வங்க கடலில் உருவாகியுள்ள நீலம் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேதாரண்யம் தொடங்கி திருவள்ளூர் வரை கடலோர மாவட்டங்களில் திங்கள் இரவிலிருந்து கன மழை பெயந்து வருகிறது. கிணறு, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புயல் மற்றும் கன மழையை எதிர்கொள்ளும் வகையில் கடலோர மாவட்டங்களில் மீட்பு பணிக்கு தயார் நிலையில் அரசுஊழியர்கள் உள்ளனர். நமதூர் பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி சார்பில் முன்னேற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக பேரூராட்சி மனற தலைவர் M.S.முஹமமது யூனுஸ் தெரிவித்தார், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சார்பாகவும் ஸாதிமஹால் மற்றும் மினி மஹால் ஆகியவை தயார் நில்லையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு எற்படாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக