நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது அனைவரும் அறிந்ததே. மூ.மு.க வை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்குகிறது. இக்கட்சியின் வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க இங்கு வெற்றி பெற்றிருந்தும் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதால்,இது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். எனவே தி.மு.க அணி வேட்பாளர் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்பதாகவே கருதப்படுகிறது. 2006 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் அருள்மொழிதேவன், தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணனை 17,162 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி;mypno.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக