வரஇருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்று முடிவு செய்த தேமுதிக, பிப்ரவரி 24ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். தேமுதிக தரப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், சுந்தரராஜன், சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதிமுகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. பேச்சுவார்த்தை குறித்த விபரங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த்திடம் தெரிவிக்கப்படும்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று தெரிவித்த அவர், ஆட்சியில் பங்கு கேட்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று தெரிவித்த அவர், ஆட்சியில் பங்கு கேட்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
மேலும் தொகுதி பங்கீடு உறுதியான பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திப்பார் என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக