பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதுமாக தூர்ந்ததால் வெளி மாநிலங் களுக்கு மீன் ஏற்றுமதி செய்வது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அன்னங் கோவிலில் முகத்துவாரம் வழியாக சாமியார் பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, முடசல் ஓடை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அன்னங்கோயில் முகத்துவாரம் முழுவதுமாக தூர்ந்து போயுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்ட லாரிகளில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படு வது வழக்கம். தற்போது முகத்துவாரம் முற்றிலும் தூர்ந்துள்ளதால் மீன்வரத்து குறைந்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடைபட்டுள்ளது. முகத்துவாரத்தை ஆழப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கி டெண்டர் விடப்பட்டும் பணி துவங்க வில்லை. முகத்துவாரம் தூர்வாரும் பணி தாமதப்படுவதால் மீனவர்களே முகத்துவாரத்தை ஆழப்படுத்த முடிவு செய்துள்ளனர் நன்றி : தினமலர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக