநேகமாக இன்றைய தினசரிகள் பல பெரும்பான்மை இப்படித்தான் வெளியிட்டிருக்கின்றன.
முதல் பக்க கசாப் செய்திக்கு மேலே வேளாங்கண்ணி கொடியேற்று விழாவை போட்டிருப்பதன் மூலம் தினமலர் தனது சர்வமத நேயத்தை வெளிப்படுத்துவதாக காட்டுகிறது. ஆனால் அது பொய் என்பதற்கு அது முன்னிலைப்படுத்தாமல் விட்ட ஒரு செய்தி உண்டு. கசாப்புக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கிய தினமலர் குஜராத் கலவரம் குறித்த நரோடா பாட்டியா கொலை வழக்கு தீர்ப்பை 13 ஆம் பக்கத்தில் காலரை பக்க செய்தியாக பத்தோடு ஒன்றாக வெளியிட்டிருக்கிறது.
தலைப்பு என்ன தெரியுமா? “மாஜி அமைச்சர் உட்பட 32 பேர் குற்றவாளிகள்”. கசாப் செய்தி பாணியில் வெளியிடுவதாக இருந்தால், “97 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்புத் தீர்ப்பு”என்றல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்? கசாப் மீதான தீர்ப்புக்கு முழு இந்தியாவுமே வரவேற்பதாக காட்டிய தினமலர் இந்த செய்தியில் தீர்ப்பை வரவேற்பதாக யாருடைய கருத்தையும் சொல்லவில்லை. ஏனெனில் தினமலருக்கே கூட இந்த தீர்ப்பு பிடிக்கவில்லை எனும் போது என்ன செய்ய முடியும்?
கசாப்புக்கு தூக்குக்கயிறு போட்ட படத்தை போட்ட தினமலர் இங்கு குடும்பப் பெண் போன்ற அடக்கத்துடன் சோகமாக நடக்கும் கோட்னானி படத்தை வெளியிட்டிருக்கிறது. நரோடா பாட்டியாவில் கொல்லப்பட்ட ஒருவரது படம் கூடவா தினமலரிடம் இல்லை? மற்றபடி இந்த தீர்ப்பினால் பா.ஜ.க, மோடிக்கு பின்னடைவாகவெல்லாம் தினமலர் நினைக்கவில்லை. அதனால் இந்தச் செய்தியில் அந்த இதழின் கருத்தாக ஒன்றுமில்லை.
இணையத்தில் தினமலரின் தலைப்பு என்ன தெரியுமா? ” பயங்கரவாதி ‘ கசாப் ’ கடைக்கு போகிறார்; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உறுதி செய்தனர் !“  இதே போன்று பாபு பஜ்ரங்கிக்கும் தலைப்பு கொடுப்பார்களா? பொதுவில் கசாப்பு கடை யார் வைத்திருப்பார்கள்? தினமலரின் கொண்டாட்டத்தை இதை விட சிறப்பாக எந்த தலைப்பும் கொடுத்துவிடாது.
தூக்குக் கயிற்றில் தொங்கும் கசாப்பின் படத்தோடு “கசாப் தூக்கு தண்டனை உறுதி” என்று தலைப்புச் செய்தியாக தினமணியும் வெளியிட்டிருக்கிறது. இங்கும் வழக்கு கடந்து வந்த பாதை, தீர்ப்பை வரவேற்ற தலைவர்களின் கருத்து எல்லாம் உண்டு. ஆனாலும் தினமணி ‘நடுநிலை’ பத்திரிகையாக காட்டிக் கொள்ள வேண்டுமென்பதால் முதல் பக்கத்தின் கீழேயே நரோடா பாட்டியா வழக்கு தீர்ப்பு குறித்த செய்தியும் வெளிவந்திருக்கிறது.
“கரசேவகர்கள்” கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரம் என்று ‘வரலாற்றை’ கவனமாக ஆரம்பிக்கிறது தினமணி. வி.இ.பரிஷத் நடத்திய பந்தில் ஒரு கும்பல் நடத்திய வன்முறையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக எச்சரிக்கையாக தெரிவிக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்று இரு காங்கிரசு தலைவர்கள் கூறியதை வெளியிட்டிருக்கும் தினமணி, பா.ஜ.கவிற்கு இது பின்னடைவாக இருக்குமென்று கருதப்படுவதாக கூறுகிறது. யார் அப்படி பின்னடைவு என்று கருதுகிறார்கள்? நிச்சயம் தினமணி இல்லை என்பதால்தான் அந்த படுகிறது எனும் அனாமதேய முகம்.
இதெல்லாம் கூடப் பரவாயில்லை. இந்தச் செய்திக்கு தினமணி போட்டிருக்கும் படம் என்ன தெரியுமா? “நரோடா பாட்டியா கலவர வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, தன் மகளைக் கண்டு கண்கலங்குகிறார்” என்ற வரிகளுடன் ஒரு படம். போலீசு வாகனக் கம்பி வலைக்குள்ளே அழுதுகொண்டிருக்கும் தந்தை; கம்பியை எட்டிப்பிடித்தபடி அப்பாவைப் பார்த்துக் கலங்கும் ஒரு சிறுமி. நரோடா பாட்டியாவில் 97 முசுலீம்கள் கொல்லப்பட்ட கொடுமையை மறக்கச் செய்ய இந்த படம் ஒன்றே போதும்.
பார்ப்பவர்கள் அந்த சிறுமியின் கதறலில் இந்து தர்மத்திற்காக சிறைக்குச் செல்லும் அந்த ‘தியாகி’யை நினைத்து வருந்துவது உறுதி.
பஜ்ரங் தள் தலைவரலான பாபு பஜ்ரங்கி சிறைக்குச் செல்லும் போது தனது கட்டை விரலை உயர்த்தி இறுமாப்புடன் செல்கிறார். இன்னும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், முக்கியமாக தேசத்தின் மனசாட்சி, தினமணி, தினமலர் போன்ற ஊடகங்களின் காவி ஆதரவு….. எல்லாம் இருக்கையில் அவர் ஏன் வருந்த வேண்டும்?
கசாப்புக்கு தண்டனை அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கசாப்பின் நிழலில் ஒரு கொலைவெறிக் கூட்டம் அனைவரது ஆதரவோடு பதுங்கிக் கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறோம். தினமணி , தினமலரும் அந்தக்கூட்டத்தில் இருப்பது எத்தனை பெருக்குத் தெரியும்?



நன்றி;http://www.vinavu.com

ரத்தம் குடிக்கும் புத்தம்!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், ஆகஸ்ட் 30, 2012 No comments


புத்தத்தை பூசிக்கும் தேசங்கள் ரத்தங்களையும் குடிக்கின்றன என்றால் அக்குருதியின்   பிரதிபலிப்பு சிங்களத்தையும் பர்மியத்தையும் நோக்கியதாக தான் இருக்கும்.சிங்களம்  இனத்தின் பேரால் மனிதனை புதைக்கிறது என்றால், பர்மியமோ மதத்தின் பேரால்  மனிதத்தை உடைத்து படுகொலைகளை புரிகிறது.

இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகளால் கொல்லப்படுகின்றனர்,பர்மாவில் வாழ வந்த  முஸ்லிம்கள் பர்மிய ராணுவம்-புத்த பிக்குகளால் கொல்லப்படுகின்றனர்.இரு நாட்டிலும்  பௌத்த வெறி ஓங்கி உள்ளது. அது தன் தாக்கும் விதத்தை மட்டும் இனம்-மதம் என  பிரித்துக்கொண்டுள்ளது.

கடவுள் இல்லை என்ற புத்தனை கடவுளாக்கி, அதை ஓர் மதமாக்கி, அதன் பெயரில்  ஏன் தான் இவ்வளவு படுகொலைகளோ ?
உலகின் கறுப்புச் சரித்திரத்தில் கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும்,  மதக்கோட்பாட்டால் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய படுகொலைகளின் பூர்வீகம் தான்  பர்மா.

பர்மா ராணுவ ஜனநாயகவாதிகளால் ஆளப்படும் நாடு...தேசியமயமாக்கப்பட்ட நதிகள்.  அதனால் இயற்கையில் வறுமை என்பதே இல்லை.தொழில்நுட்பத்தில் பின்தங்கிய  தேசம்.இந்தியாவை போலவே பல மொழி பேசும் இனத்தவர் உள்ள நாடு.ஆனால்  அம்மக்களுக்கென சுயாட்சி இல்லை; பர்மியர்களுக்கு கீழ் நிலையில் இருக்கும் கூட்டாட்சி  நிலை தான்.
சூகியே குரல் எழுப்புவதில்லை 

இவர்களின் கோட்பாடும்,வேற்றுமைக்குள் ஒற்றுமை தான்.ஆனாலும் சர்வதேச அளவில்  பின்னோக்கியுள்ள நாடுதான் அன்றைய பர்மாவும், இன்றைய மியான்மரும். பர்மா  என்றால் நமக்கு தெரிவதெல்லாம் 'ஆங் சாங் சூகி'மட்டுமே.அந்த சூகியே மாற்று  மத-இனத்தவர்களின் படுகொலைகளுக்கு பெரிதாக குரல் எழுப்புவதில்லை என்கிறபோதே  சூகியின் ஜனநாயக தத்துவம் பொய்பிக்கிறது.

சூகி பர்மிய இனத்துக்கு நல்ல தலைவர்; ஆனால் பர்மியத்தின் அனைத்து இனத்தவருக்கும்  நல்ல தலைவரல்ல...அப்படியிருந்தும் சூகியை நம்புகிறார்கள் வதைபடும் அம்மக்கள்.

பர்மாவின் இப்படுகொலைகளில் அதிகபடியாக சிக்குவதெல்லாம் முஸ்லிம் மதத்தவர்கள்  தான்.இன்றைய காலக்கட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக முஸ்லிம்  மதத்தவர்களுக்கு எதிரான படுகொலைகளே பர்மாவில்  விடாமல் நிகழ்ந்து   கொண்டேயுள்ளன.
முகமறியா  எந்தயொரு தேசத்திலோ குண்டு வெடித்தால் கூட, அது முஸ்லிம்தான்  வைத்திருப்பான் என்பதே சர்வதேச கணக்கீடுகள்.அக்கணக்கீடை இவ்வுலகம் நிர்ணயித்துக்  கொண்டதால், எந்தயொரு முஸ்லிம் கொல்லப்பட்டாலும் சர்வதேச சமூகம்  அலட்டிக்கொள்வதில்லை.

பர்மிய சுதந்திரத்துக்கு முன்பே, இரண்டாம் உலகப்போரின் ஜப்பானிய  ஆக்கிரமிப்பின்போது பர்மிய-ஜப்பானிய ராணுவத்தால் 28 மார்ச்  1942 ம் ஆண்டு சுமார்  5,000 முஸ்லிம் மக்கள்  கொல்லப்பட்டனர்.
அன்றிலிருந்து தொடங்கிய வெறி இதுவரை 20,000 முஸ்லிம்களை கொன்றுள்ளது;  4,000 குடும்பங்களை அழித்தும், எரித்துமுள்ளது;300 மசூதிகளை மூடியுள்ளது;பல  லட்சம் மக்களை பர்மாவை விட்டு துரத்தியடித்துள்ளது.

பர்மிய முஸ்லிம்கள் 'ரோஹிங்க்யாஸ்' என்றழைக்கப்படுகின்றனர்.ஐ.நா.வின்  கணக்கெடுப்புபடி இவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சம்.இவர்கள் அதிகபடியாக  பங்களாதேஷ்-பர்மா எல்லையோரங்களில் வாழ்கின்றனர்.பல நூறாண்டுகளாக வாழும்  இந்த பர்மிய முஸ்லிம்களுக்கு பர்மாவில் குடியுரிமை கிடையாது.தங்கள் விருப்பத்திற்கு  திருமணம் செய்ய அனுமதியில்லை,கல்வியும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.
கொலைகார புத்த பிக்குகள்
இவர்களது குழந்தைகள் கொத்தடிமைகளை போல் சிறு ஊதியத்துக்கு குழந்தை  தொழிலாளிகளாக்கப்படுகின்றனர்.பர்மாவில் பல்லாண்டுகளுக்கு குடியேறிய இவர்கள்  இன்னமும் அகதியாக தான் வாழ்கின்றனர்.சுற்றுலா சொர்க்கமாகவுள்ள இந்நாடு,  முஸ்லிம் சுற்றுலாவாசிகளை அனுமதிக்க மறுக்கிறது;மீறினால் அது கொலை  சுற்றுலாவாகத்தான் முடியும்.

இக்கொலைகளை நிகழ்த்துவது எல்லாம் பர்மிய ராணுவமும், புத்த பிக்குகளுமே. இவர்கள்  கூற்றுபடி பர்மா புத்த மதத்தவர்களுக்கானது,புத்தத்தை தழுவாதவர்கள் தீயவர்கள்  ...கடவுள் இல்லை என்றால் அவர்கள் புத்த மதத்துக்கு எதிரானவர்கள்.இங்கு புத்த  மதத்துக்கு  அடுத்தப்படியாக மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது இந்து  மதத்தவர்கள்.ஆனால் இந்து கோவில்களிலும் கூட ஒரு புத்த சிலை இருக்குமாம்.  அப்படியிருந்தால் தாக்க வரும் பர்மிய ராணுவமோ-புத்த பிக்குகளோ 'நம் மதத்தின்  மீது  பற்றோடு இருக்கிறார்கள்' என திரும்பி சென்றுவிடுவார்களாம்.

ஆனால் பர்மிய முஸ்லிம்களோ ஓர் பாவ பிறவிகளாக, அப்பாவிகளாக  வதைப்படுகின்றனர்.இது போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து சில முஸ்லிம் போராளி  குழுக்களும் உள்ளன.இவர்களை பார்த்த இடத்தில் கொல்லலாம் என்று அறிவிப்பும்  உள்ளது.ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் எவரையும் ராணுவ ஜனநாயகம்  அனுமதிப்பதில்லை.

பர்மாவில் 20 லட்சத்திற்கும் மேலாக உள்ள தமிழர்களுக்கும் சுயமான சுதந்திர  வாழ்வில்லை-அவர்களும் புத்தத்துக்கு மாறிய பர்மியர்களாகவே வேடமிட்டு  வாழ்கின்றனர்.

புத்தனை போதிக்கும் தேசங்கள்  மனிதத்தை புதைத்து ரத்த வெறியோடு  திரிகின்றன.இவர்களுக்கு புத்தரின் வாக்கு ஏற்றதாக இருக்கும் "ஆசையால் வெற்றி  பெற்றவன் அந்தப் போதையால் தவறுகள் செய்து அழிவைத் தேடுவான்.ஆனால்  தன்னடக்கம் உள்ள மனிதன் அறிவுடன் சிந்தித்து எப்போதுமே இன்பமாக  வாழ்ந்திடுவான்"!

சில புத்த தேசங்கள் சிந்திக்காமல் ஆசை போதையில் உள்ளன;இவர்கள் ஒரு நாள்  அவர்களாகவே அழிவை தேடுவார்கள்..புத்தரின் வாக்கு போலவே !

                                                                              நியூஸ்விகடன்                                                    நன்றி;         -மகா.தமிழ்ப் பிரபாகரன்

26 ஆக., 2012

புதுச்சத்திரம் அருகே நேற்று காலை எல்.கே.ஜி. மாணவி கார் மோதி மரணம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012 No comments


கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் (விவசாயி). இவரது மகள் செவ்விழி (வயது 4). பரங்கிப்பேட்டை அருகே மடவாபள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வந்தாள். இன்று காலை 8 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக ஆலப்பாக்கத்தில் பள்ளி வேனுக்காக மற்ற மாணவிகளுடன் காத்து நின்றாள்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் நிலை தடுமாறி தாறுமாறாக ரோட்டில் ஓடியது. அதைப்பார்த்து மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓடினார்கள். ஆனால் மாணவி செவ்விழி மீது அந்த கார் மோதியது. இதில் அவள் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தது . உடனே கார் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது. செவ்விழி இறந்த தகவல் அறிந்து அவளது பெற்றோர் அங்கு விரைந்து வந்தனர். பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மகள் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.

இது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் பற்றி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் பிணம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதார்கள். அப்போது சிறுமியின் தலை அசைந்ததாகவும் அவள் உயிரோடு இருக்கிறாள் பரிசோதிக்க வேண்டும் என்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறுமியை காப்பாற்று... காப்பாற்று... என்று இறைவனிடம் வேண்டினார்கள். உடனே அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள்  சிறுமியின் உடலை பரிசோதனை செய்தனர். சிறுமி இறந்து விட்டாள் என்று உறவினர்களிடம் நர்சுகள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வேதனையோடு பிணவறையை விட்டு வெளியே சென்று கண்ணீர் விட்டு கதறினார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி மீது மோதிவிட்டு சென்ற காரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.