ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

31 அக்., 2010

52 மி.மீ.மழை...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, அக்டோபர் 31, 2010 No comments


கடலூர் மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நெல்பயிரிட்ட நிலையில் வானம்பொய்த்துபோய் சிலநாட்களாக கடுமையாக வாட்டி வதைத்த வெயில் சற்று ஜகா வாங்கி மழைக்கு பாதை அமைத்துக்கொடுத்தது.

இடி மின்னலுடன் தன் வருகையை ஊருக்கு வருகிறேன் என அறிவித்து சிறிது நேரங்கழித்து சொன்னப்படி வந்த மழையார் மாவட்டத்தின் பல்வேறுஇடங்களில் விவசாயிகள் மீது தனது பாசமழையை பொழிந்தார்.

அதிகபட்சமாக சிதம்பரம் அன்னாமலை நகரில் 56மி.மீட்டரும்,அடுத்ததாக நமதூர் பரங்கிப்பேட்டையில் 52மி.மீட்டரும் ,மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழைப்பெய்தது.






இதற்க்கிடையில் கடலூரில் நேற்றுப்பெய்த மழையினால் நாற்பதுஆண்டுகள் பழமையான அண்ணா மார்க்கெட்டில் உள்ள சிமெண்டு கூரை இடிந்துவிழுந்தது.




இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

29 அக்., 2010

கணிணியை குழந்தைகளிடமிருந்து பாதுகாக்க ஒரு இலவச software Toddler Keys

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, அக்டோபர் 29, 2010 No comments

Toddler Keys இந்த சாப்ட்வேர் குழந்தைகளிடமிருந்து கணிணியை பாதுகாக்க பயன்படுகிறது .
இதன் மூலம் CD drive ,Power off button ,keyboard ,mouse போன்றவற்றை lock செய்யமுடியும் இதனால் குழந்தைகள் கணிணியில் உள்ள file /folder போன்றவற்றை delete செய்யமுடியாது .
ஒவ்வொருமுறை கணிணியில் உள்ள keyboard ,mouse பயன்படுத்தும்போது ஒலி எழுப்பும் வகையில் நிறுவலாம் .குறிப்பாக alt+ctrl+del keys பயன்பாடு தவிர்க்கப்படும் .




CD drive குழந்தைகள் அதிகமாக அழுத்தி இதனை திறந்து மூடி விளையாடுவார்கள் இதனையும் இந்த சாப்ட்வேர் மூலம் lock செய்யலாம் .குழந்தைகள் கேம்,movies பார்க்கும்போது அவர்கள் மற்ற file/folder பயன்படுத்த முடியாது .


கீழே உள்ள link click செய்து இலவசமாக download செய்துகொள்ளுங்கள் முற்றிலும் இலவசம் .
இதனை நிறுவியதும் படத்தில் உள்ளதுபோல் ஒரு icon TK எனத்தோன்றும் icon தேர்வுசெய்தால் மேற்கண்டவாறு options காட்டும் நமக்கு வேண்டியவசதியை அமைத்துக்கொள்ளலாம் .Quit என type செய்து பழைய நிலைக்கு கணிணியை கொண்டுவரலாம் .
  • Mouse Lock options:
    • Left mouse button
    • Middle mouse button
    • Right mouse button
    • Double click
    • Mouse wheel
  • Keyboard lock options:
    • Standard character keys (letters, numbers, signs, etc)
    • Additional keys (Navigation keys, function keys, ins/del, home/end, etc)
    • Windows system shortcuts(e.g. alt-tab, win-key, etc)
Size: 450 KB
System: Windows XP, Vista and 7

25 அக்., 2010

அன்னைக்கு..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், அக்டோபர் 25, 2010 No comments

அம்மா
நீ ஒரு
மூன்றெழுத்து
அதிசயம்
எட்டாவது உலக
அதிசயமெல்லாம்
ஏடுகளில் தான்
நீ மனதளவில்.


பந்தர் அலி ஆபிதீன்
பரங்கிப்பேட்டை.
;நன்றி;
http://www.vaarppu.com/

12 அக்., 2010

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், அக்டோபர் 12, 2010 1 comment


கிள்ளை : பரங்கிப்பேட்டை ஒன் றியம் கிள்ளை, தெற்கு பிச்சாவரம் மற்றும் கொத்தங்குடி கருத்தாய்வு மையங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புத்தகங்கள் படித் தல் தலைப்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.



கிள்ளை கருத்தாய்வு மையத்தில் நடந்த முகாமில் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரவேல் தலைமை தாங்கினார். 18 பள்ளிகளைச் சேர்ந்த 41 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் பாலமுருகன் பயிற்சியளித்தார்.தெற்கு பிச்சாவரத்தில் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். 19 பள்ளிகளை சேர்ந்த 39 ஆசிரியர் களுக்கு ஆசிரியர் பயிற்றுனர் பாலமுருகன் பயிற்சியளித்தார். கொத் தங்குடியில் ஒருங்கணைப் பாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். 16 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் பாஸ் கரன் பயிற்சியளித்தார். மேற்பார்வையாளர் சிவசண்முகம் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.

நன்றி : தினமலர்..


9 அக்., 2010

முகத்துவாரம் முழுவதும் தூர்ந்து - ரூ.50 லட்சம் இழப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, அக்டோபர் 09, 2010 No comments


பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதுமாக தூர்ந்ததால் வெளி மாநிலங் களுக்கு மீன் ஏற்றுமதி செய்வது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அன்னங் கோவிலில் முகத்துவாரம் வழியாக சாமியார் பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, முடசல் ஓடை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அன்னங்கோயில் முகத்துவாரம் முழுவதுமாக தூர்ந்து போயுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்ட லாரிகளில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படு வது வழக்கம். தற்போது முகத்துவாரம் முற்றிலும் தூர்ந்துள்ளதால் மீன்வரத்து குறைந்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடைபட்டுள்ளது.

முகத்துவாரத்தை ஆழப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கி டெண்டர் விடப்பட்டும் பணி துவங்க வில்லை. முகத்துவாரம் தூர்வாரும் பணி தாமதப்படுவதால் மீனவர்களே முகத்துவாரத்தை ஆழப்படுத்த முடிவு செய்துள்ளனர்


நன்றி : தினமலர்.