சவுதி அரேபியா கிழக்கு மாகணத்தில் அல்ஹஸா – தம்மாம் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள அப்கைக் அருகில் உள்ள அயின்தார் கிராமத்தில் செவ்வாய்கிழமை அன்று மாலை திருமண நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போதுஎதிர்பாராதவிதமாக மண்டபத்திற்குள் சென்ற உயர் அழுத்த மின்சார வயர் கிழே விழுந்து தீப்பொறி ஏற்பட்டது.
அந்த மின்சார வயர் திருமண மண்டபத்தின் வாயிலில் உள்ள ஒரு இரும்பு கதவின் மீது விழுந்துள்ளது. அருகில் நின்றவர்கள் அந்த கதவைத் தொட்டதும் பட்டாசுவெடித்தது போன்று படபடவென சத்தம் எழுந்தது. இதில் கதவு வழியாக மின்சாரம் பாய்ந்ததால் பலர் இறந்தது தெரியவந்துள்ளது.
இதில் 5 குழந்தைகள் உள்பட27 பேர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளனர். படுகாயமடைந்த 37-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று தெரிய வருகிறது.
புகைப்படம்mypno
0 கருத்துகள்:
கருத்துரையிடுக