மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரிகளிடம், மக்கள் தயக்கமின்றி விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள், 5 நகராட்சி ஆணையர்கள், நெய்வேலி என்.எல்.சி. துணைப் பொதுமேலாளர் (கல்வி) ஆகியோர் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு, பொறுப்பு அலுவலர்களாக உள்ளனர். 4,037 கணக்கெடுப்பாளர்கள், 659 மேற்பார்வையாளர்கள் இப்பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கணக்கெடுப்பின்போது பெயர், குடும்பத் தலைவரின் உறவு முறை, இனம், பிறந்த தேதி, மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 29 கேள்விகளுக்கு விவரங்கள் சேகரிக்கப்படும். இவ்விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அதனால் அனைத்து விவரங்களையும் தயக்கமில்லாமல் தெரிவிக்கலாம்.
கணக்கு எடுக்க வருவோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் மட்டுமே தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். கணக்கெடுப்புப் பணிக்கு வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு வீடுகளுக்கு அலுவலர்கள் வீடுகளுக்கு வரவில்லை என்றால் கீழ்காணும் தொலைபேசிகளில் புகார் தெரிவிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: 04142- 220029.
கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம்,04142- 231284.
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம், 04144- 222256.
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், 04143- 260248.
கடலூர் வட்டாட்சியர் அலுவலகம், 04142- 295189.
பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம், 04142- 242174.
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகம், 04142- 258901.
சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம்,04144- 222322
காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம், 04144- 262053.
விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம், 04143- 238289.
திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம், 04143- 255249.
கடலூர் நகராட்சி ஆணையர், 04142- 230021.
பண்ருட்டி நகராட்சி ஆணையர், 04142- 242110
நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர்,04142- 272249.
சிதம்பரம் நகராட்சி ஆணையர்,04144-222231.
விருத்தாசலம் நகராட்சி ஆணையர், 04143- 230240.