பரங்கிப்பேட்டைஅருகே மீனவர்கள் கடத்தப்பட்டதற்கு பதிலாக பழையார் மீனவர்கள் நான்கு பேரை பரங்கிப்பேட்டை மீனவர்கள் நேற்று அதிகாலை கடத்தி வந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரசுராமன் (45), கோடீஸ்வரன் (65), சிலம்பரசன் (25), வினோத் (24). இவர்கள் நான்கு பேர் நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டையில் இருந்து 8 மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது நாகப்பட்டினம் மாவட்டம், பழையாரை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து அதே இடத்தில் மீன் பிடிக்க வலை விரித்தனர். இதனால்இரண்டுமீனவ குருப்புக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பழையார் மீனவர்கள் பரங்கிப்பேட்டை மீனவர்கள் நான்கு பேர் உட்படபடகுடன் சேர்த்து பழையாருக்கு கடத்திச் சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த புதுக்குப்பம் மீனவர்கள் நேற்று அதிகாலை அதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பழையாரை சேர்ந்த மீனவர்கள் பாக்கியநாதன் (25), பிரபாகரன் (19), திருமுருகன் (30), ராஜ் (29) ஆகிய நான்கு பேரை படகுடன் கடத்தி வந்து பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவங்களால் பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அதையடுத்து சிதம்பரம் டி.எஸ்.பி., நடராஜன், புதுக்குப்பம் மற்றும் பழையார் மீனவ தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட மீனவர்கள் அந்தந்த பகுதி மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக