ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

17 மார்., 2009

வினோத குரங்கு ?

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 17, 2009 No comments



..ச்சேச்சே..உங்க ஊருக்கு வந்தது (?) நான் இல்லே நான் சுத்த சைவம், உங்க ஊருக்கு வந்து பிரியாணில்லாம் சாப்பிட நம்மால் முடியாது.









ஆமாம், நேத்து சாயங்காலம் அவரு பார்த்தாராம், செல்போன எடுத்துட்டு வந்து போட்டோ எடுக்குறத்துகுள்ள ஓடிடிச்சாம், இவரு வூட்டு மாடிலே தான் தங்கி இருந்திச்சாம்" இப்படி மணிக்கொருதரம் மெருகூட்டப்படும் கலவையான கருத்துக்களுடன், பரங்கிப்பேட்டை பகுதி பரபரப்பின் பிடியில் ஆழ்ந்து போய் இருக்கின்றது, எல்லாம் ஒரு குரங்கு செய்த சேஷ்டை தான், அது பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

பரங்கிப்பேட்டை தோணித்துறை பகுதியில் மனித குரங்கு (?) உலாவுவதாக பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பகலிலும், சில நேரங்களில் இரவிலும் நடமாடுகின்றது என்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த குரங்கின், முகம், கை-கால் ஆகியவை கறுப்பு நிறத்தில் இருப்பதாக சிலர் வதந்தியை பரப்பியுள்ளதாக தினமலர் நாளேடு (15-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.

சாதரணமான குரங்குகளை விட சற்று வினோதமாக காணப்படுவதாகவும், கரடி போல் அதிகமாக முடி உள்ளதாகவும், மேலும், இந்த குரங்கு நேற்று முன்தினம் ரேவு மெயின் ரோடு, ஆற்றங்கரை தெரு போன்ற பகுதிகளிலும் சுற்றி வந்ததாகவும், தினத்தந்தி நாளேடு (16-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.


குறிப்பு: படத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படம் - மாடல்

15 மார்., 2009

ஜமாத் நிர்வாகிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 15, 2009 No comments



14 மார்., 2009

ரோ(ஓ)டு போட்டாச்சு...!!!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, மார்ச் 14, 2009 No comments




தமிழ் கூறும் நல்லுலகத்தில் புதியதாக ஆராய்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட பல சொலவடைகளில் இதுவும் பிரசித்தி பெற்ற ஒன்று தான், அது என்ன தெரியுமா?

"கோடு போட சொன்னால் போதும் ரோடே போட்டுவிடுவார்கள்" என்பது தான்

அதன் பரிணாம வளர்ச்சி தானோ, என்னவோ தெரியவில்லை, பரங்கிப்பேட்டை காஜியார் தெருவில் ரோடு போட சொன்னால் ஓடு போடுகிறார்கள்.

மழைக்காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை முதல் படத்திலும்,
குளிர் காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை இரண்டாவது படத்திலும்
கோடை காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை மூன்றாம், நான்காம் படத்திலும் கண்டு களியுங்கள் (?!)

இனி இளவேனிற் காலம் மட்டும் தான் பாக்கி, அந்த காலத்தில் எப்படியோ?
இப்போது-அப்போது என்று காத்திருந்து வெறுத்து போன திருவாளர் பொதுஜனம் தனது பங்காக சாலைகளில் இருக்கும் பள்ளத்தை ஓடுகளை கொண்டு நிரப்பி விட்டார். பரங்கிப்பேட்டை நகரின் பெரும்பாலான தெருக்களில் சாலைகள் போடப்பட்டிருக்கையில் இந்த காஜியார் தெரு மட்டும் தார் வாடையை நுகராமல்
இருப்பது ஏனோ ?


12 மார்., 2009

சிறுபாண்மை இனத்தினர்காக அனைவர்க்கும் கல்வி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 12, 2009 No comments


கடலூர் மாவட்டத்தில் சிறுபாண்மை இனத்தினர்காக அனைவர்க்கும் கல்வி என்னும் நோக்கத்தில் சிறப்பு மையம் ஒன்று துவக்கப்பட்டது.
நமதூர் பரங்கிபேட்டையில் கடந்த மூன்று வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது பணத்தை செலவு செய்து சிறப்பாக இலவச டியூஷன் நடத்தி வந்த நண்பர்கள் பி என் ஒ (friendspno) அமைப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 அவருக்கு வழங்க படும் என்று C.E.O. அவர்கள் கூறினார்.
முதற் கட்டமாக கடலூர் மாவட்ட்ம் பரங்கிபேட்டையில் அரசு அங்கிகார பெற்ற இலவச டியூஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை (sarva shiksha Abiyan (SSA)) என்னும் இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு மேற்பார்வையிடும் என்றும் கூறினார்.இவற்றை S.ராஜராஜன்(chief education officer ) அவர்கள் துவக்கி வைத்தார்.உபயோகப் பொருட்களை பிளாக் ரிசௌர்ஸ் சென்டெர் (block resourse center) என்னும் ஒரு அமைப்பு கொடுத்தது. மேலும் அரசின் பல்வேறு உதவி திட்டங்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பு:அந்த அமைப்பில் உள்ள ஒருவரை ஆசிரியராக நியமித்துள்ளனர்.

நன்றி;கிரஸண்ட்

ஜெர்மனியில் 17 வயது மாணவன் சுட்டு 15 பேர் பலி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 12, 2009 No comments

ஜெர்மனியில் 17 வயது மாணவன் ஒருவன் தன்னுடைய பழைய பள்ளி வளாகத்திற்கு துப்பாக்கியுடன் சென்று 15 பேரைச் சுட்டுக் கொன்றான். இச்சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.டிம் க்ரெட்ஸ்மர் என்ற அந்த மாணவன் தான் முன்பு பயின்ற ஆல்பர்வில்லே மேல்நிலைப் பள்ளிக்கு புதன் கிழமை காலை 9.30 மணிக்குச் சென்றான். பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்களை அவர்களின் தலையைக் குறிவைத்துச் சுட்டான். இதில் எட்டுச் சிறுமிகள், ஒரு சிறுவன் மற்றும் மூன்று ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மாணவன் காவல்துறைக்குத் தகவல் தந்ததை ஒட்டி காவலர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளியிலிருந்து தப்பிச் சென்ற அவன் வழியில் ஒருவரைக் கொன்று விட்டு, வழியிலிருந்த ஒரு காரைக் கடத்திச் சென்றான். அந்த காரின் டிரைவரை பணயக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டான்.பள்ளியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வென்டிங்கன் என்னும் ஊருக்கு வந்தான். அங்கு தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியில் இருந்த கார் விற்பனை நிலையத்தில் இருவரைக் கொலை செய்தான். காவலர்கள் அவனைச் சுற்றி வளைத்து அவனது காலை நோக்கிச் சுட்டனர். கீழே விழுந்த அவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மரணமடைந்ததாகக் காவல்துறை கூறுகிறது.அந்த மாணவனின் வீட்டைச் சோதனையிட்டதில் அவனது வீட்டில் சமார் 16 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.ஜெர்மனியில் மாணவர்கள் பள்ளிகளில் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு மாணவன் 11 பேரை சுட்டுக் கொன்றான். 2002ஆம் ஆண்டில் பள்ளி ஒன்றில் ஒரு மாணவன் 17பேரைச் சுட்டுக் கொன்றான்.
நன்றி; இந்நேரம்

திடீர் மழை : 40 செம்மறி ஆடுகள் பலி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 12, 2009 No comments


புதுச்சத்திரம் அருகே திடீர் மழையால் 40 செம்மறி ஆடுகள் இறந்தன. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர்காட்டுச்சாகை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், 300க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு கிராம வயல் வெளியில் செம்மறி ஆடுகளை தங்க வைத்து, மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையில், செம்மறி ஆடுகள் மழையில் நனைந்தன.

நேற்று காலை திடீரென 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இறந்தன. இதனால் பெரியப்பட்டு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பெரியப்பட்டு ஊராட்சி தலைவர் கஸ்தூரி பரங்கிப்பேட்டை கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை டாக்டர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். திடீர் மழை காரணமாக உஷ்ணம் அதிகரித்தும், குளிர் தாங்கமுடியாமலும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நன்றி: தினமலர் 12-03-2009

11 மார்., 2009

இறப்புச்செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 11, 2009 No comments

பரங்கிபேட்டையை சேர்ந்த வாகன ஓட்டுனரும் ஜானி பாய் அவர்களின் மகனார் பொத்தி என்கிற செய்யது அஹ்மது அவர்கள் இன்று .மர்ஹுமாகிவிட்டார்கள். அன்னாரின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து சொர்க்கத்தை தந்தருள சகோதரர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கோருகிறோம். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

10 மார்., 2009

மாறிவரும் வானிலை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 10, 2009 No comments


மாறிவரும் வானிலை பரங்கிப்பேட்டையில் குளுமையை ஏற்படுத்த, ரியாதிலோ கடும் மணற்புயல். வாகனத்தில் செல்பவர்களுக்கு எதிரே உள்ளது/வருவது தெரியாத அளவுக்குகடும் மணற்காற்று வீசுகிறது.வெளியே தலைகாட்ட முடியவில்லை.இதனால் சில, பல விமான சேவைகளும் விலக்கப்படலாம் என்று தெரிகிறது.இந்த மணற்புயலைப் போல கடந்த வருடங்களில் கண்டதில்லை என்று ரியாத் வாழ் தமிழர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நன்றி;
செய்தி
mypno.blogspot

மழைக்காலம் ?!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 10, 2009 No comments




அக்னி வெயிலாக இருக்குமோ என மக்களை சந்தேககொள்ளும் படி சில தினங்களாக (நன்னாரி சர்பத்,மற்றும் பல குளிர் பானங்களை நாடும்படி) தன் வேலையை காட்டிய வெயில் யாரிடமும் சொல்லாமல் திடீரென ஜகா வாங்கியது.
நேற்றில்லிருந்து மப்பும் மந்தரமாக காட்சியளித்த வானிலை இன்று காலை வெளுத்துவாங்கியது.
தென்கிழக்கு வங்கக் கடலில்,இலங்கைக்கு (பாவம் இலங்கை, போர் ஒரு பக்கம், புயல் ஒரு பக்கம்) அப்பால் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக நம்ம ரமணன் சார், ஓலி-ஓளி வழியாக ஊரு உலகுக்கு சொன்னார்.
நிஷா வோ அல்லது உஷா வோ மறுப்படியும் ஊருக்கு வராம இருந்தா சரிதான்.

9 மார்., 2009

மூடப்பட்டிருக்க வேண்டும் டாஷ்மார்க்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 09, 2009 No comments

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 10ம் தேதி அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட் டிருக்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி வரும் 10ம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடப்பட்டிருக்க வேண் டும். டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில் லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர் கள் 10ம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை மீறி கடை திறந்து வைத்திருந் தால் கடை மேற்பார்வையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி;
மைபிஎன் ஒ.காம்

மழையும்-மனசும்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 09, 2009 No comments


கடந்த சில தினங்களாக மக்களை வாட்டி வதைத்த வெயில் இன்று காணாமல்போக, காலைமுதல் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது குளிர்ந்த காற்றும் அடிக்கதொடங்கியது. பகலில் தூறலாக மக்களை நனைத்த மழை பிற்பகலில் சற்றே வேகம்காட்டினாலும் , மழையை ரசிக்கும் மூடில் மக்கள் இல்லை
காரணம்;
சுமார் மூன்று மணியளவில் கச்சேரித்தெருவில் குழந்தை ஓன்று கிணற்றில் விழுந்ததாக எழுந்த வதந்தியும், அதனையடுத்து அதிகளவில் பயணிகளை ஏற்றிவந்த டெம்போ கவிழ்ந்ததும் தான்.

கவிழ்ந்தது டெம்போ..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 09, 2009 No comments


மாசி மகம் தீர்த்தவாரியை முன்னிட்டு முட்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இன்று காலை முதல் பரங்கிப்பேட்டை கடற்கரையை நோக்கி மக்கள் வெள்ளம் கரைப்புரண்டது. இத்திருவிழாவில் கலந்துக்கொள்வதற்காக, டெம்போ டிராவலரில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வந்த வாகனம் ஒன்று பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் அருகே கவிழ்ந்தது, இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர், அவர்களை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை செய்தனர்.

அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ வாகனத்தை இயக்க முடியாத சூழ்நிலையில், தகவலறிந்த பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகம் தனது ஆம்புலன்ஸ் வாகனத்தை உடனடியாக அனுப்பி, கவலைக்கிடமான நோயாளிகளை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பேருதவி புரிந்தது. இவ்விபத்தில் காயமடைந்தவர்களை பேரூராட்சி மன்ற தலைவரும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முஹம்மது யூனுஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.

7 மார்., 2009

தள்ளு வண்டி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, மார்ச் 07, 2009 No comments


தள்ளு வண்டி அரசு பேருந்துக்கள் சரிவர பராமரிப்பு இல்லாததால்

பயணிகளால் தள்ளப்படும் நிலையில் உள்ள ஒரு பேருந்து.

இடம் : பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெரு

5 மார்., 2009

உண்ணாவிரதம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 05, 2009 No comments


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மார்ச் 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அதிமுக தலைவி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும், வருகிற 10-ந்தேதி அதிமுக சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். மற்ற மாவட்டத் தலை நகரங்களில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அதில் முதலில் எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு நிதியை அளித்து தொடங்கி வைக்க உள்ளேன். அந்தந்த மாவட்டங்களில் வைக்கப்படும் உண்டியலில் செலுத்தப்படும் நிதிகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் பின்னர் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.என்று கூறியுள்ளார்.

நன்றி;

இந்நேரம் வலைப்பூ

தெருமுனை பிரச்சார கூட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 05, 2009 No comments

தி.மு.க.அரசின் நிதி நிலை அறிக்கை சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெருவில் நடைப்பெற்றது. ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றியபெருந் தலைவருமான முத்துபெருமாள் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாண்டியன், வரவேற்புரையாற்றினார்.தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். கருவறையில் இருந்து கல்லறை வரை மக்களின் தேவை அறிந்து நலதிட்டங்களை அறிவித்து மக்களுக்காகவே உழைக்கக்கூடிய ஆட்சி கலைஞர் தலைமையிலான இந்த அரசு தான் என்றும், இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளின் படி இடஓதுக்கீடு கொடுத்ததும்,மேலும் அமைச்சரைவையில் முஸ்லிம்களை அமைச்சர்களாக்கி அழகு பார்ப்பதும் கலைஞர் தலைமையிலான இந்த அரசுதான் என்றார். எனவே வர இருகின்ற மக்களவை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ், துணை தலைவர் செழியன், வழக்கறிஞர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதி முனவர் ஹூஸைன், காண்டீபன், பைசல், அன்சாரி, அஷ்ரப் அலி, பாவாஜான், ஹபிபூர்ரஹ்மான் மற்றும் தி.மு.க முன்னோடிகள் கலந்துக்கொண்டனர்.

கதிரவனும்..... காலைப் பனியும்...!!!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், மார்ச் 05, 2009 No comments


கடந்த சில நாட்களாகவே பரங்கிப்பேட்டை நகரில் கடும் வெயில் வாட்டி வதைக்கின்றது. இதன் காரணமாக பரங்கிப்பேட்டையின் சிறப்பான உணவு வகைகளில் ஒன்றான நன்னாரி சர்பத் அமோகமாக விற்பனையாகின்றது. மார்ச் மாத தொடக்கத்திலேயே நிலைமை இவ்வாறிருந்தால் கோடைக்காலம் என்றறியப்படும் ஏப்ரல்-மே மாதங்களில் நிலைமை எப்படியோ.? நம்ம அரசியல்வாதிகள் தான் பாவம், மே 13-ல் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு வெயிலில் அலைந்து-திரிந்து மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு பெற வேண்டுமே..!
இதற்கிடையில் காலை-மாலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரத்தில் தொடங்கும் பனி காலை 8 மணி வரை நீடித்து சாலைகளில் பனி மூட்டமாக காட்சியளிக்கின்றது, மேலும் இப்பனியின் காரணமாக குழந்தைகள் காய்ச்சலால் அவதிப்படுகின்றார்கள்.

4 மார்., 2009

தமிழக அரசு அழைப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 04, 2009 No comments

ஹஜ் பயணம் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு.ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள், வரும் 5ம் தேதி முதல் தமிழக ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் விண்னப்ப மனுக்களை பெற்றுக் கொல்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் 31.3.09
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்.
தமிழக ஹஜ் கமிட்டி ,
ரோஸி டவர் (மூன்றாம் தளம்)
எண்; 13, மகாத்மா காந்தி சாலை,
நுங்கம் பாக்கம் - சென்னை

3 மார்., 2009

இலவச பயிற்சி பெறலாம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 03, 2009 No comments

சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.
வேலையில்லாத சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.
தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.வேலையில்லாத சிறுபான்மையின் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின் இளைஞர்கள் பயிற்சிபெற தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு கீழ்கண்ட இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
1. Hardware and Networking ,
2 C, C++
3,DTP,
4,Tally, with MS office
(10-வது வகுப்பில் தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள், மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)இப்பயிற்சி கீழ்க்காணும் இடங்களில் அளிக்கப்பட உள்ளன,சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, திருவள்ளுர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, அரியலூர், தேனி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகர்கோவில், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, சிவகங்கை,இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, தாராபுரம், விருத்தாச்சலம், சிதம்பரம், திண்டிவனம், மார்த்தாண்டம், தக்கலை, திருச்செந்தூர், நாசரேத், கோவில்பட்டி, ஆரணி, செய்யார், போளுர், செங்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஆத்தூர், இராசிபுரம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, குடியாத்தம்,பேரணாம்பட்டு, அரக்கோணம், பள்ளப்பட்டி, அரவங்குறிச்சி, குளித்தலை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையாங்குடி, தேவக்கோட்டை, திருவெறும்பூர், திருச்செங்கோடு, நாமக்கல், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூந்தமல்லி,கூத்தாநல்லூர், பர்க்கூர்,தர்மபுரி, ஓசூர், பொள்ளாச்சி, திருப்பூர், மேலப்பாளையம், விருதுநகர், கடலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஊட்டி, புளியங்குடி, கடயநல்லூர், தென்காசி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, குன்ணூர், மேட்டுப்பாளையம்.சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாநகரங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
5. Multimedia @ Animation
(10-வது வகுப்பில் தேர்ச்சி (அ) தோல்வி அடைந்தவர்கள், (ம) மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)
6. Dot.net (.net)
(பட்டதாரிகளும் (ம) பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)இப்பயிற்சியில் சேர்வதற்குக் கீழ்கண்ட தகுதிகள் இருத்தல் வேண்டும்.
  1. பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,00,000/க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  2. மாணவ/மாணவியர் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.(இசுலாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சீயர்கள்)சமர்ப்பிக்கப்பட்ட வேண்டிய ஆவணங்கள் (நகல்கள் மட்டும்)
  3. சாதிச் சான்றிதழ் நகல்
  4. குறைந்த பட்சம் 10லிஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் அதற்குமேல் படித்திருப்பின் அதற்குரிய நகல்களை இணைக்கலாம்.
  5. வருமான சான்றிதழ் நகல்4) பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ் நகல்.
    நிறுவனங்கள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படும்.
  6. பயிற்சி அளிக்கப்படும் விவரங்கள் CSC ComputerEudcation (தொலைபேசி எண் Chennai 044 - 25393783, 65698566) மூலம் மேற் குறிப்பிட்ட எல்லா 92 இடங்களிலும்.
    IECT(தொலைபேசி எண். 044-42066684/85) மூலம் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் , புதுக்கோட்டை ஆகிய இடங்களில்.
    Hindustan Sorfware Ltd(தொலைபேசி எண், 044-28511411,2,3) மூலம் மதுரை, கோயம்பத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில். Jayaram InfoTech (தொலைபேசி எண், 98421 58228, 9894288350) மூலம் அரியலூர், பெரம்பலூர், நாகபட்டிணம், கோயம்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில்.
  7. Students Software training (
    தெலைபேசி எண், 98847 58845) மூலம் தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், நாகபட்டிணம் (ம) மதுரை ஆகிய இடங்களில்.பயிற்சியில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் உடனே சேர்ந்து பயிற்சி பெறலாம்.
    இப்பயிற்சியின் மூலம் 8818 சிறுபான்மையின் மாணவ/ மாணவியர்கள் பயனடைவார்கள்.
    நன்றி;
    அதிரைpost

2 மார்., 2009

தபால் நிலையத்தில் இனி மருந்துகள் வாங்கலாம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், மார்ச் 02, 2009 No comments

இந்திய தபால் தந்தி துறை ரூ.500 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த நஷ்டத்தை சரிகட்டுவதற்காக அத்யாவசிய மருந்துகளையும், பிற பொருட்களையும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வந்தது.வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறை ப்படுத்தப்படலாமென்று தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 9,124 கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களிலும் இத்திட்டம் துவக்கப்பட உள்ளது.ஆஸ்பிரின், பாராசிட்டமால் போன்ற தலைவலி, காய்ச்சல், இருமலுக்கான மருந்துகள், வைட்டமின், தாதுக்கள் மருந்து, பிற பொது மருந்துகள் இவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளது. அது மட்டுமின்றி, சாதாரண பசை போன்ற, எழுதுபொருட்கள் கடைகளில் கிடைக்கும் பொருட்களும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட திட்டம் உள்ளது. சாதாரண மக்களும் இணைய தள வசதியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தபால் நிலையங்களில் இணைய தள வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர்வாசிகள் குறைந்த கட்டணத்தில், கணினி கல்வி பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.பரிட்சார்த்த கட்டமாக தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு தபால் நிலையங்களில் வணிக ரீதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.மற்ற கடைகளை விட விலை குறைவாகவும் அதே சமயம், விற்பனையாளர்களுக்கு விற்பனை ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றும் இத்திட்டம் வெற்றி பெறும் என்று நம்புவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி;
இந்நேரம்

1 மார்., 2009

புத்தக கண்காட்சி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 01, 2009 No comments

சிதம்பரத்தில் அரிமா சங்கம் சார்பாக 6வது புத்தக கண்காட்சி
துவங்கியது. சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் அமைக்கபட்டுள்ள இந்த புத்தக திருவிழாவில்
பல் வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளன
வரும் 8ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைப்பெறும்.
தொடக்கவிழாவில் பேராசிரியை.பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அண்ணா மலை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு, ராமநாதன் புத்தக கண் காட்சியை துவக்கிவைத்தார்.

அரசு மருத்துவமனையில்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 01, 2009 No comments


உள்ளாட்சிதுறை அமைச்சர் திரு,மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, பால், பழம், பிரட். வழங்கப்பட்டது
ஓன்றிய பெருந்தலைவர் முத்துபெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ், பேரூராட்சி மன்ற துனை தலைவர் செழியன்
தி.மு.க. நகரசெயலாளர் பாண்டியன், இளைஞர் அணி முனைவர் ஹீசைன், பைசல், கவுன்சிலர்கள் பாவாஜான், ஹாஜா கமால்,அபாகான்,
தி.மு.க. முன்னோடிகள் தங்கவேல், Eng. அருள்வாசகம், கோமு, ஆரிபுல்லா, ஜாபர்,ஹாரிஸ். மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.