ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

11 ஜூலை, 2012

மோடியின் கேடித்தனத்திற்கு கிடுக்கி பிடிபோட்ட உச்ச நீதிமன்றம்?

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 11, 2012 No comments



 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய குஜராத் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று(திங்கள் கிழமை) உத்தரவிட்டுள்ளது. மேலும் இனப் படுகொலையின் போது சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்களை சீரமைக்கவும் மீண்டும் கட்டவும் எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையும் மாநில அரசு மதிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
கடந்த 2002ம் ஆண்டு நடந்த வன்முறைச் சம்பவங்களில் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து இஸ்லாமிய நிவாரணக் கமிட்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கத் தவறியதற்காக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
மேலும் சேதப்படுத்தப்பட்ட 500 வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு தருமாறும் குஜராத் அரசுக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நரேந்திர மோடி அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், குஜராத் கலவரத்தின் போது இடித்து தரை மட்டமாக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்படட வழிபாட்டு தலங்கள் பற்றிய விவரங்களை நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்க வேண்டும்.
கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும்.
இந்த வழக்கு விசாரணை நடந்தபோது குஜராத் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழிபாட்டுத் தலங்களை சீரமைக்க அரசின் நிதியை செலவிட முடியாது என்றார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெள்ளத்தாலோ அல்லது நிலநடுக்கத்தாலே ஒரு வீடு சேதமடைந்தால் அதற்கு நீங்கள் நிவாரணம் தருகிறீர்கள். அப்படி இருக்கையில் வழிபாட்டுத் தலத்துக்கு ஏன் தர முடியாது என்று கேட்ட நீதிபதிகள், கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஆய்வுசெய்வோம் என்று அறிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை மாதம் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

10 ஜூலை, 2012

பாரபட்சம் பார்க்கும் தலை நகர் டெல்லி! ஹிந்து நாளிதழ்!!

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜூலை 10, 2012 No comments


டெல்லி, இந்தியாவின் தலைநகரமாம் டெல்லியில் வீடு வாடகைக்கு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் வேளையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை என்று ஹிந்து நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வீடு தர மறுக்கின்ற அவலம் தொடர்கிறது என்று ஹிந்து பத்திரிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற அவலங்கள் படித்தவர்கள் அதிகம் வசிக்கக் கூடிய நியூ பிரண்ட்ஸ் காலனி, வசந்த் கன்ஜ், ஜன்க்புரா மற்றும் ரோகினி ஆகிய பகுதிகளில் நடந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நியூ பிரண்ட்ஸ் காலனியிலுள்ள குடியிருப்புகளின் ஏஜென்ட் ஒருவரோ இங்கு “இந்தியர்களுக்கு மட்டுமே இடமுண்டு முஸ்லிம்களுக்கு அல்ல” என்று கூறியுள்ளார். இதே காலனியில் இன்னொரு முஸ்லிம் நபருக்கும் இதேப்போன்று அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவர் முஸ்லிம் என்பதால் அவரிடம் வீடு வாடகைக்கு எடுக்க அனைத்து வசதிகள் இருந்தும் வீட்டின் உரிமையாளர்கள் வீடு தர மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்து நிருபர்கள் புதுமணத் தம்பதிகள் போன்று வேடமிட்டு ரோஹினியின் செக்டார் 8-ல் வீடு வாடகைக்கு கேட்டனர். ஆனால் அதன் உரிமையாளர்களோ இங்கு ஹிந்துக்கள் வசிப்பதால் முஸ்லிம்களுக்கு தர முடியாது என்றதுடன். இந்தப் பகுதியில் எங்கும் முஸ்லிம்களுக்கு வீடு கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
அதுவும் தனியாக வாழும் பெண்கள் என்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஹிந்து நாளிதழின் நிரூபர் கணவன் இல்லாத பெண்ணாக வீடு கேட்டபோது கணவன் இல்லாதவள் என்று முதலில் கரிசனம் காட்டிய தரகர்கள் பின்னர் முஸ்லிம் என்றவுடன் வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று மழுப்பியுள்ளனர்.
இதனை உற்று கவனிக்கும் போது மத ரீதியாக பிளவுகளை ஏற்படுத்த அதிகாரமற்ற குழு ஒன்று டெல்லியில் இயங்கி வருவதை அறியமுடிகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு கஷ்மீரிகள் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் அகதிகள் தங்கும் இடத்தின் அருகில் வீடுகளை கட்டுவது டெல்லியில் வழக்கமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் பேராசிரியரான ரிஸ்வான், கைசர் சகட் மற்றும் முனிர்கா ஆகிய பகுதிகளில் வீடு கிடைப்பதில் தமது பெயர் பெரிய இடைஞ்சலாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற செயல்கள் குறித்து வழக்கறிஞர் அசோக் அகர்வால் கூறுகையில்; இதுபோன்ற செயல்கள் சட்டப்படி தவறு என்றாலும் சமூகத்தில் இதுபோன்ற செயல்களை அடையாளம் காணுவது கடினம் என்று கூறினார். மேலும் அரசு இதனை சரி செய்வது இயலாத காரியம் என்றும் கூறினார்.
மேலும் வீட்டு விவகாரங்களில் மலாய், சைனீஸ் மற்றும் இந்திய மக்களிடையே பொது ஒதுக்கீடை அமுல்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை உதாரணமாகக் கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் தலித்துகளே இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். ஆனால் அவர்களின் பெயரின் மூலம் உடனடியாக அவர்களின் ஜாதி தெரியவராது என்பதால் அவர்களுக்கு பிரச்சனைகள் குறைவு என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி கைது

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜூலை 10, 2012 No comments

சிகரெட் சூடு மற்றும் கடித்து கொடுமைப்படுத்திய கணவரை, மனைவியே கொன்ற சம்பவம் மதுரையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பீ.பீ. குளத்தை அடுத்த ஜீவா ந‌கரை சேர்ந்தவர் அன்பழகன்(63) இவரது மனைவி உமாமகேஸ்வரி (45). இவர்களுக்கு கார்த்திக் (28) என்ற மகனும், அமலா என்ற மகளும் உள்ளனர். கொத்தனார் ‌வேலை பார்த்து வரும் அன்பழகன், மனைவியை சிகரெட் சூடு வைத்தும், வாயில் கடித்தும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவருக்கும தகராறு முற்றியது. உமாமகேஸ்வரி, அன்பழகனை கொன்றார். போதையில் தள்ளாடி விழுந்து இறந்ததாக, உறவினர்களிடம் தகவல் தெரிவித்து உடலை அடக்கம் செய்ய முயன்றனர். அன்பழகன் கொலை செய்யப்பட்டு இறந்ததாக போலீசுக்கு தகவல் வரவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு விசாரணை செய்தனர். விசாரணையில், தான் தான் கொலை செய்ததாக உமாமகேஸ்வரி ஒப்புக்கொண்டதன் பேரில் போலீசார் உமாமகேஸ்வரியை கைது செய்தனர். இக்கொலையில், மகன் கார்த்திக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


நன்றி; தினமலர்

7 ஜூலை, 2012

சிறுபான்மை இன மக்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது.

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments

இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட, சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்த சிறுபான்மை இன மக்களின் மறுவாழ்வுக்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்தது:
 
சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்து, இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோர், சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்தோர், உடல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்வதற்காகவும், சிறு வணிகம் செய்து, மறுவாழ்வு பெறுவதற்காகவும் நிதியுதவியாக அதிகபட்சம் ரூ. 10,000 வரை வழங்கப்படுகிறது.
 
இனக் கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாத வகையில், ஊனமுற்றிருந்தால் அல்லது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவராக அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெருங் குற்றங்களாகக் கருதப்படும் எந்தவொரு செயலிலும் ஈடுபடாதவராகவும், முதல் முறையாக சிறு குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து மீண்டவராகவும் இருக்க வேண்டும்.
 
உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவராக இருந்தால், மாவட்ட அரசு மருத்துவரிடம் பரிசோதித்து, சான்றை அளிக்க வேண்டும். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால், வட்டாட்சியரிடமிருந்து பொருள் இழப்பீட்டுச் சான்று பெற்று அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கக் கூடாது. தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரிடம் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை உரிய சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

நன்றி, தினமணி

தீவிரவாத பி ஜே பி கட்சிக்குள் குடும்பி பிடி சண்டையால் நிம்மதியில் காங்கிரஸ்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments


பெங்களூர்:  கர்நாடக முதல்வரை மாற்ற வேண்டும் என்று எடியூரப்பா ஆதரவாளர்கள்  கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அங்கு சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை  நடத்த பரிந்துரை செய்யலாம் என்று பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி  தெரிவித்துள்ளார்.
சதானந்த கவுடாவை மாற்றிவிட்டு ஜகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வேண்டும் என்று  முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து  வருகின்றனர். இதற்கு பா.ஜனதா மேலிடமும் சம்மதித்துவிட்டதாகவும், ஜனாதிபதி  தேர்தலுக்குப் பின்னர் ஜகதீஷ் ஷெட்டர் முதலமைச்சர் ஆக்கப்படலாம் என்றும்  கூறப்படுகிறது.
இந்நிலையில் எடியூரப்பாவும், அவரது ஆதரவாளர்களும் விடுக்கும் மிரட்டல் மற்றும்  நெருக்கடியால் எரிச்சலடைந்துள்ள அத்வானி, சட்டசபையைக் கலைத்துவிட்டு  முன்னதாகவே தேர்தலை நடத்த பரிந்துரை செய்யுமாறு கர்நாடக பா.ஜனதாவினரை  கேட்டுக் கொண்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

100 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments


தமிழகத்தில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு அப் பள்ளிகளுக்கு 900 ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 
இதுகுறித்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வி பயிலும் வயதிலுள்ள அனைத்து குழந்தைகளும் இடையில் நில்லாமல் கல்வி கற்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். அந்த வகையில், மாணவ-மாணவியர் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகிலேயே மேல்நிலைக் கல்வி பயில வழிவகை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்கெனவே சென்ற ஆண்டு 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் என மொத்தம் 875 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.
 
அந்த வகையில் இந்த ஆண்டிலும் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 
தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கென 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் மொத்தம் 900 ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவும், 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40.26 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
 
அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள், ஊரகப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் கல்வி பயில வழி ஏற்படும் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானத்தில் உண்மையாகி வரும் உண்மை!

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூலை 07, 2012 No comments


 விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரபஞ்சரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் ‘தெய்வீக அணுத்துகளை(Godparticle)’ கண்டுபிடித்துள்ளதாக ஸேர்ன்(CERN – The EuropeanOrganisation for Nuclear Research) ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அணு இயற்பியலின் புதிய ஆய்வு முடிவுகளை குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாட்டிற்கு ICHEP (International conference for high energy Physics) முன்னோடியாக நடந்த சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறித்து அறிவித்தனர்.
தாங்கள் தேடிக்கொண்டிருந்த ‘ஹிக்ஸ் போஸான்’ துகள்தாம் கண்டுபிடித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆரம்பக்கட்ட முடிவாகும்.
Big Bang எனப்படும் பெருவெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் உருவானது என்கிறது இக்கோட்பாடு.
பெருவெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும்(mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்புகொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
இந்த கோட்பாட்டின்படி  இந்த பிரபஞ்சம் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத்துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத துகள்தாம் ஹிக்ஸ் போஸான். இதனை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டால் அனைத்து கோட்பாடுகளும் தகர்ந்துவிடும்.
இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின.
பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்த மாபெரும் வட்டச் சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.
அணுத்துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத்துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத்துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே.
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத்தான் CERN நடத்தியது.
இதற்காகத்தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணு துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்(GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
நோபல் பரிசுப் பெற்ற விஞ்ஞானியான லியோன் மார்க்ஸ் லெடர்மன்(leon marx lederman) ஹிக்ஸ் போஸானுக்கு ‘தெய்வீகத் துகள்(god  particle)’ என பெயரிட்டார்.
அறிவியல் உலகில் புரியாத புதிராக திகழ்ந்ததால் அவர் இப்பெயரை சூட்டினார். தனது புத்தகத்தில் லெடர்மன் ஹிக்ஸ் போஸானை ‘தெய்வீகத் துகள்’ என அழைக்கிறார். அணு இயற்பியல் விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.
பிரபஞ்சத்தைக் குறித்த ஸ்டாண்டர்ட் மாடல் கோட்பாட்டின் பல வெற்றிடங்களை நிரப்ப ஹிக்ஸ் போஸானைக் குறித்த இனி வரும் நாட்களில் நடத்தப்படும் ஆய்வுகள் உதவும் என கருதப்படுகிறது.

4 ஜூலை, 2012

திருப்பூரில் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 4 பேர் கைது

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூலை 04, 2012 No comments

உரிய ஆவணங்கள் இல்லாமல், திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரியர்கள் நான்கு பேர், கைது செய்யப்பட்டனர்.திருப்பூரில், பனியன் ஏற்றுமதி தொடர்பாக, வெளிநாட்டு வர்த்தகர்கள், அதிகளவு வந்து செல்கின்றனர். நைஜீரியா, சோமாலியா நாட்டை சேர்ந்தவர்கள், சுற்றுலா விசாவில் திருப்பூருக்கு வந்து, முறைகேடாக பனியன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் காதர்பேட்டை, ராயபுரம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில், நைஜீரியர்கள் அதிகளவு தங்கியுள்ளனர். பனியனை விலைக்கு வாங்கி, அங்குள்ள நண்பர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி, ஏற்றுமதி வரியிலும், முறைகேடு செய்து வருவதோடு, "செகண்ட்ஸ்' துணிகளையும் வாங்கி, விற்று வருகின்றனர்.சட்ட விரோதமாக தங்கியுள்ள நைஜீரியர்கள் குறித்து, ஏ.எஸ்.பி., தலைமையிலான போலீசார், ஆய்வு நடத்தினர். பல பகுதிகளில் தங்கியிருந்த, 70 நைஜீரியர்களிடம், பாஸ்போர்ட், விசா ஆகியவை, சரி பார்க்கப்பட்டன. இதில், எம்.ஜி.ஆர்., சிலை எதிரே, யுனிவர்சல் ரோடு வீட்டில் தங்கியிருந்த நான்கு பேரிடம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாதது தெரிய வந்தது.நைஜீரியாவின் அனப்பரா கேட் பகுதியை சேர்ந்த, எபிகா மைக்கேல் நவ்யூ, 38, இக்னா கிறிஸ்டோபர் ஒக்கோசோ, 24, நவீனே விக்டர், 37, சின்னோடம் ஹால்டோனேட்டர் 30, ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.




நன்றி; தினமலர்

1 ஜூலை, 2012

மஹராஷ்ட்ரா சிறைச்சாலையின் அதிர்ச்சி தகவல்!! TISS!!

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, ஜூலை 01, 2012 No comments


புதுடெல்லி: மஹராஷ்ட்ரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் சமூக சூழல்களை குறித்து ஆய்வு செய்த டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸஸ்(Tata Institute of Social Sciences (TISS)) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் அடங்கியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நிரபராதிகள் என்றும், க்ரிமினல் கும்பல்களுடன் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் TISS அறிக்கை கூறுகிறது.
சில வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போலீஸ் கைது செய்கிறது என்று TISS அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
15 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் ஆவர். தடா, மோக்கா போன்ற தீவிரவாத தடுப்புச் சட்டங்களின் கீழும், அஃபிஸியல் சீக்ரெட் சட்டத்தின் கீழ் உளவாளிகள் என முத்திரைக் குத்தப்பட்டும் இவர்களில் பெரும்பாலோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் கடுமையான குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று TISS ஆய்வறிக்கை கூறுகிறது.
25.4 சதவீதம் பேருக்கு வழக்குகளை வாதிட வழக்கறிஞர்கள் இல்லை.
TISS க்காக க்ரிமினாலஜி அண்ட் ஜஸ்டிஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வர்கில் டாக்டர்.விஜய் ராகவனும், ரோஷ்னி நாயரும் ‘மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் சமூகத்தின் சமூக பொருளாதார சூழல் மற்றும் மறுவாழ்வுக்கான தேவைகள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

12-ம் ஆண்டு பரிசளிப்பு விழா

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, ஜூலை 01, 2012 No comments

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நடைபெற்ற 12-ம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் அதிகப் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கம் - வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், சுமார் 1000 மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது. 

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் டாக்டர் நு◌ார் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவினை  Z.ஃபஜ்லுர் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். அப்துல் காதிர் உமரி கிராஅத்துடன் துவங்கிய விழாவிற்கு ஜமாஅத்தின் செயலாளர் ஹெச். ஷாஜகான் வரவேற்புரையாற்றினார். கேப்டன் ஹமீது அப்துல் காதர், ஜமாஅத் து. தலைவர் M.S.அலி அக்பர் , செயலாளர் சுல்தான் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணமலைப் பல்கலைகழக கடல்வாழ் உயர் ஆராய்சி நிலையத்தின் பேராசிரியரும் விரிவுரையாளருமான டாக்டர் S. அஜ்மல் கான் வாழ்த்துரை வழங்கி பரிசுகளையும் வழங்கினார். முன்னதாக ஜமாஅத்தின் து. செயலாளர் S. O. செய்யது ஆரிப் மற்றும் பரங்கிப்பேட்டை அரசு மகளிர் பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் சீனுவாச ராகவன், தட்சிணா மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ட. ஹமீது மரைக்காயர் நன்றியுரை வழங்கினார்.
 

சான்றிதழ்களுடன் பதக்கங்கள் மற்றம் பரிசுகள் வழங்கப்பட்டு விழா முடிவுக்குப் பின் மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. 
 நன்றி,mypon.com

27 ஜூன், 2012

ஜாக்கிரதை.....

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூன் 27, 2012 No comments


நன்றி,www.adiraipost.blogspot.com

25 ஜூன், 2012

வளைகுடா சபுராலிகளுக்கு ஒரு அறியத்தகவல்.

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜூன் 25, 2012 No comments

சவூதி அரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்

உங்கள் குடும்பத்தினர்களின் விசா வரவு மற்றும் வெளியேற்றம் அறிய வேண்டுமா?

உங்களுக்கு இந்த வருடம் ஹஜ் செய்வதற்கு அனுமதியுள்ளதா / தகுதிபெற்றவரா?

உங்களின் சுகாதார அட்டை புதுப்பிக்கப் பட்டுள்ளதா?

உங்களுடைய ஆதரவில் வேலை செய்பவர்களின் குடியரசு அட்டை நிலை என்ன?

உங்களின் குடியரசு அட்டை (இக்காமா) நிலை என்ன?

உங்களின் விசா நிலை என்ன? (Exit / Re-Entry)

உங்களின் கைரேகை எடுக்கப்பட்டு அது அங்கீகரிக்கப் பட்டுவிட்டதா?

உங்களுக்கு போக்குவரத்து துறையின் அபராதம் உள்ளதா?

உங்கள் வாகனத்திற்கு எதுவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?

இதுபோன்ற தகவல்களையும், மேலும் தகவல்களையும் பெற...

http://www.moi. gov.sa/wps/ portal
என்ற மேலேயுள்ள சுட்டியை அழுத்தி, E-Services Tab என்ற பகுதியை அழுத்தி ”Passports" என்ற தலைப்பை அழுத்துங்கள்.

நாம் எதிர்பாராமல் திடீரென்று பயணம் செல்ல நேரலாம், மேலேயுள்ள எதாவது ஒன்றின் தடங்கலால் உங்கள் பயணம் செல்லமுடியால் ஆகலாம். எனவே இன்றே இவைகளை சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் கடவுச்சீட்டு (Passport) கலாவதியாகியிருந்து நீங்கள் அவசரமாக பெறவேண்டியிருந்தால் “தட்கல்” என்ற அவசரமுறையில் இந்தியத் தூதரகத்தை அனுகினால் தருவார்கள் அவர்களின் இணையதள முகவரி

http://www.indianembassy.org. sa
(Tatkal service for issue of passport is also available)

”பிரச்னைகள் வருமுன் காப்போம்”.

உங்களுக்கு தெரிந்த சவூதிவாழ் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
நன்றி:லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜூன் 25, 2012 No comments


  1. பெரியத் தெரு மர்ஹூம் அலி முஹம்மது கவுஸ் அவர்களின் மகளாரும், மர்ஹூம் ஜெயினுல்லாபிதீன் அவர்களின் மனைவியும், காஜா சாபு அவர்களின் தாயாரும், அரபி, அப்துல் லதீப், முஹம்மது ரபிக், பாரூக், மலிக் பைசல், முஹம்மது யாசிர், சல்மான் ஆகியோரின் பாட்டியாருமாகிய சரீபுன்னிசா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராபள்ளியில்


2




பெரியத் தெரு மர்ஹூம் ஹாஜி முஹம்மது யாசின் அவர்களின் மகளாரும், கடலூர் O.T மர்ஹூம் காதர் உசேன் அவர்களின் மனைவியும், வாத்தியாபள்ளி தெரு ஜக்கரியா மரைக்காயர், இசாக், நவாஜ் ஆகியோரின் சகோதரியும், லியாகத் அலி, ரபி, ஆசிக் ஆகியோரின் தாயாருமாகிய கைருன்னிசா அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராபள்ளியில்.

இணைந்த கரங்கள்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜூன் 25, 2012 No comments


வரலாற்றுச் சிறப்புமிக்க பரங்கிப்பேட்டையின் வரலாற்றுக் குறிப்பில் இடம்பிடித்த 'இந்நாள் பொன்னாள்'என்ற வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை (22 ஜூன் 2012) அமைந்தது என்றால் மிகையில்லை. ஆம், அன்றுதான் நமதூரின் இக்கால ஆளுமைகளான மதிப்பிற்குரிய ஜமாஅத் தலைவர் டாக்டர். நூர் முஹம்மது அவர்களும், ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மதிப்பிற்குரிய முஹம்மது யூனூஸ் அவர்களும் தமக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி வைத்துவிட்டு, அல்லாஹ்விற்காக, சமுதாய நலனையும்,  ஐக்கிய ஜமாஅத்தின் கட்டுமான நலனையும் கருதி ஒன்றுபட்டனர். அல்ஹம்துலில்லாஹ்
 
ஊர்நலனே பிரதானம் என்று கருத்துவேறுபாடுகளைக் களைந்து விட்ட இந்தத் தலைவர்களைச் சந்தித்து,  ஒற்றுமைக்கு வழிகோலிய ஒருவர் கூறுகையில், "தொடக்கத்தில் பெரிதும் யோசனையாக இருந்தாலும், அல்லாஹ் இத்தகைய முயற்சிகளை வழிநடத்தவும் வெற்றியளிக்கவும் வல்லவன் என்கிற உறுதியான நம்பிக்கையில் இரு தலைவர்களையும் சந்தித்தோம். அல்ஹம்துலில்லாஹ், எதிர்பார்த்தவற்றுக்கும் மேலாக இரு தலைவர்களுமே தத்தம் தான்மை(Ego) கருதாது, ஊர் நலனை முன்னிறுத்தி நல்லிணக்கம் காண்பதில் காட்டிய ஆர்வமே இதில் மிகவும் உற்சாகமளித்தது" என்றார் கண்கள் பனிக்க. "இருவருமே ஒருவருக்கொருவர் மதிப்பு வைத்திருந்தார்கள்; தம் நலனைக் காட்டிலும் ஊர் நலமே உயர்ந்தது என்பதை உணர்ந்திருந்தார்கள், முகமலர்ந்து முயற்சிகளுக்கு முன்னுரிமையும் முற்போக்கும் காண்பித்தார்கள். ஆகவே அல்லாஹ்வின் அருளால் எல்லாமே எளிதாயிற்று".
 
ஆம். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.
 
இந்த நல்லிணக்க முயற்சியில் பெயர் குறிப்பிடப்பட்டோர் மட்டுமின்றி மேலும் சில நல்லெண்ணச் சகோதரர்களும் தங்களின் சிறப்பான ஆலோசனைகளையும், கருத்துகளையும் எடுத்து வைத்தார்கள். அவர்களும் மிகுந்த நன்றிக்குரியவர்கள்.
 
அதே சமயம் ஊரே எதிர்பார்த்த நல்லிணக்கம் ஏற்பட்ட பின்னரும், இந்த ஒற்றுமையை, சமுதாய நலனை, இணக்கத்தை விரும்பாதோரும் ஊரில் இருக்கக் கூடும். எதிரிகளாகப் பார்க்கப்படத் தேவையில்லாத அளவுக்கு உதிரிகளே அவர்கள் என்பதால் ஊர் நலனுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது இன்ஷா அல்லாஹ். 
 
இறைதிருப்தியையே நோக்கமாகக் கொண்டு ஊர்நலனை முன்னிட்டு இணைந்த இதயங்களை தான்மை(Ego)யும், அகங்காரமும், அவதூறுகளும் என்ன தான் செய்துவிட முடியும்?
 
எந்நேரத்திலும் முளைக்கும் வல்லமையுள்ள மரணத்தின் மாயக்கரம் கலைத்துப்போடும் பெருங்கனவே,  அதிலும் தன்னையே மையமாகக் கொண்டு ஆடும் மாயைதான் இந்த வாழ்க்கை என்பது புரிந்துவிடும்போது குதர்க்கங்களும், குழப்பங்களும், குற்றங்காணும் மனப்போக்குகளும் குப்புறத் தள்ளப்பட்டு விடும் என்பதையே குறிப்பிட வேண்டியதாகிறது.
 
ஊர்நலன் கருதி இணைந்த உயர்ந்த உள்ளங்களை உங்கள் MYPNO உளமாற வாழ்த்துகிறது.
 
மதிப்பிற்குரியவர்களே!
 
உங்களின் இந்த இதய இணைப்பால், உள்ளப் பிணைப்பால், நமதூரும், சமுதாயமும் அழகிய நற்பலன்களை அறுவடை செய்ய அல்லாஹ் அருள்வானாக.
 
நன்றி,mypno.com

திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நின்றது.

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜூன் 25, 2012 No comments


சென்னை: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட பந்தியில், கூடுதலாக "குலோப்ஜாமுன்' கேட்டதில் வாய் தகராறு ஏற்பட்டு, திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நின்றது.

பெரம்பூர் அருகே செம்பியம், சிறுவள்ளூர் ரோட்டில் உள்ளது யுனைடெட் காலனி திருமண மண்டபம். இங்கு நேற்று திருமணம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர் மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு, விருந்து பரிமாறும் பந்திக்கு சென்றார். விருந்து பொறுப்பு ஒப்பந்த முறையில் விடப்பட்டிருந்தது.

"குலோப்ஜாமுன்' கலாட்டா: அங்கு பரிமாறப்பட்ட இலையில், "குலோப்ஜாமுன்' வைக்கப்பட்டது. அதை சாப்பிட்ட அவர், மேலும் ஒரு "குலோப்ஜாமுன்' வேண்டும் என்று கேட்டார். மேலும், ஒன்று வைக்கப்பட்டது. மீண்டும் ஒன்று கேட்டார். ஆனால், பந்தி பரிமாறிய உலகநாதன், இதற்கு மேல் வைத்தால் கட்டுபடியாகாது எனத் தெரிவித்தார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.

உணவு பாழ்: சிறிது நேரம் கழித்து, திருமண மண்டபத்தில் பந்தி பரிமாறும் அறையில் புகுந்த சிலர், அங்கிருந்த பொருட்களையும், உணவுப் பொருட்களையும் சூறையாடினர். இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. வரவேற்புக்காக செய்யப்பட்ட விருந்து உணவுகள் அனைத்தும் பாழானது. செம்பியம் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். தாக்குதல் தொடர்பாக, திருமண வீட்டாரிடமிருந்து புகார் பெறப்பட்டது. பந்தி பிரச்னையால் திருமணம் நிற்கக்கூடாது என்று போலீசார் அறிவுரை கூறினர். இதனால் நேற்று காலை திருமணம் தடையின்றி நடந்து முடிந்தது. தொடர்ந்து மதியம் காவல் நிலையத்திற்கு சென்ற இருதரப்பினரும் புகார் கொடுத்தனர். தன்னை தாக்கி, பொருட்களை அபகரித்த உலகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதிரேசன் கோரியுள்ளார். செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி ;தினமலர் நாளிதழ்