மாசி மகம் தீர்த்தவாரியை முன்னிட்டு முட்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இன்று காலை முதல் பரங்கிப்பேட்டை கடற்கரையை நோக்கி மக்கள் வெள்ளம் கரைப்புரண்டது. இத்திருவிழாவில் கலந்துக்கொள்வதற்காக, டெம்போ டிராவலரில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வந்த வாகனம் ஒன்று பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் அருகே கவிழ்ந்தது, இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர், அவர்களை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை செய்தனர்.
அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ வாகனத்தை இயக்க முடியாத சூழ்நிலையில், தகவலறிந்த பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகம் தனது ஆம்புலன்ஸ் வாகனத்தை உடனடியாக அனுப்பி, கவலைக்கிடமான நோயாளிகளை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பேருதவி புரிந்தது. இவ்விபத்தில் காயமடைந்தவர்களை பேரூராட்சி மன்ற தலைவரும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முஹம்மது யூனுஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக