ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

27 அக்., 2012

வாழ்த்துகிறோம்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, அக்டோபர் 27, 2012 No comments

பரங்கிப்பேட்டை முஸ்லிம் பொதுமக்கள் அனைவர்களுக்கும் தனது பெருநாள்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது   http://portonovonews.blogspot.in








Funny photo effects

26 அக்., 2012

பாரதிய ஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, அக்டோபர் 26, 2012 No comments

 பாஜக தேசிய தலைவர் நிதின் கட்கரி நடத்தி வரும் தொழில்கள் தொடர்பாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. 

புதிய குற்றச்சாட்டுகள்: 1999ஆம் ஆண்டில் கட்கரி மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி தனியார் நிறுவனங்களுக்குச் சாலை அமைப்பதற்கான அனுமதியை அளித்தார். அதில் ரூ. 165 கோடிக்கு அவர் ஆதாயம் பெற்றார் என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. 

மேலும், இந்த ஊழல் பணத்தை கொண்டு தனது கார் டிரைவர் உள்பட பல்வேறு பினாமிகளின் பெயர்களில் 18 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இது தவிர தனது நிறுவனத்துக்காக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அரவிந்த் கேஜரிவால் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

சிந்திக்கவும்: இந்நிலையில் கட்கரிக்கு கட்சியின் மானம் கெட்ட மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கட்கரி மீதான குற்றச்சாட்டுகள் பாஜகவின் உள்கட்சி விவகாரம் என்று கழுவிற மீனில் நழுவுற மீனா ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. 
பின் குறிப்பு: கர்நாடக பாரதிய ஜனதாவின் முன்னாள் முதல்வர் இடையூரப்பா நில மோசடி முதல் பல்வேறு ஊழல்களை புரிந்தார். இப்பொழுது தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார். இதுதான் இந்த கொள்கை கோமான்களின் யோக்கிதை.

நன்றி;http://www.sinthikkavum.net

23 அக்., 2012

பரங்கிப்பேட்டை மழைக்கால புகைப்படங்கள் -2

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், அக்டோபர் 23, 2012 No comments








 இன்று காலை வெயில்  உதித்தநிலையில் திடீரென மழை பெய்ந்தது  ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்துஓடியது சின்னதெருவில் மழைநீர் வடிய வழி இல்லாநிலையில் தண்ணீர் தேங்கி சிறிய குட்டைபோல் காட்சியளித்தது குறிபிடதக்கது.


22 அக்., 2012

பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், அக்டோபர் 22, 2012 No comments




தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருச்சி, விழுப்புரம், காஞ்சி , கடலூர் , நீலகரி உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமறை கடந்த 16ம் தேதி துவங்கியதை தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களுக்கு இது வரை 21 பேர் பலியாகியுள்ளனர். நிவாரண பணிகளுக்கு அரசு தயார் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். நிவாரண தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மழை காரணமாக ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பலத்த மழை காரணமா நீர் வரத்து அதிகரித்துள்ளது. நெல்லையில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

21 அக்., 2012

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, அக்டோபர் 21, 2012 No comments


வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.
சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.
இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்கிறார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.
இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்தப் பொறாமைநோய் குறித்துக் கடும் எச்சரிக்கையை நமக்கு அளித்துள்ளார்கள்.
விறகை நெருப்புத் தின்று விடுவதைப்போலப் பொறாமை உங்களின் நற்செயல்களைஅழித்துவிடுகிறதுஎனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்கிற நபிமொழி (நூல்அபூதாவூத்)பொறாமையின் பொல்லாத் தீங்கை உணர்(ந்)/த்/திடப் போதுமானதாகும்.
மற்றவருக்குக் கிடைத்திருக்கும் கல்வி(அறிவு), செல்வம், மக்கட்பேறு, பதவி, சமூகநிலை, வலிமை, திறமை போன்ற உலகியல் ஆபரணங்களில் ஒருவன் பொறாமை அடையும்போது அவன் அறிந்தோ, அறியாமலோ, அவை, அந்த மற்றவருக்கு, தம் இறைவனாலேயே வழங்கப்பட்டன என்பதை மறந்து, அல்லது மறுத்து விடுவதாகவே பொறாமை அமைகின்றது.
தன்னைவிட மற்றோரை மேன்மையாகக் காணும்போது, இறைவன் தனக்கு நீதி செய்யவில்லை என்பதுபோலக் கருதி, மனிதன் பொறாமைச் சேற்றில் வீழ்கிறான். அதுமட்டுமா? இறைவன் தனக்கு வழங்கியுள்ள நற்பேறுகளையும் பாக்கியங்களையும்கூட, அவன் மறக்கவும் துறக்கவும் தலைப்படுகிறான். “எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை…..” என்கிற மனநிலை.
ஒருமுறை இறைத்தூதர் நபி(ஸல்அவர்கள் தமது தோழர்களிடத்தில், “அவர்கள் இறை அருளுக்குவிரோதிகள்” என்று மொழிந்தார்கள்தோழர்கள், “யாரைச் சொல்கிறீர்கள் நபியே?” என்று கேட்க,நபி(ஸல்)அவர்கள், “இறைவன் தனக்கு(ம்வழங்கியிருக்கமற்றவரைப் பார்த்துப்பொறாமைப்படுகிறார்களேஅவர்கள்தாம்” என்று கூறினார்கள் (நூல்அத்-தப்ரானி).
யாருக்கு எங்கே, எவற்றை, எவ்வளவு, எவ்விதம் வழங்குவது என்பதை இறைவனே தன் தூய அறிவால் தீர்மானிக்கிறான். இந்தப் பேருண்மையை அறியாமல், பொறாமை கொள்பவன், தன் இறைவனை அறியாதவனாகிறான்.
நிறைவடையா மனநிலை மனிதனைப் பொறாமையில் தள்ளுகிறது. பொறாமை பழிபாவத்திற்கும்,  வன்மம், பொல்லாங்கு இறைமறுப்பு ஆகியவற்றுக்கும் இட்டுச் செல்கிறது. முதல் பாவமாகக் கூறப்படுவதும் பொறாமைதான். ஆதம்(அலை) என்கிற மனிதப் படைப்பைப் பார்த்து  ஷைத்தான் கொண்ட பொறாமை!
இன்று நம்மிடையே தனியாளாயினும், இயக்கங்களாயினும், ஏன் தேசங்களாயினுங்கூட இந்தப் பொறாமைதானே, வம்பு வழக்குகளுக்குக் காரணமாக அமைகிறது! சக மனிதர்கள்/இயக்கங்கள்/அமைப்புகள் செய்த நற்செயல்களை எளிதாகப் புறக்கணிக்கிறோம். அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த, தீய செயல்களை அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவமானப்படுத்துகிறோம்.
இறைநம்பிக்கையுள்ள ஒருவன், தன் நம்பிக்கையாலும் முயற்சிகளாலும் மன நிறைவுடன், மனந்தளராமல், நிலைகுலையாமல் (தானறியாத, தனக்குக் கிடைக்கவிருக்கும் நலவளங்களுக்காகப்) பாடுபட வேண்டுமேயல்லாது மற்றவர்மீது பொறாமை கொள்ளலாகாது. இறைவன் தனக்கு அளித்தவற்றில், மனநிறைவு அடைபவனாக, ஒரு நம்பிக்கையாளன் இருப்பான். இதையே அறிஞர் இப்னு கைய்யூம் இப்படிக் குறிப்பிடுகிறார்: “(மனநிறைவு) அது நிம்மதியின் வாசலைத் திறக்கிறது. அடியானுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது”.
மேலும்அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிடவாழ்க்கை வசதியில் மேன்மைஅளித்துள்ளான் ...” (16:71) என்பது இறைமறை குர்ஆன் காட்டும் உண்மை.
அதுமட்டுமின்றி இறைமறைவேறொரு வசனத்தில், “... உலகவாழ்வில் இவர்களுக்குத் தேவையானவாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கிறோம்மேலும்நாம்இவர்களில் சிலருக்குவேறு சிலரைவிடஉயர்பதவிகளை அளித்தோம்இவர்களில்சிலர்வேறுசிலருடைய ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக! ...”(43:32) என்றும் குறிப்பிடுகிறது.
“இவ்வுலக நலவளங்களைக் காட்டிலும் இறையருளே உயர்மதிப்புடையது” என்பதே இதிலிருந்து நாம் உணரவேண்டுவது. ஏனெனில், உயர்வு என்பது உலக ஆபரணங்களில் அல்ல; மாறாக நேர்மையான இறையச்ச உணர்(தக்வா)வில்தான் இருக்கிறது.]
... உங்களில்இறைவனின் கண்ணியத்துக்கு உரித்தானவர்இறையச்சமுடையவரே ...” என்கிறதுஇறைமறை (49:13).
மேலும் “... மறுமையோஇறைவனை அஞ்சி வாழ்பவர்களுக்கு உரித்தானதாகும்” (43:35) என்றும்கூறுகிறது.
இறைநம்பிக்கையாளனின் இருபெரும் வலிமையாக, இறைமீதான அவனது ஆதரவும் அச்சமும் அமைகின்றன.
மற்றவர் அழிந்துபோக எண்ணும் தீய பொறாமைக்குத் தடை சொல்லும் இஸ்லாம், ஒருவருக்கொருவர் நற்செயல்களில் போட்டியிடுவதை நன்கு ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.
தான-தர்மங்களில் தலைசிறந்து விளங்கும் ஒருவரைப் பார்த்து “இறைவா! எனக்கும் நீ செல்வ வளங்களை; ஆரோக்கியத்தை வழங்கினால், இன்னாரைப் போன்றே நானும் தர்மம் செய்வேன்; வாரி வழங்குவேன், நற்காரியங்கள் புரிவேன்” என்று பிரார்த்திக்கத் தடையேதுமில்லை.
இந்த, தீய எண்ணமில்லாத போட்டி மனப்பான்மைக்கு அரபுமொழியில் ‘Ghibtah’ ‘கிப்தாஹ்’ (ஆக்கப்பூர்வமான போட்டியுணர்வு) என்று சொல்லப்படுகிறது.
சுருங்கக் கூறின்,
    • ஹஸது எனப்படும் (தீய எண்ணப் பொறாமை) நற்செயல்களை அழித்துவிடும்.
    • பொறாமை நயவஞ்சகத்துக்கும் இறைமறுப்புக்கும் வழிகோலுகிறது.
    • இறையை நம்பிடும் மனநிறைவு நிம்மதியும் பாதுகாப்பும் அளிக்கவல்லது.
    • ஏற்றம்-தாழ்வு, இரண்டுமே இறைநியதி.
    • தளராமல் பாடுபடுவது நம்பிக்கையாளரின் பண்பு.
    • உலக வளங்களை வைத்தல்ல, உள்ளத்தூய்மை, இறையச்சத்தைப் பொருத்தே இறைவனிடம் நற்சிறப்பும் கண்ணியமும் கிடைக்கும்
    • மறுமை இறையச்சமுடையவர்களுக்கே உரியது.
    • தீய எண்ணமில்லாத, போட்டி மனப்பான்மை (Ghibtah) தவறன்று.
    • பொறாமைக்காரர்களின் தீமையிலிருந்து, இறைவா! உன்னிடம்பாதுகாவல் தேடுகின்றேன்....என்று பிரார்த்திப்போமாக!
              நன்றி ,சத்தியமார்க்கம்.காம்,         ஆக்கம்: இப்னு ஹம்துன்

      டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?

      Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, அக்டோபர் 21, 2012 No comments


      Oct 21 தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து  மக்களிடையே போதிய 
      விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படவில்லை என்றே சொல்லலாம்.

      டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி?

      வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.

      இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர். ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

      இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும். அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம்.

      சிந்திக்கவும்: சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மூலமாகவும், வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம். அரசு இயந்திரங்களை நம்பாமல், பொதுமக்கள்  சுகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்.

      20 அக்., 2012

      மழைக்கால பரங்கிப்பேட்டையின் புகைப்படங்கள்

      Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, அக்டோபர் 20, 2012 No comments











      வடகிழக்கு பருவமழையுடன்  வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைகாரணமாக தமிழகத்தில் பல்வேறுஇடங்களில் கனமழைபெய்ந்து வருகிறது ,நமதூர் பரங்கிப்பேட்டையிலும் நேற்று முந்தினம் முதல் மழைபெய்ந்துவருகிறது,இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிகிடகின்றன ,மின்சாரம் எப்போதும்போல் வருவதும்-போவதுமாய் கண்ணாமூச்சி ஆடிவருகிறது..தொடர்ந்துபெய்யும் கனமழையால் அநேக மாவட்டங்களில் இன்னும் இரண்டு தினங்களுக்கு நல்ல மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

      17 செப்., 2012

      அமெரிக்காவின் மதவெறிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம்

      Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், செப்டம்பர் 17, 2012 No comments

      .இஸ்லாத்தையும், இறைத்தூதர் நபிகள் நாயகத்தையும் இழித்து யூதுஅமெரிக்கர் இயக்கிய திரைப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், படத்தை நீக்க மறுக்கும் கூகிள் மற்றும் அதன் அங்கமான யூ-டியூப் தளங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு மீராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு சென்றது.
       ஜமாத் தலைவர் டாக்டர்  நூர் முஹம்மது தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் ,இளைஞர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் திரளாக கலந்துக்கொண்டு அமெரிக்காவிற்க்கு எதிரான தமது கண்டனைத்தை பதிவுசெய்தனர்


       கண்டன முழக்கங்கங்களுடன் பெரிய மதகுவரை பேரணி வந்தவர்கள்  அங்கிருந்து வாகனங்களில் பி.முட்லுரர் எம்.ஜி.ஆர் சிலை அருகே  . மாபெரும் கண்டன போராட்டமும் மனித சங்கிலியும் நடைபெற்றது.





      15 செப்., 2012

      முகநூலின் கடலூர்-பரங்கிபேட்டை திண்ணை குழுமம்

      Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, செப்டம்பர் 15, 2012 No comments

      முகநூலின் கடலூர்-பரங்கிபேட்டை திண்ணை குழுமம் சார்பாக கடலூர் மற்றும் பரங்கிபேட்டையில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் விபத்து விழிப்புணர்வு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது,இதற்கான ஏற்பாடுகளை திண்ணை அமைப்பாளர் யாசின் அவர்களில் ஆலோசனைப்படி தமீம்,ஹம்துன் அஷ்ரப்,அப்துல் பாசித்,ஜமால் மரைக்காயர்,வலீத்,மதார்ஷா பைசல் மற்றும் திண்ணையின் உறுப்பினர்கள் மேற்கொண்டனர். 

      2 செப்., 2012

      பயங்கரங்களின் நிழலில்

      Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, செப்டம்பர் 02, 2012 No comments



      குஜராத் இனப்படுகொலையை நிகழ்த்திய நரேந்திர மோடியின் அடியாட்கள் 116 பேருக்கு கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் அளித்துள்ளது. இந்த படுகொலைகளை நடத்தியவர்களில் ஒருவரான மாயாபேன் கோட்னானிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த நரேந்திர மோடி, பஜ்ரங் தளத்தின் பாபு பஜ்ரங்கி ஒரு அமைச்சருக்கு இனையான அந்தஸ்துடன் தான் இந்த தீர்ப்பு வரும் வரை வலம் வந்தார். குஜராத 2002 தெகல்காவின் புலனாய்வு வெளிவந்த போது அதற்கு நான் எழுதிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.............................

      சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நாட்களாக நினைவு கொள்ள வேண்டியவை – அக்டோபர் 25,26, 2007. இந்த இரு நாட்களும் பல செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட காட்சிகள், ஒரு நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக மவுனத்தில் உறையச் செய்தது. 2000 முஸ்லிம்களை கொன்று குவித்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள், முதல் முறையாக காமிராக்கள் முன் தோன்றி பெருமிதம் பொங்க – தங்களின் செயல்களை துல்லியமாக விவரித்தார்கள். அரசு அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், பா.ஜ.க தலைவர்கள், பஜ்ரங் தள் தொண்டர்கள் எனப் பலரும் கொலைகாரர்களில் அடக்கம்.
      இந்த குற்றங்களின் பாதுகாவலர்களான தில்லி பா.ஜ.க. தலைவர்கள் கமுக்கமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், காங்கிரஸ் ஏன் அமைதி காக்கிறது? இந்த கொலைக்காரர்களில் பலர் தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் பெரும் பொறுப்புகளில் உள்ளதாலா? அல்லது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர், கோத்ரா இனப்படுகொலையிலேயே பங்கு கொண்டதாலா? இல்லை எனில் இவர்களின் மவுனம், துல்லியமான சமிக்ஞைகளை கொண்டிருக்கிறதா?
      ’தெகல்கா’வின் அரிய புலனாய்வு பற்றி நாடாளுமன்றத்தில் பேசியவர்கள் இடதுசாரிகல், லாலு பிரசாத், மாயாவதி ஆகியோர் மட்டுமே. மனித உரிமை ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் என இந்த சமூகத்தின் ஒரு சிறிய பகுதி பேசியிருக்காவிட்டால், மொத்தத்தில் இந்த புலனாய்வுகள் கரைந்து போயிருக்கும் ஊடகங்கள் கூட மேலோட்டமாகப் பேசிவிட்டு, வேறு கதைப்புகள் நோக்கிச் சென்று விட்டன. அதிலும் பலர் தொடர்ந்து தெகல்கா’வின் இந்த பாணி இதழியலை வசை பாடத் தவறவில்லை. ஊடகங்களுக்கு இன்று அரசு மற்றும் இந்திய – வெளிநாட்டு முதலாளிகளின் தயவின்றி வாழத் தெரியாது. தனித்துவமான ஒரு வாழ்க்கையை தீர்மானித்த தெகல்கா’வால் எந்தத் தயக்கமுமின்றி – அதிகாரங்களுக்கு எதிராக துணிவுடன் உரக்க பேச முடிகிறது.
      ஆயுத போர ஊழல், சாகிரா ஷேக், ஜெசிகா லால், சஞ்சய் தத், மோடியின் போலி என்கவுன்டர்கள் என 25- க்கும் மேற்பட்ட மறைக்கபட்ட உண்மைகளை வெளிக்கொணர முடிந்தது. இது போன்ற இதழியலாளர்கள் இல்லையென்றால், மெல்ல மெல்ல ஒரு நிலப்பரப்பின் மக்கள் சமூகம் அடிமைகளாக உருமாற்றம பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. மறுபுறம் நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை, போராடுபவர்களை இந்த நாடு அடையாளம் காண மறுக்கிறது. கிரிகெட் விளையாடும் சச்சின் தேண்டுல்கர் உலகப் பிரபலம். ஆனால், தன் உயிரை பணயம் வைத்து குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை 5 ஆண்டுகளாக நடத்தும் தீஸ்தா செதல்வாத்தை, ஏன் ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை? ஒரு மாபெரும் நாகரீகம், வளரும் பொருளாதாரமாக, மட்டுமே சுருங்கிப்போனது.
      தெகல்கா’ புலனாய்வு உண்மைகள் வெளிவந்ததும் உலகம் முழுவதிலிருந்தும் குடிமைச் சமூகத்தின் குரல்கள் உருப்பெறத் தொடங்கின. உயிரைப் பணயம் வைத்து ஆறு மாதங்கள் புலனாய்வை மேற்கொண்ட ஆஷிஷ் கேத்தன் மற்றும் தெகல்கா’ குடும்பத்தினருக்கு – வழக்கறிஞர்கள், சட்டநிபுனர்கள், எழுத்தாளர்கள், போராளிகள் என பெருங்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்தார்கள். நம் காலத்தின் உண்மையான நாயகர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். ஆம், அதிகாரத்துக்கு எதிராக கலகம் செய்யும் வீரர்கள்.
      வேறு வகையில் பார்த்தால், இது யார் செய்திருக்க வேண்டிய வேலை? 2002 பிப்ரவரி இறுதியில் இனப்படுகொலை நடத்தப்பட்டது. அடுத்த ஆறுமாத காலத்தில் விசாரனைகள் நிகழ்ந்து, மறு விசாரணையும் நடந்து நவம்பர் 2003 வாகிலாவது அரசாங்கம் தனது தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். இந்த தெகல்கா’வின் வாக்குமூலங்களை குஜராத் காவல்துறை அல்லவா பெற்றிருக்க வேண்டும்? இது போன்ற இனப்படுகொலைகளை செய்து வரும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மறுபுறம் ‘பண்பாட்டுக் காவலர்”களைப் போல வலம் வருகின்றன. குருதி தோய்ந்த கரங்களால் கடவுளை தொழுதல், தேர்தலில் முழக்கமிடுதல் என ஒப்பனைகளை கச்சிதமாய் தொடர்கின்றன.
      இவ்வளவு கொடூரங்கள் ஆதாரங்களுடன் வெளிவந்த பிறகும், மீண்டும் நரேந்திர மோடி வெற்றி வாகை சூடி பதவியில் அமர்ந்திருக்கிறார். இதில் வியப்படைவதற்கு ஏதும் இருக்கிறதா? எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. மதவாதத்தை கொள்கையாகக் கொண்டவர்கள், குஜராத் சமூகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்கான சூழலை உருவாக்கி வருகிறார்கள். பால்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என அவர்களின் கரங்கள் நுழையாத இடமேயில்லை. 1985 முதல் நரோடாவிலும் கேதாவிலும் ஆயுதப்பயிற்சியளிக்கும் ‘ஷாகா’க்களை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து நடத்தி வருகிறது. லத்தி கம்புகளை எறிந்துவிட்டு அவர்கள் தானியங்கி துப்பாக்கிகளை கையில் பிடித்து, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது.
      தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வன்ம முகாம்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள், அடுத்த கட்டமாக இந்த முகாமில் பங்கு கொண்டவர்கள், குஜராத் அரசின் பல்வேறு துறைகளிலும் பணியில் அமர்த்தப்பட்டாட்கள். தெகல்கா’ வாக்குமூலங்களில் வரும் அனைவரும் இந்த வதை முகாம்களின் அங்கத்தினரே, ஆயுதங்களை வழங்கும் காவல் துறையினர், கொலைக்காரர்களுக்கு ஆதரவாக செய்ல்படும் அரசு வழக்கறிஞர் எனப் பல வேடங்களை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள். இந்த மரண வியாபாரிகளுக்கு இந்திய முதலாளிகள் பக்கபலமாய் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்பானி, ரத்தன் டாடா என இப்பெரும் படை மோடியுடன் அளவளாவியதை நாம் தொலைக்காட்சிகளில் கண்டோம். ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரும் நிதி வழங்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், இந்திய முதலாளிகளுக்கும் தெகல்கா இந்த வாக்குமூலங்களின் தனியான திரையிடலை ஏற்பாடு செய்யலாம்.
      சமூகத்தில் விதைக்கபட்டுள்ள இந்த நஞ்சை எப்படி அப்புற்ப்படுத்துவது? தேர்தலுக்குத் தேர்தல் பா.ஜ.க. வை உக்கிரமாய் எதிர்த்து முழுக்கம் போட்டால், மதவாதம் அழிந்துவிடுமா? மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் ஊடக புகைப்பட வெளியீட்டால் நிறைவுறுமா? மதச்சார்பின்மை பேசுகிறவர்கள் மதவாத்த்தை மிகவும் தட்டையாக புரிந்து கொண்டுள்ளார்களா? மதவாத்த்தை எதிர்ப்பதற்கான பண்பாட்டுத் தளத்திலான வேலைதிட்டம் ஏன் உருவாக்கபடவில்லை? கே.என்.பனிக்கர், தீஸ்தா செதல்வாத், ராம் புனியானி போன்று மனதின் அடியாழத்தில் இருந்து தொட்ரந்து பேசுபவர்களின் வார்த்தைகளை நாம் வீணடித்து  விட்டோமா? சாதி ஒழிப்பில் முனைப்பில்லாத்தால் தான், மத எதிர்ப்பை பெயரளவில் நிறுத்திக் கொள்கிறோமா? எத்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் நாம்? மதவெறியின் ஆபத்தை உணராத பெரியாரின் வழித்தோன்றல்களாக கருதிக்கொள்ளும் திராவிடக் கட்சிகள், கூச்ச நாச்சமின்றி மாறி மாறி பா.ஜ.கா.வை தோளில் சுமந்து தமிழகத்தில் வளர்ப்பது சரிதானா?
      இந்த தெகல்கா ஆவணங்களின் வாயிலாக மதவெறியின் உண்மை முகத்தை நேரில் காணும் அரிய வாய்ப்பு மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறது. காலம் கனிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரதிகள் கம்பீரமாய் வலம் வரும் போராசிரியர் பந்துக்வாலா, காவல் துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் நம்பிக்க்கின் தூதுவர்களாகத் திகழ்கிறார்கள், இஷான் ஜாப்ரியின் துணைவி சக்கரியா ஜாப்ரி, தெலகாவின் இந்த பதிவுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கிறார். கோத்ராவில் இனப்படுகொலை செய்யபட்ட 2000 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், அகதிகளாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களின் வாழ்க்கை மீட்டெடுக்கபட வேண்டும்.           நன்றி;http://amuthukrishnan.com