கடலூர் மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நெல்பயிரிட்ட நிலையில் வானம்பொய்த்துபோய் சிலநாட்களாக கடுமையாக வாட்டி வதைத்த வெயில் சற்று ஜகா வாங்கி மழைக்கு பாதை அமைத்துக்கொடுத்தது.
இடி மின்னலுடன் தன் வருகையை ஊருக்கு வருகிறேன் என அறிவித்து சிறிது நேரங்கழித்து சொன்னப்படி வந்த மழையார் மாவட்டத்தின் பல்வேறுஇடங்களில் விவசாயிகள் மீது தனது பாசமழையை பொழிந்தார்.
அதிகபட்சமாக சிதம்பரம் அன்னாமலை நகரில் 56மி.மீட்டரும்,அடுத்ததாக நமதூர் பரங்கிப்பேட்டையில் 52மி.மீட்டரும் ,மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழைப்பெய்தது.
இதற்க்கிடையில் கடலூரில் நேற்றுப்பெய்த மழையினால் நாற்பதுஆண்டுகள் பழமையான அண்ணா மார்க்கெட்டில் உள்ள சிமெண்டு கூரை இடிந்துவிழுந்தது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக