ஹம்துன் அஷ்ரப்

20 செப்., 2011

யாருக்கு சீட்டு....?

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், செப்டம்பர் 20, 2011 No comments





பரங்கிப்பேட்டை நகரில் அவ்வப்போது சூழும் கார்மேகங்கள் போல் அல்லாமல் கடந்த சில வாரங்களாகவே தேர்தல் மேகமும் சூழ்ந்தபடியே இருக்கிறது. தனித்தனி சந்திப்புகள், ஆலோசனைகள் என்று தொடரும் இச்சூழல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க-வும், தி.மு.க.வும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான விருப்ப மனுவை பெற்று களத்தில் துடிப்புடன் இருக்கிறது. ஆளும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நகர அவைத்தலைவர் மலை.மோகன், நகர செயலாளர் K.மாரிமுத்து, சிறுபான்மை பிரிவு நிர்வாகி H.ஷாஜஹான், புலவர் C.K.சீனிவாசன், ஜெய்சங்கர் ஆகியோர்கள் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
பேரூராட்சி மன்ற தலைவர் போட்டியில் தி.மு.க. சார்பில் தற்போதைய பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி A.R.முனவர் உசேன், நகர தி.மு.க. செயலாளர் J.பாண்டியன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி காண்டீபன், மகளிரணி பொற்செல்வி என்று நீளும் இப்பட்டியலில் மற்றொரு பிரமுகரும் இருக்கிறார், ஆனால் அவர் மாவட்ட தி.மு.க.நிர்வாகிகளிடம் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை, எனவே சுயேட்சையாக போட்டியிடலாம் என்று தெரிய வருகிறது, எனினும் இச்செய்தி அவர் தரப்பு ஆதரவாளர்களால் மறுக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது போட்டி இடுவார் என்று தெரிய வருகிறது. பா.ம.க சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக தெரிய வருகிறது. சுயேட்சையாகவும் ஓரிருவர் போட்டி இடலாம்.
வார்டுகளை பொறுத்த வரையில் மிகுந்த பரப்பரப்பான தருணங்களாகவே நிமிடங்கள் நகர்கிறது. குறிப்பாக நகுதா மரைக்காயர் தெரு, கோட்டாத்தாங்கரை தெரு தில்லி சாஹிப் தர்கா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 5-வது வார்டில் பலர் போட்டியிட விரும்புவதால் இந்த வார்டு நகரில் பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
தி.மு.க.சார்பில் போட்டியிட 1-வது வார்டில் H.அஜீஸ் அஹமது, U.ஹபீபுர் ரஹ்மான், 2-வது வார்டில் பஷிரியாமா ஜாபர், உம்மா சல்மா, 4-வது வார்டில் செழியன், 5-வது வார்டில் ஜாபர் ஷெரீப், M.G.M.ஹாஜா கமால், 6-வது வார்டில் ஜம்ஷீத் பீவி, 7-வது வார்டில் காண்டீபன், அஹமது, 8-வது வார்டில் கோவிந்தராஜ், காண்டீபன், 9-வது வார்டில் ஜுனைதா, கவுசுன்னிசா, 10-வது வார்டில் பாத்திமா ஹபீபுல்லாஹ், 11-வது வார்டில் அஜீதுத்தீன், S.O.செய்யது ஆஃரிப், H.இப்ராஹீம் ஆகியோர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் H.செய்யது அலி 1-வது வார்டில் போட்டியிடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இதுப்போன்ற உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் ஆர்வம் காட்டாத நிலை இருந்ததால் பெரும்பாலான வார்டுகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர், பின்னர் நிலைமை மெல்ல மாற்றம் அடைந்து ஓரிவருர் என்ற வகையில் தொடர்ந்து, இப்போது பலர் தேர்தல்களில் போட்டியிட ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ உள்ளாட்சி மக்களுக்கு நன்மை தரும் நல்லாட்சியாக அமையட்டும்.
http://www.mypno.com/
நன்றி 

0 கருத்துகள்: