ஹம்துன் அஷ்ரப்

29 ஜன., 2009

மழையிடம் தான் கேட்கவேண்டும்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், ஜனவரி 29, 2009 No comments

பெரிய தெரு முனையிலிருந்து-பி.முட்லூர் வரை வாகனங்களில் செல்வோரிலிருந்து நடைப்பயணம் செல்பவர்வரை அனைவரையும் பாடாய் படுத்திவந்த சாலை பல மாதங்களாக கண்டுக்கொள்ளப்படாமல் உற்றார்-உறவினர்கள் இல்லாதவர் போன்று தான் காட்சியளித்தது இதனையடுத்து இந்த சாலைகளின் அவல நிலையைப்பற்றி

சமீபத்தில் ஒரு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதன் எதிரொலியாக விழித்துக்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அவசர அவசரமாக சாலைப்போடும் பணியை துவக்கி இரண்டொரு தினங்களில் சாலை போடும் பணியை முடிவுக்கு கொண்டுவந்தது


பார்பதற்க்கு நன்றாக காட்சியளிக்கும் சாலைகளின் தரம் எப்படி ? மழையிடம் தான் கேட்கவேண்டும்.
ரோடுதான் போட்டாச்சே என பைக்குகளில் மின்னலாய் பறக்கும் ரேஸ் பிரியர்கள் அதி வேகத்துடன் செல்லாமல் தேவையான வேகத்துடன் சேர்ந்து விவேகத்துடன் செல்வது அனைவருக்கும் நல்லது.


0 கருத்துகள்: