ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

31 மே, 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், மே 31, 2011 No comments


தெசன் தைக்கால் தெருவில் மர்ஹும் முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் ஹசன் முஹம்மது அவர்களின் மருமகனாரும், முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் தகப்பனாருமான முஹம்மது யூசுப் மரைக்காயர்மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று செவ்வாய்கிழமை (31-05-2011) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், மே 31, 2011 No comments


காஜியார் தெருவில் வசித்து வந்த , மர்ஹூம் அப்துல் காதர் சாஹிப் அவர்களின் மகனாரும் மர்ஹூம் முஹம்மது யூசுப் மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் அமீர் அலி சாஹிப் மற்றும் ஷம்சுதீன் சாஹிப் ஆகியோர்களின் சகோதரரும், அப்துல் காதர், வஜ்ஹுதீன் ஆகியோர்களின் பெரிய தகப்பனாரும், முஹம்மது சாதிக், அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய உபைதுல்லாஹ் சாஹிப் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். நேற்று திங்கள்கிழமை (30-05-2011) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மீரா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

23 மே, 2011

தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், மே 23, 2011 No comments




பெரம்பலூர் அருகே அருகே பாடாலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) பலியானார். இவரது உடலுக்கு முதல்வர் ஜெ., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில் அமைச்சர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதனால் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் முதல்வர் ஜெ., கூறினார்.
தமிழக சட்டசபையில் இன்று அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் நேரத்தில் சட்டசபைக்கு புறப்பட்டு சென்ற அமைச்சர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அ.தி.மு.க.,வினர் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னைக்கு இனோவா காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது. பாடாலூர் பிரிவு அருகே, முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியது குறித்து பின்னால் சென்ற அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இவரும் இந்த வழியே சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.


மோதிய லாரி எங்கே ? தப்பி ஓடிய லாரியை தேடும் பணி தீவிரம் : திருச்சியில் இருந்து கிளம்பி காலை 7 மணிக்கு பெரம்பலூர் (இங்கிருந்து 15 .கி.மீட்டர் தொலைவில் ) திருநாயக்குறிச்சி பிரிவு ரோட்டில் பாடாலூர் அருகே எஸ்கார்டு சென்ற கார் முன்னே வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நேரத்தில் இந்த வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரிமீது ‌மோதியது. இதில் காரில் இடது புறம் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அமைச்சர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அருகில் இருந்த டிரைவர் ஆனந்த், உதவியாளர் ஒருவர் லேசான காயமுற்றனர். அமைச்சர் காரை காணவில்லையே என திரும்பி வந்த எஸ்கார்டு் போலீசார் அமைச்சர் விபத்தில் சிக்கியதை கண்டு அதிர்ச்சியுற்றனர். விபத்திற்கு காரணமான் லாரி தப்பி ஓடி விட்டது. லாரியை முந்தும்போது விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. லாரி குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் கிடைக்கவில்லை. லாரியை பிடிக்க அருகில் உள்ள மாவட்ட எல்லை முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பலியான அமைச்சர் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லலப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் இவரது மரியம் தியேட்டரில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

திருச்சியில் கடைகள் அடைப்பு : அமைச்சர் பலியானதை அடுத்து திருச்சியின் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களுக்கு ‌செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பி.ஏ., (வரலாறு) பட்டதாரியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக நின்று முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தார்.. திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு, பாத்திமா கனி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் 3 மகன்களும் உள்ளனர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த இவர் திருச்சியில் ஒரு திரையரங்கும் நடத்தி வந்தார்.

நன்றி:
தினமலர்

19 மே, 2011

I .P.S. அதிகாரிகள் மாற்றம்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மே 19, 2011 No comments


.பி.எஸ்அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்துஉள்துறைமுதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்ட உத்தரவு: (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்.)  சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  

திமுக அரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த .பி.எஸ்அதிகாரி ஜாபர் சேட்மண்டபம்அகதிகள் முகாமின் சிறப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 எஸ்.ஜார்ஜ் - சட்டம்-ஒழுங்கு .டி.ஜி.பி., - (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் .டி.ஜி.பி.,)

 .ஜி.பொன் மாணிக்கவேல் ரயில்வே டி..ஜி., - (விழுப்புரம் சரக டி..ஜி.,)

 அஸ்வின் எம்.கோட்னீஸ் - புளியந்தோப்பு துணை ஆணையர் (கடலூர் மாவட்ட  எஸ்.பி.,).

source : mypno

16 மே, 2011

முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், மே 16, 2011 No comments


சென்னை,மே 16:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா  தமிழக முதலமைச்சராக 3வது முறையாக இன்று நண்பகலில் பொறுப்பேற்றார்.
.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற எழுச்சி மிகு விழாவில் தமிழக கவர்னர் எஸ்.எஸ். பர்னாலா அவருக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட 33 அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியேற்றனர். 

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது தொடர்ந்து ஜெயலலிதாவை புதிய முதல்வராக பதவியேற்க வருமாறு தமிழக கவர்னர் பர்னாலா அவருக்கு அழைப்பு விடுத்தார்.  33 அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா கவர்னரிடம் கொடுத்தார். இன்று காலை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நண்பகல் 12 மணிக்கு பிறகு போயஸ் கார்டனிலிருந்து புறப்பட்டு  மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு 12.25 மணிக்கு வந்தார்.

இருபுறமும் அதிமுக தொண்டர்களும் பொது மக்களும் குழுமியிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  ஜெயலலிதா நேராக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்தார்.  சரியாக 12.40 மணிக்கு தமிழக கவர்னர் பர்னாலா பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு வந்தார். அவரை தலைமைச் செயலாளர் மாலதி  வரவேற்றார்.

விழா மேடைக்கு வந்தபோது ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பவர்களை கவர்னருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஜெயலலிதாவை முதலமைச்சராக பதவியேற்க வருமாறு தலைமைச் செயலாளர் மாலதி  அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மேடைக்கு முன்பு இருந்த மைக் அருகே வந்தார். அவருக்கு தமிழக கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதா ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழி ஏற்றார்.

பதவியேற்ற பின் கவர்னர் மாளிகை குறிப்பேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் அவருக்கு தமிழக கவர்னர் பர்னாலா வாழ்த்து தெரிவித்தார்.  அரங்கத்தில் கூடியிருந்த தலைவர்களும் தொண்டர்களும் பொது மக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர்.  அவர்களுக்கு கவர்னர் பர்னாலா  பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  முதலில் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். பதவியேற்றதும் நேராக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.  இதேபோல மற்ற அமைச்சர்களும் பதவியேற்றதும் முதல்வர் சந்தித்து ஆசி பெற்றனர்.


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா  தமிழக முதலமைச்சராக 3வது முறையாக இன்று நண்பகலில் பொறுப்பேற்றார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற எழுச்சி மிகு விழாவில் தமிழக கவர்னர் எஸ்.எஸ். பர்னாலா அவருக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட 33 அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியேற்றனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது தொடர்ந்து ஜெயலலிதாவை புதிய முதல்வராக பதவியேற்க வருமாறு தமிழக கவர்னர் பர்னாலா அவருக்கு அழைப்பு விடுத்தார்.  33 அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா கவர்னரிடம் கொடுத்தார். இன்று காலை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நண்பகல் 12 மணிக்கு பிறகு போயஸ் கார்டனிலிருந்து புறப்பட்டு  மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு 12.25 மணிக்கு வந்தார்.

இருபுறமும் அதிமுக தொண்டர்களும் பொது மக்களும் குழுமியிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  ஜெயலலிதா நேராக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்தார்.  சரியாக 12.40 மணிக்கு தமிழக கவர்னர் பர்னாலா பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு வந்தார். அவரை தலைமைச் செயலாளர் மாலதி  வரவேற்றார்.

விழா மேடைக்கு வந்தபோது ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பவர்களை கவர்னருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஜெயலலிதாவை முதலமைச்சராக பதவியேற்க வருமாறு தலைமைச் செயலாளர் மாலதி  அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மேடைக்கு முன்பு இருந்த மைக் அருகே வந்தார். அவருக்கு தமிழக கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதா ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழி ஏற்றார்.

பதவியேற்ற பின் கவர்னர் மாளிகை குறிப்பேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் அவருக்கு தமிழக கவர்னர் பர்னாலா வாழ்த்து தெரிவித்தார்.  அரங்கத்தில் கூடியிருந்த தலைவர்களும் தொண்டர்களும் பொது மக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர்.  அவர்களுக்கு கவர்னர் பர்னாலா  பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  முதலில் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். பதவியேற்றதும் நேராக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.  இதேபோல மற்ற அமைச்சர்களும் பதவியேற்றதும் முதல்வர் சந்தித்து ஆசி
பெற்றனர்.


நன்றி;
http://www.maalaisudar.com

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், மே 16, 2011 No comments


சென்னை: தமிழக சட்டசபை அ.தி.மு.க., தலைவராக பொதுசெயலர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கவர்னரரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து கவர்னர் விடுத்த அழைப்பின்பேரில் நாளை ( 16 ம் தேதி ) முதல்வராக பதவியேற்கிறார்.

இதனிடையே, நாளை பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். 

ஜெயலலிதா : முதலமைச்சர்

ஒ பன்னீர்செல்வம் : நிதித்துறை....

செங்கோட்டையன்: விவசாயம்

கே பி முனுசாமி: உள்ளாட்சி துறை

பி தங்கமணி : வருவாய்துறை

நத்தம் விஸ்வநாதன்: மின்சார துறை

வைத்தியலிங்கம் : வீட்டு வசதி துறை

சி வி சண்முகம்: பள்ளி கல்வி துறை

கே வி ராமலிங்கம்: பொதுப்பணித்துறை

கருப்பசாமி : கால்நடைத்துறை

செந்தில் பாலாஜி : போக்குவரத்துத்துறை

சுப்பையா : சட்டத்துறை

வி எஸ் விஜய் : மக்கள் நலவாழ்வுத்துறை

ஆர் பி உதயகுமார் : தகவல் தொழில்நுட்பம்

செல்லூர் ராஜு: கூட்டுறவுத்துறை

மரியம்பிச்சை : சுற்றுசூழல்துறை

சண்முகவேல்:தொழில்துறை

செல்வி ராமஜெயம்: சமுகநலம்

பச்சைமால் : வனத்துறை

சின்னையா : பிற்படுத்த பட்டோர் நலன்


என் சுப்ரமணியன் : ஆதிதிராவிடர் நலன்

கோகுல இந்திரா : வணிக வரித்துறை

பி வி ரமணா : கைத்தறித்துறை

என் ஆர் சிவபதி : விளையாட்டுத்துறை

அக்ரி கிருஸ்ணமூர்த்தி : உணவுத்துறை

பழனியப்பன் : உயர் கல்வி துறை

எஸ் பி சண்முகநாதன் : அறநிலையத்துறை

எம் சி சம்பத் : ஊரக தொழில்துறை

எஸ் பி வேலுமணி : சிறப்பு திட்ட அமலாக்கம்

ஜி செந்தமிழன் : செய்தித்துறை

ஜெயபால் : மீன்வளத்துறை

செல்லபாண்டியன் : தொழிலாளர் நலன்

புத்தி சந்திரன் : சுற்றுலாத்துறை

எடப்பாடி பழனிசாமி : நெடுஞ்சாலை துறை

9 மே, 2011

வத்தக்கரையில் தீ விபத்து

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மே 09, 2011 No comments


 பரங்கிப்பேட்டை: இன்று பகல் சுமார் 12 மணிக்கு வத்தக்கரை என்றழைக்கப்படும் அன்னங்கோயிலில் உள்ள மீன் விற்பனை மற்றும் கிடங்கு வளாகத்தில் திடீரென்று தீ பிடித்தது. அது மளமளவென்று கட்டுக்கடங்காமல் காட்டுத்தீப் போல் வளாகத்தில் உள்ள அனைத்து கிடங்கு மற்றும் விறபனை நிலையத்திற்கும் பரவியது. நகரத்திலிருந்து லைட்ஹவுஸ் பகுதியை வான் நோக்கிப் பார்த்தால் வெறும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது போன்று ஒரு பயங்கர-பிரமாண்ட தீ விபத்தை இதற்கு முன் பரங்கிப்பேட்டையில் நிகழ்ந்திருக்கிறதா என தெரியிவில்லை. கடல்வாழ் உயிரியல் கல்லூரியிலிருந்து கலங்கரை விளக்கம் வரை மக்கள் வழியெங்கும் நின்று கொண்டு வேடிக்கை பாத்தனர்.



தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டும் நிலைமையை கட்டுப்படத்த நேரம் பிடித்தது. பரங்கிப்பேட்டை, சிதம்பரம் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வண்டிகள் கடுமையாக போரடினர். பேரூராட்சித் தலைவர், வட்டாட்சியர், காவல் துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீயணைப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டனர்.


குளிரூட்டிகளில் அடைத்து வைக்கபட்ட பல லட்ச மதிப்பள்ள மீன்கள், ஸ்டோரேஜ்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் மட்டுமின்றி கணக்கிலடங்காத பொருட்கள் தீக்கு இரையாயின. சில கேஸ் சிலிண்டர்களும் வெடித்தன.  இன்னும் இதுவரை சேத மதிப்பீடு தெரியவில்லை.

நன்றி;
mypno blogspot.com

வாழ்த்துக்கள்.....மாணவ-மாணவிகளுக்கு

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், மே 09, 2011 No comments

தமிழகமெங்கும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது,நமதூர் பரங்கிப்பேட்டையில் வழக்கம் போலஇந்த வருடமும் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைபிடித்தனர். பரங்கிப்பேட்டையை பொருத்தவரை முதல் மூன்று இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர். என்பது குறிப்பிடதக்கது
சேவாமந்திர் பள்ளி மாணவி செல்வி. ஷர்மிளா
1125 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்.

கலிமா மெட்ரிக் பள்ளி மாணவி செல்வி. நவீனா
1105 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அரசு மகளிப் பள்ளி மாணவி செல்வி. ஸ்டெல்லா
1075 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.


தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு நமது portonovonews வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது