சென்னையில் இருந்து திருப்பூருக்கு தனியார் ஆம்னி பஸ் 07-06-2011 இரவு சென்று கொண்டு இருந்தது. வேலூர் மாவட்டம் ஓச்சேரியை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே சற்று முன் சென்ற போது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி 15 அடி பள்ளத்துக்குள் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்து டிரைவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார். பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் தீயில் கருகி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வேலூர் கலெக்டர் நாகராஜ் மற்றும் வேலூர் சரக டிஐஜி ஜெயராம், தீயணைப்புத்துறை வேலூர் சரக துணை இயக்குனர் டேவிட் வின்சென்ட் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக