ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

14 அக்., 2011

நரவேட்டை மோடியை எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட்’டை ஆதரிப்போம்!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, அக்டோபர் 14, 2011 No comments


பிரம்மாண்டமான கோலியாத்தை சிறுவன் டேவிட் வீழ்த்திய கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சமகால இந்தியாவில் மிருகபலத்துடன் அதிகாரத்திலிருக்கும் ரத்தவெறி பிடித்த கோலியாத்து ஒருவனின் முகத்தில் டேவிட் ஒருவர் காறித்துப்பிய சம்பவம் கடந்த வாரங்களில் அரங்கேறியுள்ளது. குஜராத் முதல்வர் நரவேட்டை புகழ் மோடி முகத்தில் வழியும் எச்சிலைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்.
2002ம் ஆண்டு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடந்த இனவழிப்புக் கலவரத்தின் சூத்திரதாரி நரேந்திர மோடி தான் என்றும், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து கூட்டப்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முசுலீம்களுக்கு எதிராக ‘இந்துக்கள்’ தொடுக்கப் போகும் தாக்குதல்களைக் கண்டு கொள்ள வேண்டாம் என்று மோடியே குறிப்பிட்டார் என்றும் சஞ்சீவ் பட் என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி 2010-ம் ஆண்டு ஜனவரி மாதவாக்கில் குஜராத் கலவரத்தை விசாரித்து வரும் சிறப்புப் புலணாய்வுத் துறையின் முன் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வாக்குமூலங்களின் விவரங்கள் கடந்த மார்ச் மாதம் தெகல்கா பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
மோடி சமீப காலங்களாக அகில இந்திய ரேஞ்சுக்கு கனவு கண்டு வருகிறார். இதற்காகவே ஊடகங்கள் மூலம் ஊதிப் பெருக்கி பலவண்ணங்களில் இமேஜ் பலூன்களைப் பறக்க விட்டுள்ளார். இந்நிலையில், சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் அந்த பலூன்களில் ஊசியால் பொத்தலிட்டு விட்டது. சண்டையை மறப்போம், வளர்ச்சியைப் பற்றியும் அதற்குத் தேவையான ‘அமைதியைப்’ பற்றியும் மட்டுமே இனி பேசுவோம் என்று மிகச் சுலபமாக ஆயிரக்கணக்கான முசுலீம் பிணங்களைத் தாண்டிச் சென்று விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த மோடிக்கு சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் ஆப்பறைந்தது. அமுக்கி விடலாம் என்று கணக்குப் போட்ட ரத்த வேட்டையை மீண்டும் விவாதத்திற்கு இழுத்து வந்தார் சஞ்சீவ் பட் – 2002-ல் செத்துப் போன பிணங்கள் மீண்டும் மீண்டும் எழுகின்றன.
இந்தப் பின்னணியில், தனக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் சஞ்சீவ் பட்டை ஒழித்துக் கட்ட, அவர் மேலிருந்த பழைய வழக்குகளை தூசி தட்டி எடுக்கிறார் மோடி. கே.டி பன்ந்த் என்கிற போலீசு கான்ஸ்டபிள், முன்பு குஜராத் கலவரம் தொடர்பாக சஞ்சீவ் பட் விசாரணைக் குழுவின் முன் சமர்பித்த அறிக்கை தவறானதென்றும், தன்னை மேற்படி அறிக்கையில் சாட்சிக் கையெழுத்திட நிர்பந்தித்ததோடு முறைகேடாகத் தடுத்து வைத்தார் என்றும் சஞ்சீவ் பட் மேல் குற்றம் சுமத்துகிறார். முன்னுக்குப்பின் முரணாகவும் நாடகத்தனமாகவும் அமைந்த கே.டி பன்ந்தின் புகாரைக் கையிலெடுக்கும் காவல்துறை, போர்ஜரி, சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சஞ்சீவ் பட் மேல் முதல் தகவலறிக்கையைப் பதிகிறது.
இதனடிப்படையில் கடந்த மாதம் 30-ம் தேதி சஞ்சீவ் பட் கைது செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து அவரது வீட்டை சோதனை என்கிற பெயரில் சலித்தெடுக்கும் போலீசு, குஜராத் கலவரம் தொடர்பான ஆவணங்களைத் தேடியுள்ளனர். எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட்டை மிரட்டி பீதியூட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நீதி மன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சஞ்சீவ் பட்டை போலீசு காவலில் எடுத்து ‘விசாரிக்க’ போலீசு முயன்று வருகிற நிலையில், சஞ்சீவ் பட் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சஞ்சீவ் கைது செய்யப்பட்டிருக்கும் சட்டப்பிரிவுகள் எளிதில் பிணை கிடைக்கக் கூடிய பிரிவுகள் தான் என்றாலும், அவரை போலீசு காவலில் எடுத்து சித்திரவதை செய்து பணிய வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், பிரபலமான வழக்கறிஞர்களை இறக்கியுள்ள குஜராத் அரசு, பிணை வழங்குவதை எதிர்த்து வாதாடி வருகிறது.
இதற்கிடையே நீதி மன்றத்துக்கு வெளியே மனித உரிமை அமைப்புகள் சஞ்சீவின் விவகாரத்தைக் கையிலெடுத்து போராடிக் கொண்டிருக்கின்றன. அறிவுத்துறையைச் சேர்ந்த பலரும் மோடியின் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்டித்து வருகிறார்கள். உடனடியாக சஞ்சீவ் பட்டை போலீசு கையில் ஒப்படைத்தால் ஓரளவு கிழிசல்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் யோக்கியவான் முகத்திரையும் ஒட்டுமொத்தமாக அவிழ்ந்து விடும் என்று தயங்கும் நீதி மன்றம், பிணை வழங்குவது அல்லது போலீசு காவலுக்கு அனுப்பது தொடர்பான தனது முடிவை தொடர்ந்து ஒத்தி வைத்து வருகிறது.
இந்நிலையில் தான் கடந்த 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சீவிடம், மூன்று மணிநேரங்களாவது போலீசு காவலுக்கும் ‘விசாரணைகளுக்கும்’ சம்மதித்தால், இன்றே பிணை வழங்குவதாக செஷன்ஸ் நீதிபதி ஜி.என் பட்டேல் பேரம் பேசியுள்ளார். அதே இடத்தில் நீதிபதிக்குப் பதிலளித்த சஞ்சீவ், “பொறுக்கிகளோடும் கிரிமினல்களோடும் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது அறம் சார்ந்த போராட்டம். எனது ஜாமீன் கோரிக்கை மனுவின் மேல் நியாயமாக நீங்கள் அளிக்கும் சட்டப்பூர்வமான உத்தரவு என்னவோ அதற்குக் கட்டுப்படுகிறேன். ஏழு நாட்களல்ல பதினான்கு நாட்கள் கூட போலீசு காவலில் இருக்க எனக்குச் சம்மதமே.” என்று முழங்கியுள்ளார். நீதிபதி தனது முகத்தில் விழுந்த எச்சிலை துடைத்தாரா என்பது தெரியவில்லை.
தங்கள் நோக்கத்திற்காக கொலை செய்யவும் தயங்காதவர்கள் என்பதை இந்துத்துவ பயங்கரவாதிகள், வரலாற்றில் எண்ணற்ற முறை பதிவு செய்தவர்கள் தான். தன்னோடு முரண்படுவது சொந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஏன் அது ஒரு முன்னாள் அமைச்சராகவே இருந்தாலும் கொல்லத் துணியாதவர் மோடி என்பதை ஹிரேன் பாண்டியாவின் கொலைச் சம்பவத்தில் நாடே பார்த்தது. இப்போது சஞ்சீவ் பட்டை போலீசு காவலில் எடுக்கத் துடிப்பதும் கூட அவரை சித்திரவதைகளுக்குள்ளாக்கி மௌனமாக்கத் தான் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். இதையும் கடந்து சஞ்சீவின் மேல் பாய்ந்து குதறத்துடிக்கும் மோடிக்கு அதற்கான வேறு காரணங்களும் இருக்கின்றன.
தற்போது சஞ்சீவின் பிணை மனுவை எதிர்த்து அரசின் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள கே.வி ராஜு என்கிற அதே வக்கீல் தான் ஹிரேன் பாண்டியா கொலை வழக்கில் அவரது மனைவி ஜாக்ருதி பாண்டியா சார்பிலும் ஆஜராகிறார். ஏற்கனவே சஞ்சீவ் அளித்துள்ள வாக்குமூலத்தில், 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடந்த கூட்டத்தில் ஹிரேன் பாண்டியாவும் பங்கேற்றார் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் சஞ்சீவ் அளித்த வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டிருந்த விவரங்களையே, 2002-ம் ஆண்டு மே 13ம் தேதி கலவரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஹிரேன் பாண்டியாவும் வாக்குமூலமாக அளித்திருந்தார். அதில் இந்துக்களின் தாக்குதலை போலீசு கண்டு கொள்ளக் கூடாது என்று அதிகாரிகளிடம் மோடி வாய்மொழி உத்தரவிட்டதைக் குறிப்பிட்டிருந்தார். இந்த உண்மையை வெளியிட்ட சில நாட்களிலேயே ஹிரேன் பாண்டியா இந்துத்துவ குண்டர்களால் கொல்லப்பட்டார்.
தற்போது, சஞ்சீவ் அளித்த வாக்குமூலத்தையே சர்ச்சைக்குள்ளாக்கும் விதமாக பொய்க்கேசு போட்டிருக்கும் மோடி, இதற்காக ராஜுவைக் களமிறக்கியிருப்பதன் மூலம் ஹிரேன் பாண்டியா வழக்கை சிதைத்து விடலாம் என்று கணக்குப் போடுகிறார்.
அரசியல் அதிகாரம், பார்ப்பனியமயமாக்கப்பட்ட அரசு இயந்திரத்தின் பக்கபலம் என்று சகல விதத்திலும் ஆயுதபாணியாக நிற்கும் ஒரு ரத்தவெறி கொண்ட மிருகத்தின் முன் சஞ்சீவ் பட் ஏந்தியிருப்பது உண்மை என்கிற ஆயுதம் மட்டுமே. ஆயிரக்கணக்கான மக்களை தெருநாய்களைக் கொல்வது போல் கொன்று குவித்து விட்டு, அந்தப் பிணங்களின் மேல் வெற்றி ஊர்வலம் நடத்தத் துடிக்கும் மோடியை தனியாளாக எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட் அதிகார வர்க்கம் கண்டிராத அபூர்வமான மனிதர். அவரது போராட்டத்தை ஆதரிப்பு நமது கடமை..
தெகெல்காவின் கட்டுரைகளுக்கான இணைப்பு
நன்றி_http://www.vinavu.com

22 செப்., 2011

மோடியின் உண்ணாவிரதம்...???

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், செப்டம்பர் 22, 2011 No comments


மத நல்லிணக்கத்துக்காக குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி மூன்று நாள் உண்ணாவிரதமாம்! ஆம், ஆடுகளுக்காக ஓநாய் உண்ணாவிரதம் இருக்கிறது - புள்ளிமான்களின் உரிமைக்காக, நன்மைக்காக புலிகள் மாநாடு நடத்துகின்றன; எலிகளின் வாழ்வுரிமைக்காக பூனைகள் கூடிப் பேசுகின்றன என்பதைக்கூட நம்பினாலும் நம்பலாம்! மதநல்லிணக்கத்துக்காக மோடி உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதை நம்ப முடியுமா? பைத்தியக்காரன்கூட நம்ப மாட்டான்.

தமிழ்நாட்டில் உள்ள சோ குருமூர்த்திகள் அடுத்த பிரதமர் மோடிதான் என்று கொஞ்ச காலமாகவே காற்றடித்துக் காற்றடித்து விளம்பரப் பலூனை ஆகாயத்தில் பறக்க விட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், மாவட்ட நீதிமன்ற அளவிலேயே மோடி மீதான வழக்கைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாம்; அவ்வளவு தான் மோடியைக் குற்றமற்ற நிரபராதி என்றே உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது போல வாண வேடிக்கைவிட ஆரம்பித்து விட்டனர்.

எவ்வளவுப் பெரிய மோசடி! இதே உச்சநீதிமன்றம் இதே மோடியைப்பற்றி இதற்குமுன் என்ன கூறியது?

ஆதரவற்ற குழந்தைகள், அபலைப் பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்ட பொழுது முதல் அமைச்சர் நரேந்திரமோடி அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்த நீரோ மன்னன் என்று சொல்லவில்லையா? உச்சநீதிமன்றத்தில் இந்த விமர்சனத்துக்குப் பிறகு மோடி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமாவா செய்தார்?

2002 பிப்ரவரி 27 ஆம் தேதி கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டு 95 பேர் மரணம் அடைந்த போது, மோடியின் ஆட்சியில் 22 மணி நேர இடைவெளியில் இரண்டாயிரம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படவில்லையா?

ராம பக்தர்கள் படுகொலை செய்யப்பட்டதன் எதிர்விளைவே இஸ்லாமிய மக்களின் படுகொலை என்று தான் ஒரு முதல் அமைச்சர் என்ற பொறுப்பை மறந்து விமர்சனம் செய்யவில்லையா மோடி?

சர் அய்சக்நியூட்டன் கூறியதையெல்லாம் எடுத்துக்காட்டவில்லையா? எந்த வினைக்கும் எதிர்வினையுண்டு என்று இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது விஞ்ஞான ரீதியாக சரிதான் என்று சொன்ன கொடுங்கோலன் - இப்பொழுது மத நல்லிணக்கத்துக்காக உண்ணா விரதம் இருக்கிறாராம்.

பெரு முதலாளிகள் பார்ப்பனர்கள், காவிக் கூட்டம் மோடியைப் பிரதமராக்கத் துடிப்பது - ஏன்? நாட்டை இந்துக்கள் ஒரு பக்கம், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட வேற்று மதக்காரர்கள் இன்னொரு பக்கம் என்று பிரித்து நாட்டை மதவாரியாகத் துண்டு போட்டு ஆட்சி நடத்த வேண்டும்; ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் சதியாகும்.
மதச் சார்பின்மை என்பது பார்ப்பனர்களுக்கு அனுகூலமானதல்ல. இதில் மாற்று மதக்காரர்களுக்கு சலுகைகள், வாய்ப்புகள் இருக்க வாய்ப்பு உண்டு. வேறு சில நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருக்கும் போது, இந்தியா ஏன் ஒரு இந்து நாடாக இருக்கக் கூடாது? என்பதுதான் அவர்களின் நோக்கமும் - ஆசையும். அந்த இந்து ராஜ்ஜியம் என்பது என்ன? மனுதர்ம ராஜ்ஜியம்தானே? நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக்கும் பார்ப்பனர்கள், நூற்றுக்கு 97 மக்களாக இருப்போர்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுதானே அந்த இந்து ராமராஜ்ஜியம்?

ஒரு பார்ப்பான் பிரதமராக இருந்து இந்து ராஜ்ஜியம் நடத்தினால் பார்ப்பனர் அல்லாதார் மக்கள் மத்தியில் விரைவில் அடையாளம் காணப்பட்டு விடும் என்பதால் நரேந்திரமோடி போன்ற சூத்திரர்களைப் பிடித்து காரியம் சாதித்துக் கொள்வது என்ற தந்திரம்தான் இதன் பின்னணியில்!

உண்மையான புலிகளைவிட வேடம் போட்ட புலிகள்தானே அதிகமாகக் குதிக்கும்?

இருப்பதிலேயே மிகவும் குரூரமான ஓர் ஆளைப் பிடித்து பிரதமராக்க வேண்டும் என்பது - பார்ப்பனர்களின் ஆழமான சதி; எச்சரிக்கை! எச்சரிக்கை!!

நன்றி:
-------------------”விடுதலை” தலையங்கம் 20-9-2011 

20 செப்., 2011

யாருக்கு சீட்டு....?

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், செப்டம்பர் 20, 2011 No comments





பரங்கிப்பேட்டை நகரில் அவ்வப்போது சூழும் கார்மேகங்கள் போல் அல்லாமல் கடந்த சில வாரங்களாகவே தேர்தல் மேகமும் சூழ்ந்தபடியே இருக்கிறது. தனித்தனி சந்திப்புகள், ஆலோசனைகள் என்று தொடரும் இச்சூழல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க-வும், தி.மு.க.வும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான விருப்ப மனுவை பெற்று களத்தில் துடிப்புடன் இருக்கிறது. ஆளும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நகர அவைத்தலைவர் மலை.மோகன், நகர செயலாளர் K.மாரிமுத்து, சிறுபான்மை பிரிவு நிர்வாகி H.ஷாஜஹான், புலவர் C.K.சீனிவாசன், ஜெய்சங்கர் ஆகியோர்கள் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
பேரூராட்சி மன்ற தலைவர் போட்டியில் தி.மு.க. சார்பில் தற்போதைய பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி A.R.முனவர் உசேன், நகர தி.மு.க. செயலாளர் J.பாண்டியன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி காண்டீபன், மகளிரணி பொற்செல்வி என்று நீளும் இப்பட்டியலில் மற்றொரு பிரமுகரும் இருக்கிறார், ஆனால் அவர் மாவட்ட தி.மு.க.நிர்வாகிகளிடம் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை, எனவே சுயேட்சையாக போட்டியிடலாம் என்று தெரிய வருகிறது, எனினும் இச்செய்தி அவர் தரப்பு ஆதரவாளர்களால் மறுக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் S.நூர் முஹம்மது போட்டி இடுவார் என்று தெரிய வருகிறது. பா.ம.க சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக தெரிய வருகிறது. சுயேட்சையாகவும் ஓரிருவர் போட்டி இடலாம்.
வார்டுகளை பொறுத்த வரையில் மிகுந்த பரப்பரப்பான தருணங்களாகவே நிமிடங்கள் நகர்கிறது. குறிப்பாக நகுதா மரைக்காயர் தெரு, கோட்டாத்தாங்கரை தெரு தில்லி சாஹிப் தர்கா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 5-வது வார்டில் பலர் போட்டியிட விரும்புவதால் இந்த வார்டு நகரில் பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
தி.மு.க.சார்பில் போட்டியிட 1-வது வார்டில் H.அஜீஸ் அஹமது, U.ஹபீபுர் ரஹ்மான், 2-வது வார்டில் பஷிரியாமா ஜாபர், உம்மா சல்மா, 4-வது வார்டில் செழியன், 5-வது வார்டில் ஜாபர் ஷெரீப், M.G.M.ஹாஜா கமால், 6-வது வார்டில் ஜம்ஷீத் பீவி, 7-வது வார்டில் காண்டீபன், அஹமது, 8-வது வார்டில் கோவிந்தராஜ், காண்டீபன், 9-வது வார்டில் ஜுனைதா, கவுசுன்னிசா, 10-வது வார்டில் பாத்திமா ஹபீபுல்லாஹ், 11-வது வார்டில் அஜீதுத்தீன், S.O.செய்யது ஆஃரிப், H.இப்ராஹீம் ஆகியோர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் H.செய்யது அலி 1-வது வார்டில் போட்டியிடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இதுப்போன்ற உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் ஆர்வம் காட்டாத நிலை இருந்ததால் பெரும்பாலான வார்டுகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர், பின்னர் நிலைமை மெல்ல மாற்றம் அடைந்து ஓரிவருர் என்ற வகையில் தொடர்ந்து, இப்போது பலர் தேர்தல்களில் போட்டியிட ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ உள்ளாட்சி மக்களுக்கு நன்மை தரும் நல்லாட்சியாக அமையட்டும்.
http://www.mypno.com/
நன்றி 

19 செப்., 2011

50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி!

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், செப்டம்பர் 19, 2011 No comments



50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி!

டாக்டர்களின் ஊகங்களை முறியடித்துதலை ஒட்டிப் பிறந்தஆண்பெண் இரட்டையர்கள் தங்கள், 50வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினர்.

ஜார்ஜ் மற்றும் லோரி சேப்பல் என்ற ஆண்பெண் குழந்தைகள் இருவரும், 50 ஆண்டுகளுக்கு முன்அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தனர்.
பிறக்கும் போதேஇருவரது தலையும் ஒட்டியே இருந்தது. அதோடு தலையின் முக்கிய நரம்புகளும்மூளையில், 30 சதவீதமும் இருவருக்கும் பொதுவாக இருந்தன.
இதனால்மருத்துவ வசதிகள் அதிகமாக முன்னேறாத அக்காலத்தில்இந்த விசித்திரமான பிறவிகள்நீண்ட நாள் வாழ முடியாது எனடாக்டர்கள் கைவிரித்து விட்டனர்.
ஆனால்டாக்டர்களின் ஊகங்களை முறியடித்துஇவர்கள் தற்போது தங்களது, 50வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர்.
இந்தக் கொண்டாட்டத்தை லண்டனில் நிகழ்த்தியுள்ள இவர்களில்லோரி ஐந்தடி அங்குல உயரமும்ஜார்ஜ் நான்கடி அங்குல உயரமும் கொண்டவர்களாக தற்போது உள்ளனர்.
ஜார்ஜ் மேற்கத்திய இசைப் பாடகராகத் திகழ்கிறார். லோரி "டென் பின் பவுலிங்என்ற விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.வாழ நினைத்தால் வாழலாம் என்ற பழமொழிக்கு இலக்கணமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தங்களது வாழ்க்கை குறித்து, "டெய்லி மெயில்பத்திரிகைக்கு லோரி அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் பிறந்த போதுஎங்களது வாழ்க்கை மிஞ்சிப் போனால், 30 ஆண்டுகளைத் தாண்டாது என்று கூறினர்.
ஆனால்அவர்களின் ஊகங்கள் தவறு என்றுநாங்கள் நிரூபித்து விட்டோம். கடந்த 50 ஆண்டுக்கால வாழ்க்கையில் நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். எங்கள் வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து முடிப்போம்'என்று பெருமிதத்துடன் கூறினார்.
நன்றி;TMB

13 செப்., 2011

பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், செப்டம்பர் 13, 2011 1 comment


பரங்கிப்பேட்டை: நடைபெறவிருக்கும் பரங்கிப்பேட்டை பேரூரட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கட்சிகள் சார்பாக சீட் கேட்டு விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பரங்கிப்பேட்டை நகர தி.மு.க. அமைப்பாளர் ஏ.ஆர். முனவர் உசேன் பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கோரியுள்ளார். சிதம்பரத்தில் உள்ள தி.மு.க.வின் தேர்தல் அலுவலகத்தில் முன்னால் அமைச்சர்கள்
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கு.பிச்சாண்டி மற்றம் நகர தலைவர் பாண்டியன் முன்னிலையில் விருப்பமனு அளித்துள்ளார்.
நகர தி.மு.க.வில் பிரபலமானவரும், 10-வது வார்டின் முன்னால் உறுப்பினருமான ஏ.ஆர். முனவர் உசேனுக்கு நிச்சயமாக சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக அவரதுஅதரவாளர்கள் கூறுகின்றனர்.
நன்றி

8 செப்., 2011

சிதம்பரத்துக்கு,புதிய ஏ.எஸ்.பி.யாக துரை

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், செப்டம்பர் 08, 2011 No comments


சிதம்பரம் நகரம் அமைதி பூங்காவாக திகழ போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என புதியதாக பொறுப்பேற்ற ஏ.எஸ்.பி., கேட்டுக் கொண்டுள்ளார். சிதம்பரம் டி.எஸ்.பி.,யாக இருந்த நடராஜன் சென்னை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதையடுத்து சிதம்பரத்திற்கு புதிய ஏ.எஸ்.பி.,யாக துரை நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தர்மபுரியைச் சேர்ந்த இவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் பயிற்சி முடித்துவிட்டு வந்துள்ளார். ஐ.பி.எஸ்., முடித்துள்ள இவர் எம்.எஸ்சி., விவசாயம் படித்து அதே துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

சிதம்பரத்தில் பொறுப்பேற்ற ஏ.எஸ்.பி., துரை நிருபர்களிடம் கூறியதாவது: கோவில் நகரமான சிதம்பரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, குற்றம் சம்பவங்கள் எதுவும் இல்லாத அமைதியான நகரமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் முழுமையாக கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து சீரமைப்பிலும் தனி கவனம் செலுத்தப்படும். நகரம் அமைதி பூங்காவாக திகழ போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு ஏ.எஸ்.பி., துரை கூறினார்.

நன்றி,தினமலர்

7 ஜூலை, 2011

தயாநிதிமாறன் ராஜினாமா...?!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், ஜூலை 07, 2011 No comments



2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் தயாநிதி மாறனுக்கும் பங்கு உண்டு என்று சி.பி.ஐ., நேற்று அம்பலப்படுத்தியது.
ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரன் ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு விண்ணப்பித்த போது தயாநிதிமாறன் சுமார் 2 ஆண்டுகளாக உரிமம் கொடுக்காமல் இழுத் தடித்தார். இதையடுத்து சிவசங்கரன் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு விற்றார். தயாநிதிமாறன் மிரட்டியதால் தனது நிறுவன பங்குகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக சமீபத்தில் சி.பி.ஐ.யிடம் சிவசங்கரன் வாக்கு மூலம் அளித்தார்.
இந்நிலையில் பிரதமர் தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி மாறன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் தயாநிதியை பதிவி விலகும்படி பிரதமர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

UAE – விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், ஜூலை 07, 2011 No comments

இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) – SPONSOR’S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் குடியேற்ற சோதனையின்போது இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே,மேற்கொண்டு பயணம் செய்ய முடியும். இந்தப் படிவம் சமர்பிக்கப்படாத பயணிகள், விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் படுவதாக துபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசிட்டிங் விசாவில் வேலை தேடுபவர்கள் முறையான ஏற்பாடுகள் இல்லாமல் சிரமப்பட்டு இந்திய தூதரகத்தை அணுகுகின்றனர். மேலும் சிலரோ தவறான வழிகாட்டல் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பிட்ட விசா காலத்திற்கும் அதிகமாக தங்கியவர்கள் (OVERSTAY / கல்லிவல்லி) துபாய் காவல்துறையினரிடம் பிடிபட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், விசிடிங் விசாவில் வருபர்கள் தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது அவசியம்.

நன்றி:

18 ஜூன், 2011

டாஸ்மாக் மதுபானக்கடையினை உடனே அப்புறப்படுத்தவேண்டும்...!.

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஜூன் 18, 2011 No comments


பரங்கிப்பேட்டையில் பேருந்து நிலையம், காவல் நிலையம், நீதிமன்றம், பள்ளிவாசல், குடியிருப்புகள் அருகில் அமைந்திருக்கும் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடையினை அங்கிருந்து அகற்றி பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு நல்ல சூழல் அமைத்து தந்திட வேண்டுமென்று ஊர் பொதுநல அமைப்புகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் பயனில்லை. பரங்கிப்பேட்டை மக்கள் நலனை 
பாதுகாக்க புதிய அரசு முன்வந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையினை உடனே அப்புறப்படுத்தவேண்டும். மக்களின் நலனை பாதுக்காக்க புதிய அரசு உடனடியாக முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று இன்று வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ பரங்கிப்பேட்டை கிளை தங்களின் எதிர்ப்பார்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

நன்றி : MYPNO.COMwww.mypno.com

பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஜூன் 18, 2011 No comments


சுயநிதியில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணத்தை, நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு வெளியிட்டது. இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலகத்தில் பள்ளி நிர்வாகங்களிடம், நேற்று புதிய கட்டண பட்டியலை வழங்கினர். மொத்தம் 310 பள்ளிகளில், 125 மெட்ரிக் பள்ளிகள், 156 நர்சரி பள்ளிகள், 16 மாநில பாடத்திட்ட பள்ளிகள் என, 297 பள்ளிகளுக்கு கட்டணம் வெளியிடப்பட்டது.
மேற்படி இணைய  தளத்தில்  வெளியாகியுள்ள நம் ஊர் பள்ளிகளின் கட்டண விபரம் :
 பள்ளியின்  பெயர் , முகவரி
 LKGUKG II III IV 
சாக்ரடீஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல்
25, வரதராஜ பெருமாள் கோயில் தெரு
பரங்கி பேட்டை
 30503050 36503650 3650 3650 3650 
மஹ்மூதியா ஓரியண்டல்   நர்சரி & பிரைமரி ஸ்கூல்
14A , மீராப்பள்ளி தெரு
பரங்கி பேட்டை
 15001500 1850 1850 1850 1850 1850 
பாபா வித்யாலயா  நர்சரி & பிரைமரி ஸ்கூல்
 28A, பீட்டர் தெரு
பரங்கி பேட்டை
 335033503600 3600 3600 3600 3600 
ஸ்ரீ லட்சுமி நர்சரி & பிரைமரி ஸ்கூல்
சஞ்சீவிராயர்   தெரு
பரங்கி பேட்டை
 2850 2850 28503650 3650 3650 3650 
 
 LKG
UKG 
II 
III 
IV 
V 
சேவா மந்திர் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்
பரங்கி பேட்டை
 41504150 4800 4800 4800 4800 4800 

 VI 
 VII 
 VIII 
 IX 
 
 XI
 XII 
  5250 5250  5250  6700  6700 17100 17100 
 கலிமா  மெட்ரிகுலேஷன் ஸ்கூல்
பெரிய தெரு
பரங்கி பேட்டை

 LKG
UKG 
II 
III 
IV 
V 
 2050 2050 3750 3750 3750 37503750 
 VI
VII 
VIII 
IX 
XI 
XII 
 6100 6100 6100  8200  8200 11300 11300