நேற்று நள்ளிரவு கடலூர் சிப்காட் நெடுஞ்சாலையில் பரபரப்புடன் கிராம மக்கள் அங்கும் இங்கும் அலைந்து அலறியடித்து ஓடினர். சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சாஷன் கெமிக்கல்ஸ் என்கிற ஒரு ஆலையிலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதால் 65-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தது மட்டுமின்றி பலருக்கு கண் எரிச்சல், வாந்தி, தோல் அரிப்பு ஏற்பட்டது.
இந்த பாதிப்புக்கு ஆளான குடிகாடு பகுதியை சாந்த கிராம மக்கள் பலர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பாதுகாப்பு அறையை அடித்து நொறுக்கியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம் சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னர். மாவட்ட ஆட்சித்தலைவர் பாதுகாப்புடன் நள்ளிரவு சாஷன் பிரச்சினைக்குரிய தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இங்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த இரசாயண பொருட்களை இந்த விஷவாயு கசிவிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. தீயணைப்பு ஊழியர்களை கொண்டு அந்த இரசாயண பொருட்களை அப்புறப்படுத்தி அழிக்கப்பட்டது.
பிரச்சினைக்குரிய தொழிற்சாலையை உடனே இழுத்து மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்ட கிராம மக்களை திருமண மண்டபம் மற்றம் பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார்
நன்றி: mypno.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக