ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

22 செப்., 2011

மோடியின் உண்ணாவிரதம்...???

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், செப்டம்பர் 22, 2011 No comments


மத நல்லிணக்கத்துக்காக குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி மூன்று நாள் உண்ணாவிரதமாம்! ஆம், ஆடுகளுக்காக ஓநாய் உண்ணாவிரதம் இருக்கிறது - புள்ளிமான்களின் உரிமைக்காக, நன்மைக்காக புலிகள் மாநாடு நடத்துகின்றன; எலிகளின் வாழ்வுரிமைக்காக பூனைகள் கூடிப் பேசுகின்றன என்பதைக்கூட நம்பினாலும் நம்பலாம்! மதநல்லிணக்கத்துக்காக மோடி உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதை நம்ப முடியுமா? பைத்தியக்காரன்கூட நம்ப மாட்டான்.

தமிழ்நாட்டில் உள்ள சோ குருமூர்த்திகள் அடுத்த பிரதமர் மோடிதான் என்று கொஞ்ச காலமாகவே காற்றடித்துக் காற்றடித்து விளம்பரப் பலூனை ஆகாயத்தில் பறக்க விட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், மாவட்ட நீதிமன்ற அளவிலேயே மோடி மீதான வழக்கைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாம்; அவ்வளவு தான் மோடியைக் குற்றமற்ற நிரபராதி என்றே உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது போல வாண வேடிக்கைவிட ஆரம்பித்து விட்டனர்.

எவ்வளவுப் பெரிய மோசடி! இதே உச்சநீதிமன்றம் இதே மோடியைப்பற்றி இதற்குமுன் என்ன கூறியது?

ஆதரவற்ற குழந்தைகள், அபலைப் பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்ட பொழுது முதல் அமைச்சர் நரேந்திரமோடி அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்த நீரோ மன்னன் என்று சொல்லவில்லையா? உச்சநீதிமன்றத்தில் இந்த விமர்சனத்துக்குப் பிறகு மோடி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமாவா செய்தார்?

2002 பிப்ரவரி 27 ஆம் தேதி கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டு 95 பேர் மரணம் அடைந்த போது, மோடியின் ஆட்சியில் 22 மணி நேர இடைவெளியில் இரண்டாயிரம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படவில்லையா?

ராம பக்தர்கள் படுகொலை செய்யப்பட்டதன் எதிர்விளைவே இஸ்லாமிய மக்களின் படுகொலை என்று தான் ஒரு முதல் அமைச்சர் என்ற பொறுப்பை மறந்து விமர்சனம் செய்யவில்லையா மோடி?

சர் அய்சக்நியூட்டன் கூறியதையெல்லாம் எடுத்துக்காட்டவில்லையா? எந்த வினைக்கும் எதிர்வினையுண்டு என்று இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது விஞ்ஞான ரீதியாக சரிதான் என்று சொன்ன கொடுங்கோலன் - இப்பொழுது மத நல்லிணக்கத்துக்காக உண்ணா விரதம் இருக்கிறாராம்.

பெரு முதலாளிகள் பார்ப்பனர்கள், காவிக் கூட்டம் மோடியைப் பிரதமராக்கத் துடிப்பது - ஏன்? நாட்டை இந்துக்கள் ஒரு பக்கம், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட வேற்று மதக்காரர்கள் இன்னொரு பக்கம் என்று பிரித்து நாட்டை மதவாரியாகத் துண்டு போட்டு ஆட்சி நடத்த வேண்டும்; ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் சதியாகும்.
மதச் சார்பின்மை என்பது பார்ப்பனர்களுக்கு அனுகூலமானதல்ல. இதில் மாற்று மதக்காரர்களுக்கு சலுகைகள், வாய்ப்புகள் இருக்க வாய்ப்பு உண்டு. வேறு சில நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருக்கும் போது, இந்தியா ஏன் ஒரு இந்து நாடாக இருக்கக் கூடாது? என்பதுதான் அவர்களின் நோக்கமும் - ஆசையும். அந்த இந்து ராஜ்ஜியம் என்பது என்ன? மனுதர்ம ராஜ்ஜியம்தானே? நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக்கும் பார்ப்பனர்கள், நூற்றுக்கு 97 மக்களாக இருப்போர்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுதானே அந்த இந்து ராமராஜ்ஜியம்?

ஒரு பார்ப்பான் பிரதமராக இருந்து இந்து ராஜ்ஜியம் நடத்தினால் பார்ப்பனர் அல்லாதார் மக்கள் மத்தியில் விரைவில் அடையாளம் காணப்பட்டு விடும் என்பதால் நரேந்திரமோடி போன்ற சூத்திரர்களைப் பிடித்து காரியம் சாதித்துக் கொள்வது என்ற தந்திரம்தான் இதன் பின்னணியில்!

உண்மையான புலிகளைவிட வேடம் போட்ட புலிகள்தானே அதிகமாகக் குதிக்கும்?

இருப்பதிலேயே மிகவும் குரூரமான ஓர் ஆளைப் பிடித்து பிரதமராக்க வேண்டும் என்பது - பார்ப்பனர்களின் ஆழமான சதி; எச்சரிக்கை! எச்சரிக்கை!!

நன்றி:
-------------------”விடுதலை” தலையங்கம் 20-9-2011 

20 செப்., 2011

யாருக்கு சீட்டு....?

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், செப்டம்பர் 20, 2011 No comments





பரங்கிப்பேட்டை நகரில் அவ்வப்போது சூழும் கார்மேகங்கள் போல் அல்லாமல் கடந்த சில வாரங்களாகவே தேர்தல் மேகமும் சூழ்ந்தபடியே இருக்கிறது. தனித்தனி சந்திப்புகள், ஆலோசனைகள் என்று தொடரும் இச்சூழல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க-வும், தி.மு.க.வும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான விருப்ப மனுவை பெற்று களத்தில் துடிப்புடன் இருக்கிறது. ஆளும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நகர அவைத்தலைவர் மலை.மோகன், நகர செயலாளர் K.மாரிமுத்து, சிறுபான்மை பிரிவு நிர்வாகி H.ஷாஜஹான், புலவர் C.K.சீனிவாசன், ஜெய்சங்கர் ஆகியோர்கள் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
பேரூராட்சி மன்ற தலைவர் போட்டியில் தி.மு.க. சார்பில் தற்போதைய பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி A.R.முனவர் உசேன், நகர தி.மு.க. செயலாளர் J.பாண்டியன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி காண்டீபன், மகளிரணி பொற்செல்வி என்று நீளும் இப்பட்டியலில் மற்றொரு பிரமுகரும் இருக்கிறார், ஆனால் அவர் மாவட்ட தி.மு.க.நிர்வாகிகளிடம் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை, எனவே சுயேட்சையாக போட்டியிடலாம் என்று தெரிய வருகிறது, எனினும் இச்செய்தி அவர் தரப்பு ஆதரவாளர்களால் மறுக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது போட்டி இடுவார் என்று தெரிய வருகிறது. பா.ம.க சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக தெரிய வருகிறது. சுயேட்சையாகவும் ஓரிருவர் போட்டி இடலாம்.
வார்டுகளை பொறுத்த வரையில் மிகுந்த பரப்பரப்பான தருணங்களாகவே நிமிடங்கள் நகர்கிறது. குறிப்பாக நகுதா மரைக்காயர் தெரு, கோட்டாத்தாங்கரை தெரு தில்லி சாஹிப் தர்கா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 5-வது வார்டில் பலர் போட்டியிட விரும்புவதால் இந்த வார்டு நகரில் பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
தி.மு.க.சார்பில் போட்டியிட 1-வது வார்டில் H.அஜீஸ் அஹமது, U.ஹபீபுர் ரஹ்மான், 2-வது வார்டில் பஷிரியாமா ஜாபர், உம்மா சல்மா, 4-வது வார்டில் செழியன், 5-வது வார்டில் ஜாபர் ஷெரீப், M.G.M.ஹாஜா கமால், 6-வது வார்டில் ஜம்ஷீத் பீவி, 7-வது வார்டில் காண்டீபன், அஹமது, 8-வது வார்டில் கோவிந்தராஜ், காண்டீபன், 9-வது வார்டில் ஜுனைதா, கவுசுன்னிசா, 10-வது வார்டில் பாத்திமா ஹபீபுல்லாஹ், 11-வது வார்டில் அஜீதுத்தீன், S.O.செய்யது ஆஃரிப், H.இப்ராஹீம் ஆகியோர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் H.செய்யது அலி 1-வது வார்டில் போட்டியிடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இதுப்போன்ற உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் ஆர்வம் காட்டாத நிலை இருந்ததால் பெரும்பாலான வார்டுகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர், பின்னர் நிலைமை மெல்ல மாற்றம் அடைந்து ஓரிவருர் என்ற வகையில் தொடர்ந்து, இப்போது பலர் தேர்தல்களில் போட்டியிட ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ உள்ளாட்சி மக்களுக்கு நன்மை தரும் நல்லாட்சியாக அமையட்டும்.
http://www.mypno.com/
நன்றி 

19 செப்., 2011

50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி!

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், செப்டம்பர் 19, 2011 No comments



50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி!

டாக்டர்களின் ஊகங்களை முறியடித்துதலை ஒட்டிப் பிறந்தஆண்பெண் இரட்டையர்கள் தங்கள், 50வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினர்.

ஜார்ஜ் மற்றும் லோரி சேப்பல் என்ற ஆண்பெண் குழந்தைகள் இருவரும், 50 ஆண்டுகளுக்கு முன்அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தனர்.
பிறக்கும் போதேஇருவரது தலையும் ஒட்டியே இருந்தது. அதோடு தலையின் முக்கிய நரம்புகளும்மூளையில், 30 சதவீதமும் இருவருக்கும் பொதுவாக இருந்தன.
இதனால்மருத்துவ வசதிகள் அதிகமாக முன்னேறாத அக்காலத்தில்இந்த விசித்திரமான பிறவிகள்நீண்ட நாள் வாழ முடியாது எனடாக்டர்கள் கைவிரித்து விட்டனர்.
ஆனால்டாக்டர்களின் ஊகங்களை முறியடித்துஇவர்கள் தற்போது தங்களது, 50வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர்.
இந்தக் கொண்டாட்டத்தை லண்டனில் நிகழ்த்தியுள்ள இவர்களில்லோரி ஐந்தடி அங்குல உயரமும்ஜார்ஜ் நான்கடி அங்குல உயரமும் கொண்டவர்களாக தற்போது உள்ளனர்.
ஜார்ஜ் மேற்கத்திய இசைப் பாடகராகத் திகழ்கிறார். லோரி "டென் பின் பவுலிங்என்ற விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.வாழ நினைத்தால் வாழலாம் என்ற பழமொழிக்கு இலக்கணமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தங்களது வாழ்க்கை குறித்து, "டெய்லி மெயில்பத்திரிகைக்கு லோரி அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் பிறந்த போதுஎங்களது வாழ்க்கை மிஞ்சிப் போனால், 30 ஆண்டுகளைத் தாண்டாது என்று கூறினர்.
ஆனால்அவர்களின் ஊகங்கள் தவறு என்றுநாங்கள் நிரூபித்து விட்டோம். கடந்த 50 ஆண்டுக்கால வாழ்க்கையில் நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். எங்கள் வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து முடிப்போம்'என்று பெருமிதத்துடன் கூறினார்.
நன்றி;TMB

13 செப்., 2011

பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், செப்டம்பர் 13, 2011 1 comment


பரங்கிப்பேட்டை: நடைபெறவிருக்கும் பரங்கிப்பேட்டை பேரூரட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கட்சிகள் சார்பாக சீட் கேட்டு விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பரங்கிப்பேட்டை நகர தி.மு.க. அமைப்பாளர் ஏ.ஆர். முனவர் உசேன் பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கோரியுள்ளார். சிதம்பரத்தில் உள்ள தி.மு.க.வின் தேர்தல் அலுவலகத்தில் முன்னால் அமைச்சர்கள்
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கு.பிச்சாண்டி மற்றம் நகர தலைவர் பாண்டியன் முன்னிலையில் விருப்பமனு அளித்துள்ளார்.
நகர தி.மு.க.வில் பிரபலமானவரும், 10-வது வார்டின் முன்னால் உறுப்பினருமான ஏ.ஆர். முனவர் உசேனுக்கு நிச்சயமாக சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக அவரதுஅதரவாளர்கள் கூறுகின்றனர்.
நன்றி

8 செப்., 2011

சிதம்பரத்துக்கு,புதிய ஏ.எஸ்.பி.யாக துரை

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், செப்டம்பர் 08, 2011 No comments


சிதம்பரம் நகரம் அமைதி பூங்காவாக திகழ போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என புதியதாக பொறுப்பேற்ற ஏ.எஸ்.பி., கேட்டுக் கொண்டுள்ளார். சிதம்பரம் டி.எஸ்.பி.,யாக இருந்த நடராஜன் சென்னை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதையடுத்து சிதம்பரத்திற்கு புதிய ஏ.எஸ்.பி.,யாக துரை நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தர்மபுரியைச் சேர்ந்த இவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் பயிற்சி முடித்துவிட்டு வந்துள்ளார். ஐ.பி.எஸ்., முடித்துள்ள இவர் எம்.எஸ்சி., விவசாயம் படித்து அதே துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

சிதம்பரத்தில் பொறுப்பேற்ற ஏ.எஸ்.பி., துரை நிருபர்களிடம் கூறியதாவது: கோவில் நகரமான சிதம்பரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, குற்றம் சம்பவங்கள் எதுவும் இல்லாத அமைதியான நகரமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் முழுமையாக கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து சீரமைப்பிலும் தனி கவனம் செலுத்தப்படும். நகரம் அமைதி பூங்காவாக திகழ போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு ஏ.எஸ்.பி., துரை கூறினார்.

நன்றி,தினமலர்