ஹம்துன் அஷ்ரப்

31 ஜன., 2009

கவிதை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஜனவரி 31, 2009 No comments

மீதமிருக்கும் சொற்கள்



பொங்கித் தணியும்

பூக்கள் நிரம்பிய
கடல்பரப்பில்
நாசிக்கேங்கும் மணம்.
நழுவிக்கொண்டிருக்கிறது இன்று!

முறுக்கப்பட்ட உடல்களிலிருந்து

சொட்டுகிறது நீர்

பாலையிலும் பூக்கின்றன
வெண் மல்லிகைகள்.

வசிக்கும் கனவுகளிலிருந்து

வம்படியாக வெளியேற்றுகிறது

கடன் தீர்க்கக் கோரும் கடிதம்

தூரத்தைக் குறைத்து

பாரத்தைக் கூட்டுகிற

தொலைபேசிகள் அறிவதில்லை

இன்னும் மீதமிருக்கின்றன

பேசப்படாத சொற்கள்.




இப்னு ஹம்துன்.

நன்றி: கீற்று

0 கருத்துகள்: