ஹம்துன் அஷ்ரப்

30 அக்., 2012

விடாத மழை...பரங்கிப்பேட்டையில்

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், அக்டோபர் 30, 2012 No comments



சென்னைக்கு தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயல் சின்னமாக மாறும் என்றும், இதனால் கன மழை பெய்யும் என்பதாலும்,சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடலூர் உட்பட பல மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து சென்றதால் நாகப்பட்டினம்,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.


இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையானது, நேற்று அதிகாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரங்கிப்பேட்டையில் நேற்று இரவில்லிருந்து விடாமல் மழைபெய்துவருகிறது தெருக்கள்தோரும் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது











.

0 கருத்துகள்: