தமிழகத்தின் 14-வது சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும், கூட்டணி தொடர்பாக முனைப்பாக பணியாற்றி வருகின்றன.இந்நிலையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுவினை நேற்று முதல் மார்ச் 7-வரை பெற திட்டமிட்டுள்ளது.
முதல் நாளான நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்காக பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் மாவட்ட தி.மு,க பிரதிநிதியும், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், பரங்கிப்பேட்டை ஒன்றிய பிரதிநிதியும், 10-வது வார்டு செயலாளருமான M.K. பைசல் யூசுப் அலி ஆகியோர் விருப்ப மனுவினை தி.மு.க தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஹஸன் முஹம்மது ஜின்னா உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளிடம் சமர்ப்பித்தனர். A.R.முனவர் ஹுசேன் கடந்த முறை புவனகிரி தொகுதிக்காக விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியின் போது நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி கோமு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேலவன், சேக் அப்துல் ரஹ்மான், ஹாஜா, நெய்னா, யாசீன், சலீம், அப்துல் காதர், ஆரிப், பக்ருதின், சாஹுல் ஹமீது உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.
நன்றி: mypno.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக