பெண் பயணிகள் மீது தொடரும் பாலியியல் தொந்தரவுகளால் கேரள மாநிலத்தில் கொந்தளிப்பு உருவாகி உள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து சோரனூர் நோக்கிச் சென்ற பயணிகள் தொடர்வண்டியில் சவுமியா (23) என்ற பெண்ணை தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (33) என்பவர் கீழே தள்ளி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும்,வண்டியில் இருந்து கீழே தள்ளப்பட்ட அப்பெண் நான்கு நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார் என்பதும் முன்னர் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது அறிந்ததே.
இதே வரிசையில் மேலும் ஒரு இழிசம்பவமாக,
காசர்கோடு மாவட்டத்தில், அரசு தொழில் நுட்ப பள்ளியில் இளநிலை ஆசிரியையாக பணியாற்றி வரும் செல்ஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மேலும் சில ஆசிரியர்களுடன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டிரேட்ஸ்மேன் பயிற்சிக்காக சென்றிருந்தார். பயிற்சி முடிந்து சக ஆசிரியர்களுடன் ஊருக்குத் திரும்ப திருவனந்தபுரம் - மங்களூர் மாவேலி அதிவேக தொடர் வண்டியில் ஏறினர். அவர்கள் வண்டியில் எஸ்.2. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணித்தனர். அதில் செல்ஜா மேற்படுக்கையில் படுத்துறங்கினார். இரவு 11.30 மணியளவில் அவரிடம் மர்ம நபர் சில்மிஷம் செய்வதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து அலறினார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட சக பயணிகளும், பிற பகுதிகளில் படுத்திருந்த ஆசிரியர்களும் ஓடி வந்து விசாரித்தனர்.
பயணிகள் ஓடி வருவதைக் கண்ட அந்த மர்ம நபர் பெட்டியில் இருந்து தப்பியோடினார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இருப்பினும், பயணிகள் இதுகுறித்து உடன் பயணித்த காவலரிடம் தெரிவித்தனர். காவலரும், பயணிகளும் அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டி கழிவறைக்குள் பதுங்கியிருந்த மர்ம நபரை அவர்கள் பிடித்து விசாரித்தனர். பெண் பயணியும் அவரை அடையாளம் காட்டினார்.அதற்குள் தொடர் வண்டி எர்ணாகுளம் நகர நிலையத்தை வந்தடைந்தது. அங்கு மர்ம நபரை பயணிகள் காவலரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் கீழக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ஆன்டனி சுரேஷ் (23) என்பது தெரிந்தது. அவர் கோழிக்கோடு அருகே வடகரா பகுதியில் மீன்பிடிக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார் என்பதும், வடகராவுக்குச் சென்று கொண்டிருந்தார் என்பதும், முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டு வாங்கி, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி, பெண் பயணியைத் தொந்தரவு செய்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

நன்றி:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக