ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

7 டிச., 2010

நீடுர் நகரில் மருத்துவக்கல்லூரி..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், டிசம்பர் 07, 2010 No comments

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ.அப்துர் ரஹ்மான் அவர்களின் பெருமுயற்சியின் காரணமாக நீடுர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹூதா அரபிக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் நீடுர் நகரில் நடைப்பெற்றது ,அதனை தொடர்ந்து இரண்டாம் அமர்வு கடந்த சனிக்கிழமையன்று சென்னை அபு பேலஸ் ஹோட்டலில் நடைப்பெற்றதுகூட்டத்திற்கு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோஅப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர்S.M..ஹிதாயத்துல்லாஹ் முன்னிலை வகித்தார்.

பரங்கிப்பேட்டையில் ஏற்பட்டுள்ள மழை – வெள்ள நிவாரணப்பணிகளில் ஈடுப்பட்டு இருப்பதின் காரணமாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையினால் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் ஆலோசனைக் குழு உறுப்பினர் தவ்ஹீத் தலைமையில் அபுல்ஹஸன்தெளலத் அலி,ஹாஜாஹம்துன் அப்பாஸ்சாஹுல் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் எம்.ஜி.ஆர்மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன்ஓய்வு பெற்ற IAS அதிகாரியும்காஷ்மீர் மாநில முன்னாள் தலைமை செயலாளருமான மூசா ராஜாஆடிட்டர் முஹம்மது, கேப்டன் அமீர் அலி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள்,பல்துறை நிபுணர்கள்கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஊக்க உரை நிகழ்த்திய டாக்டர் மீர் முர் முஸ்தபா உசேன்மூசா ராஜா IAS , ஆடிட்டர் முஹம்மது, கேப்டன் அமீர் அலி ஆகியோர் பல்வேறு அரிய ஆலோசனைகளையும்துறை சார்ந்த அனுபவங்களையும் வழங்கினார்கள்.

கவிக்கோ தனது தலைமையுரையில், “எட்டாம் நூற்றாண்டிலிருந்து பண்ணிரெண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமியர்கள் பல துறைகளில் ஆண்டு வந்தார்கள். விஞ்ஞானம் என்பது இஸ்லாமியர்கள் ஐரோப்பியர்களுக்கு வழங்கிய பிச்சை. மருத்துவத்துறை நம் சமுதாயத்திற்கு புதியதும் அல்லமருத்துவ துறையில் தலைச்சிறந்து விளங்கிய இஸ்லாமிய சமுதாயம் தான் இன்று மிகப்பெரிய நோயாளிசமுதாமாக இருக்கிறது”, என்று ஆதங்கப்பட்ட கவிக்கோ, இறைவன் நாடினால் அமையவிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது என்று குறிப்பிட்டார், தொடர்ந்து பேசுகையில், விரைவில் வேலூர் மாவட்டத்தில் ஒரு சட்டக்கல்லூரி அமையவிருக்கிறது என்றும், அலிகார் பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்று தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது போன்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் 65 உறுப்பினர்கள் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான பங்களிப்பு காசோலைகளை வழங்கினார்கள். பரங்கிப்பேட்டை சார்பில் 6 காசோலைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வழங்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் தனியார்(கள்) பெயரில் தான் அமைந்திருந்தது. அதில் விதிவிலக்காக ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்ட ஒரே காசோலை பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டதே ஆகும். இதன் மூலம் ஆண்டு தோறும் ஒரு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு நமது சமுதாய மக்கள் பயனடையும் வகையில் நமது ஜமாஅத்-திற்கு கிடைக்கும். தொடர்ந்து இதுப்போன்ற ஆலோசனை கூட்டங்கள் திருநெல்வேலி, கீழக்கரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் நடைப்பெற இருக்கிறது

கூட்டத்தின் இறுதியில் வக்ஃப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர் நன்றியுரையாற்றினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இக்பால், சாதிக் மற்றும் நீடுர் மதரஸா நிர்வாகிகள், வக்ஃப் வாரிய ஊழியர்கள் செய்திருந்தனர்.









டிசம்பர் – 6

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், டிசம்பர் 07, 2010 No comments

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மனிதநேய மக்கள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் தொடர் முழக்க தர்ணா போராட்டம் காட்டுமன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மெஹ்ராஜ்தீன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பரங்கிப்பேட்டை நகர தமுமுக – ம.ம.க. சார்பில் தலைவர் ஜாக்கீர் ஹுஸைன் தலைமையில் ஒன்பது கார்கள், இரு வேன்களிலும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை ஹஸன் அலி, செய்யது, பிலால் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்




மக்கள் தொகை விபரங்கள்...

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், டிசம்பர் 07, 2010 No comments


பரங்கிப்பேட்டை ஹாஜி எஸ்.ஒ.அலாவுதீன்  துணைத் தலைவராக பதவி வகிக்கும் ஐக்கிய நல கூட்டமைப்பின் சிறந்த திட்டங்களுல் ஒன்றான அனைத்து ஊர்களிலும் முஸ்லிம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக பரங்கிப்பேட்டையில் இரண்டு சகோதரர்களை  நியமித்து முழுகணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சமுதாய மக்களின் அனைத்து விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது உதவி தேவைப்படும் சகோதர சகோதரிகளுக்கு மனமுவந்து உதவி செய்வதை வரவேற்கிறோம் என்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

6 டிச., 2010

மீண்டும் பலத்த மழை வாய்ப்பு..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், டிசம்பர் 06, 2010 No comments

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக உருவாகி வந்த  காற்றழுத்த தாழ்வு நிலை  ஆந்திர கடலோரப் பகுதிக்கு நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தென் தமிழகத்தில் இதுவரை கொட்டித் தீர்த்த மழையின் வெள்ளம் வடியாமல் உள்ளது. இதனால் 10 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடலோர மாவட்டங்களில், அதிலும் வட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஒரு வாரமாக மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழக கடலோ மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து வடக்கு நோக்கி நகர்ந்தது. அதன் மையப்புள்ளி, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களை ஒட்டி இருந்தது. இதனால் இந்த இரு மாவட்டங்கள் மற்றும் அதை ஒடியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இந்த மழையினால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஏரி, குளம், நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டன. மேலும் நெற்பயிர் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.


சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டுள்ளது.  அதிகாரிகள் ஆய்வு: இந்த பாதிப்புகளை நேரில் கண்டறிந்து நிவாரணப்பணிகளை மேற்கொள்ள 8 ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேற்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். சேத விவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தனர்.கடலூர் மாவட்டத்தில்,இம்மாவட்டத்தில் முன்பு கலெக்டராக பணியாற்றிய  திரு,ககன்தீப் சிங் பேடி (குடிநீர்வடிகால்வாரியஇயக்குனர்) அவர்களிடம், பொதுமக்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை  தெரிவித்தனர்.

மாவட்டங்களில் ஆய்வு நடத்திய ஐஏஎஸ் அதிகாரிகள், அரசுக்கு மழை வெள்ள சேதம் குறித்த அறிக்கையை இன்று சமர்ப்பிக்க உள்ளனர். இதற்காக, தமிழக அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் நாளை நடக்க உள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நேற்று வரை 1262 கால்நடைகள், 26915 குடிசை  வீடுகள், சேதம் அடைந்துள்ளன. மழை காரணமாக நேற்று வரை 166 பேர் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 26 பேர் இறந்துள்ளனர். திருவாரூரில் 18 பேரும், கடலூரில் 20 பேரும் மழைக்கு பலியாகியுள்ளனர் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


நேற்று கன்னியாகுமரியில் 50 மிமீ, புதுச்சேரி, நாகப்பட்டினம், வேதாரண்யம் 40 மிமீ, செய்யூர், மதுராந்தகம், மாமல்லபுரம், கடலூர், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, வானூர், ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, கொள்ளிடம், சீர்காழி 30 மிமீ, தாம்பரம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், மரக்காணம், கும்பகோணம், குடவாசல், முத்துப்பேட்டை, நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குளச்சல், நாகர்கோவில் 20 மிமீ மழை பெய்துள்ளது. இதுவரை மழை கொட்டித் தீர்த்த 9 மாவட்டங்களில் வெள்ளம் இன்னும்  வடியவில்லை.

குறைந்த காற்றழுத்தம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றதால் ஆந்திரா கடலோரத்தில் கனமழை பெய்யும். வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும்.

தென் மாவட்டங்களில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.  11 மாவட்டங்களில் விடுமுறை  தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி தஞ்சை, கடலூர், நாகை, திருவாரூர், கரூர், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் முதல்வர் வைத்திலிங்கம் விடுமுறை அறிவித்துள்ளார். தொடர் மழையின் காரணமாக மாவட்ட  தலைநகரங்களிலும், இதர பகுதிகளிலும் மக்களின் இயல்பான வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி ...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், டிசம்பர் 06, 2010 No comments

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி தொடங்க இருப்பதாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் கூறியுள்ளார். சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடுர் மிஸ்பாஹு ஹுதா மதராஸாவும் இணைந்து மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவ கல்லூரி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுரில் அமைக்கப்பட உள்ளது. மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா மதராஸா நிர்வாகம் தங்கள் வக்பு நிலத்தில் இருந்து 23 ஏக்கரை நிலத்தை அளிக்க முன்வந்துள்ளது.

மருத்துவக் கல்லூரியை கட்ட ரூ.60 கோடி வரை தேவைப்படுகிறது. இந்த கல்லூரியை ஒரு அறக்கட்டளைதான் நடத்த உள்ளது. ஒரு உறுப்பினர் கட்டணம் ரூ.10 லட்சம் ஆகும். மொத்தம் 170 பேர் வரை தலா ரூ.10 லட்சம் நன்கொடை தருவதாக உறுதி அளித்துள்ளனர். முதல் கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெற்று மருத்துவ கல்லூரி 2012ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும் என அவர் கூறினார். 

5 டிச., 2010

வீராணம் ஏரி.....!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, டிசம்பர் 05, 2010 No comments

:வீராணம் ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் வீராண ஏரியில்லிருந்து தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர்  மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் இம் மாவட்டத்தில் உள்ள ஓடைகள் வழியாக வீராணம் ஏரிக்கு பல்லாயிரம் கன அடி நீர் வந்தது. ஏரியின் மொத்த கொள்ளவான 1,465 மில்லியன் கன அடியில் 960.20 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு வைக்கப்பட்டது. இந் நிலையில்.நீர் வரத்து அதிகரித்ததால், வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை மற்றும் சேத்தியாத்தோப்பு மதகு வழியாக 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 1,343 மில்லியன் கன அடி வரை ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது.பின்னர் மழையின் தீவிரம் குறைந்தும் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை வழியாக ஒரே  அளவில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

மீண்டும் மழை பெய்யும் என எதிர்பாக்கபட்ட நிலையில் ஏரியின் நீர் மட்டத்தை முற்றிலுமாக குறைக்க மாவட்ட நிர்வாகம்  முடிவு செய்தனர். அதன்படி கடந்த இரண்டு தினங்களாக நீர் வெளியேற்றப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் 763.20 மில்லியன் கன அடியாக குறைந்தது. நேற்று காலை காலை முதல் வெள்ளியங்கால் ஓடை மதகு மூடப்பட்டது.வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டதால்சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்த வெள்ள நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.

உஷார்...உஷார்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, டிசம்பர் 05, 2010 No comments

பெட்ரோல் விலை விண்ணை முட்டும் வகையில் ஏறிக்கொண்டிருக்க, வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, சத்தமில்லாமல் புதிய மோசடி பெட்ரோல் பங்குகளில் அரங்கேறி வருகிறது. வாடிக்கையாளர்கள் உஷாராக இருந்தால் மட்டும் இதில் தப்ப முடியும்.


பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என சலுகை வழங்கப்பட்டுள்ளது.இதனால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலை எவ்வளவு உயருமோ என்ற அச்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் பெட்ரோல் பங்குகளே விலையை நிர்ணயிக்கலாம் என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.இதற்கிடையே பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, மறைமுகமாக பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வாடிக்கையாளர்களின் கவனத்தையும், அவசரத்தையும் அடிப்படையாக வைத்து இந்த மோசடி நடத்தப்படுகிறது.உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர், 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட சென்றால், அவருக்கு 200 ரூபாய்க்கான பெட்ரோல் கிடைத்தால், நிச்சயமாக அவர் அதிர்ஷ்டக்காரர் என்று சொல்லலாம்.


ஏனெனில், 200 ரூபாய்க்கு கேட்டால், பங்க் ஊழியர், 100 ரூபாய்க்கோ அல்லது 50 ரூபாய்க்கோ பெட்ரோல் போடுவார்.வாடிக்கையாளர் மீட்டரைப் பார்க்காமல் சென்று விட்டால், அந்த ஊழியருக்கு லாபம். வாடிக்கையாளர் மீட்டரைப் பார்த்து, குறைவாகப் போட்டு விட்டீர்களே என்று உஷாராக கேட்டால், "100 ரூபாய்க்கு தானே கேட்டீர்கள்' அல்லது "சாரி சார்... 100 ரூபாய்க்கு தான் கேட்டீர்கள் என நினைத்தேன்' என வாடிக்கையாளர்களிடம் நைசாகப் பேசி சமாளித்து, பாக்கி பெட்ரோலைப் போடுவர்.மற்றொரு வகை மோசடி என்னவென்றால், பெட்ரோல் போட "டேங்க்' மூடியைத் திறந்து நீங்கள் காத்திருக்கும் போது, பங்கில் உள்ள ஒரு ஊழியர் பெட்ரோல் போடுவார்; மற்றொருவர் உங்களது கவனத்தை திசை திருப்பி, "டேங்க் மூடி துருப்பிடித்துள்ளதே, ஆயில் போடுங்க சார்; இந்த வண்டி எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது' என்பது போல் பேசுவார்.
அதற்குள் மற்றொரு ஊழியர், மீட்டரை ஜீரோ செய்யாமல் ஏற்கனவே பெட்ரோல் போட்ட கணக்குடன் துவங்கி, அடுத்தவருக்கும் போட்டு கணக்கு காட்டி விடுவார்.இந்த மோசடிகள் மாநிலம் முழுவதும் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் ஊழியர்களால் நடத்தப்படுகிறது. ஒரு சில ஊழியர்கள் தான் இம்மோசடியில் ஈடுபட்டு, மற்ற ஊழியர்களையும் மிரட்டுவதாக தெரிகிறது.இரவுப்பணி முடித்து தூக்க கலக்கத்தில் வருவோர், அலுவலகப்பணி முடிந்து, அவசரமாக வீடு திரும்புவோர், "சீக்கிரம் பெட்ரோல் போடுங்கள்' என அவசரப்படுத்துவோர் ஆகியோரை குறி வைத்து, இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது.சரியான அளவில் பெட்ரோல் அடிக்கவில்லை என்று சந்தேகம் தெரிவித்தால், வாடிக்கையாளர்களை ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதும் நடக்கிறது. இவ்வாறு புகார் கூறும்பட்சத்தில், "வேண்டுமென்றால் வாகனத்தில் உள்ள பெட்ரோல் முழுவதையும் எடுத்து அளந்து பார்க்கலாம்' என்று ஊழியர்கள் சொல்கின்றனர்.பெரும்பாலானவர்கள் வாகனத்தில் ஏற்கனவே பெட்ரோல் வைத்திருந்து, கூடுதலாக பெட்ரோல் போடுவதால் இந்த சோதனையால் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.



எனவே மோசடிப் பேர்வழிகளிடம் ஏமாறுவதோ அல்லது அவர்களைப் பிடித்து "பங்க்' உரிமையாளரிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கக்கூறுவதும், வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வில்தான் இருக்கிறது."சில்லரை விஷயம் தானே' என வாடிக்கையாளர்கள் விட்டு விடுவார்கள் என்பதால், ஊழியர்கள் அச்சமின்றி அரங்கேற்றுகின்றனர். சில்லரைப் பிரச்னையாக இருந்தாலும் தற்போது, பெட்ரோல் என்பது மொத்தமான நோட்டுக்கணக்காக மாறிவிட்டதால், வாடிக்கையாளர்கள் உஷாராக இருந்தால்தான் பணத்தை இழக்காமல் தப்ப முடியும்.


சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை : "பெட்ரோல் போடும் போது, ஜீரோவைக் காட்டி சரியான அளவு பெட்ரோலைப் போடுங்கள்' என பெட்ரோலிய நிறுவனங்களும், உரிமையாளர்களும் ஊழியர்களுக்கு உத்தரவிட வேண்டும். ஊழியர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கண்டிப்பான உத்தரவிட்டு, மோசடியைத் தடுத்தால் தான் அது தொழில் தர்மமாக இருக்கும்.பெட்ரோலிய நிறுவனங்கள் தங்களது விஜிலன்ஸ் அதிகாரிகள் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் ஊழியர்கள் மீது, இந்திய குற்றவியல் சட்டப்பிரிவில், மோசடி வழக்குப் பதிந்து சட்டப்பூர்வ நடவடிக்கையும், சம்பந்தப்பட்ட பங்க் மீது தற்காலிக அனுமதி ரத்து அல்லது அபராதம், சரக்கு நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
நன்றி;தினமலர்

4 டிச., 2010

அனோமதேய திருடர்களிடமிருந்து தப்பித்து கொள்ள

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, டிசம்பர் 04, 2010 No comments


இணையம்,கணணி என்பவற்றின் உச்ச பயன்களை அனுபவிக்கும் நமது தனிப்பட்ட ரகசிய தகவல்களை கொள்ளையிடும் நோக்கில் கொள்ளையர்கள் நமது கணணிகளை குறிவைத்து Vvirus,Trojan,Worms,Spyware,Adware போன்ற எண்ணிலடங்கா ஆபத்தான மென் பொருள்களை ஏவி விடு கின்றனர்.

இவை நமது கணனியில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உட்கார்ந்து கொண்டு தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை கன கச்சிதமாக செய்ய வல்லன. ஆனால் இவற்றை அழிக்கவல்ல குறிப்பிட்ட விலைக்கு கிடைக்கும் Kaspersky ,Norton போன்றவற்றை நாம் இன்ஸ்டால் பண்ணி கொண்டால் நிம்மதியாக இருக்கலாம்.

சிலவேளைகளில் பணம் கொடுத்து வாங்கி எல்லாம் போட முடியாது பண்ணுறதை பண்ணிட்டு போங்கையா என இருப்பவர்களுக்கு என நல்ல நோக்கில் இலவசமாக அண்டி வைரஸ்கள் வருகின்றன. கவலை என்ன வென்றால் இப்படியானவர்களை குறிவைத்து இலவச அண்டி வைரஸ் எனும் பெயரில் வைரஸ் களை தான் அனுப்புராங்கையா. உதாரணமாக சில இணையதளங்களில் இருக்கும் "இலவச ஸ்கானிங்" என இருக்கும். எல்லாமே வைரஸ் தான்.

நம்பகத் தன்மையுள்ள அதிசக்தி வாய்ந்த பிரபல பத்து இலவச அண்டி வைரஸ் மென்பொருட்களை பார்ப்போம். செயற்திறனில் கட்டணத்துக்கு கிடைக்கும் அண்டி வைரஸ்களுக்கு நிகராக ஒப்பிட முடியாவிட்டாலும் சிறந்த முறையில் பாதுகாப்பினை வழங்க வல்லன.


1 .AVG Anti-Virus Free Edition 2011

இலவசமாக தரவிறக்கக்கூடிய AVG ஆனது Virus ,Spyware என்பவற்றில் இருந்து windows இனை பாதுகாப்பதோடு இதன் AVG Social Networking Protection சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு வழங்கும்.
http://free.avg.com/us-en/homepage

2 .Avast Free Anti virus

இது கணனிக்கு இருக்கவேண்டிய ஆககுறைந்தத பாதுகாப்பினை வழங்கு வதோடு Virus ,Spy ware என்பவற்றுக்கெதிராக சிறந்த முறையில் செயற்பட வல்லது. 100 % இலவச திறன் கூடியதுமாகும்.
http://www.avast.com/free-antivirus-download

3 .Avira AntiVir Personal – Free Anti virus

இது உங்கள் கணணியை மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல viruses, worms, Trojans and costly dialers என்பவற்றில் இருந்தது பாதுகாக்க வல்ல ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
http://www.avira.com/en/avira-free-antivirus

4 .Malwarebytes Anti-Malware

Malware இக்கு எதிரான இது எவ்வளவு தான் பெரிய malware ,spyware என்றாலும் அடியோடு அழித்து விடும். விரைவானதும் திறன் மிக்கதுமான இது கணனிக்கு நல்ல காவலன்.
http://www.malwarebytes.org/mbam.php

5 .Ad-Aware Free Internet Security

இந்த கணணி பாதுகாப்பு மென்பொருள் real-time protection, advanced Genocode detection technology, rootkit protection, automatic updates, என பல சிறப்பியல்புகளை கொண்டுள்ள பயன் மிக்க ஒன்று.
http://www.lavasoft.com/products/ad_aware_free.php

6 .CCleaner

விண்டோஸ் பக் இல் உள்ள வைரஸ் போன்றவற்றை துப்பரவு செய்து வேகம் உள்ள கணணியாக பேணுவதுடன் உங்கள் தனிபட்ட கோப்பு திருட்டுக்களிருந்தும் பாதுகாக்கிறது.
http://www.piriform.com/ccleaner

7 .Spybot – Search & Destroy

இது உங்கள் கணனியில் உள்ள spyware இனை தேடி அழிக்க வல்ல ஒரு பாதுகாப்பு மென்பொருள்.இலவசமான Spybot – Search & Destroy உம ஒரளவு நம்பகத்தன்மை உள்ளது.
http://www.safer-networking.org/en/spybotsd/index.html

8 .Hotspot Shield

இது நீங்கள் இணையத்தில் செய்யும் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக செய்ய உதவுகிறது. குறிப்பாக நீங்கள் விரும்பினால் அநோமதயராக வலம வரவும் உதவுகிறது.
http://hotspotshield.com/?lg=en

9 .PC Tools AntiVirus Free

இது சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து ரகசிய தகவல்களின் பாதுகாப்பு , அன்னியர்கள் ரகசியமாக கணனியில் ஊடுருவுதல் முறியடித்தல் என்பவற்றை உறுதி செய்கிறது.
http://www.pctools.com/free-antivirus/

10 .Spyware Blaster

இது கணணியை பாதுகாப்பதோடு இணையத்தின் நல்ல பக்கத்தினை மட்டுமே நாம் பார்க்க உதவுகிறது.அதாவது கசப்பான அனுபவங்களை தரவல்லவற்றை அழித்து விடும்.
http://www.javacoolsoftware.com/spywareblaster.html


Source : smashingapps

3 டிச., 2010

பொது தேர்வு...

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, டிசம்பர் 03, 2010 No comments

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 , எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், நடக்கும் நாள் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் மார்ச் 2ம் தேதி பிளஸ்- 2 தேர்வும், 28 ம்தேதி பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்குகிறன. பொதுத் தேர்வு பணிகளை அரசு தேர்வுத் துறை துவங்கியுள்ளது.

பத்தாம் வகுப்பு ( எஸ்.எஸ்.எல்.சி.,) 28 ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. அட்டவணை இறுதி செய்யப்பட்டது. இந்தாண்டு, சுமார் ஏழு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


பொதுத்தேர்வு அட்டவணை முழு விவரம்


பிளஸ் 2


தேர்வு தேதி தேர்வுப் பாடம்


2.3.11 மொழி முதல் தாள்
3.3.11 மொழி இரண்டாம் தாள்
7.3.11 ஆங்கிலம் முதல் தாள்
8.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
11.3.11 இயற்பியல், பொருளியல், உளவியல்
14.3.11 வேதியியல், கணக்குப்பதிவியல்
17.3.11 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
18.3.11 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ்
21.3.11 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
23.3.11 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி
25.3.11 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி


எஸ்.எஸ்.எல்.சி.,


28.3.11 மொழி முதல் தாள்
29.3.11 மொழி இரண்டாம் தாள்
31.3.11 ஆங்கிலம் முதல் தாள்
1.4.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
5.4.11 கணிதம்
8.4.11 அறிவியல்
11.4.11 சமூக அறிவியல்


மெட்ரிகுலேஷன்


22.3.11 மொழி முதல் தாள்
23.3.11 மொழி இரண்டாம் தாள்
24.3.11 ஆங்கிலம் முதல் தாள்
25.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.3.11 கணிதம் முதல் தாள்
30.3.11 கணிதம் இரண்டாம் தாள்
1.4.11 அறிவியல் முதல் தாள்
5.4.11 அறிவியல் இரண்டாம் தாள்
8.4.11 வரலாறு மற்றும் சிவிக்ஸ்
11.4.11 புவியியல் மற்றும் பொருளியல்


படக் கருவியும் படைக் கலனே!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, டிசம்பர் 03, 2010 No comments



மாய் மஸ்ரி (Mai Masri)

த்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை.

உலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே. அங்கே நாடற்றவர்களின் நாடான பஃலஸ்தீனில் வயது பேதமின்றி கையில் கிடைத்த ஆயுதங்களை ஆக்ரமிப்பாளர்களுக்கெதிராக ஏந்தியிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அதே நாட்டின் மாய் மஸ்ரி (Mai Masri) என்கிற பெண்மணி ஏந்தியதோ படக்கருவியை!

மத்தியக் கிழக்கின் ஒவ்வொரு காலநிலையையும் உலகமே உன்னித்துப்பார்க்க இவருடைய ஆவணப்படங்கள் ஜன்னலைப் போல் அமைந்து வந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

கடந்த 30 ஆண்டுகளாக லெபனானில் இஸ்ரேல் நிகழ்த்திய அத்துமீறல்களை; லெபனானின் உள்நாட்டு யுத்தங்களை; 2000ல் பஃலஸ்தீன் கண்ட ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சியை; - இப்படி ஒன்றையும் விடாமல் ஆவண(ப்பட)மாக்கி வைத்திருந்தாலும், மாய் மஸ்ரியுடைய நோக்கம் யுத்தத்தையும் அதன் இடிபாடுகளையும் படம் பிடிப்பதல்ல; மாறாக, அக்கட்டத்தில் இருக்கிற (அ) இல்லாமற் போகிற மனிதத்தன்மை, நாளாந்திர வாழ்க்கை, தினசரி இழப்புகள், கவலைகள், தோன்றி மறையும் (அ) மறைந்து தோன்றும் நம்பிக்கைகள் ஆகியவையே இவருடைய கோணம்.

யுத்தத்துடனும், யுத்தத்தின் போதும் அவற்றின் இருமுனைகளில் உள்ள பாமர மக்களின் அசந்தர்ப்பமான சூழல்களை மாய் வெளிப்படுத்துகிறார். ஓய்வு ஒழிச்சலின்றி தான் காணும் அகதி முகாம்கள், அரசியல் மாற்றங்கள், நம்பிக்கையையும், பயத்தையும் வெளிப்படுத்தும் சின்னஞ்சிறுசுகள், பெண்கள் என்று பதிவு செய்கிற மாய் தம் வாழ்க்கை மிகுந்த பொறுமையும் அலைக்கழிப்பும் நிரம்பியது. ஆனாலும் மாய் நம்பிக்கை இழப்பதாக இல்லை.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற படவிழா ஒன்றில், மாய் மஸ்ரியுடையதும், அவர் கணவர் லெபனீய இயக்குநர் ழான் ச்சாமோன் உடையதுமான படங்கள் திரையிடப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டன.

“நீண்ட காலமாக ஆக்ரமிப்பில் உள்ள ஊரிலிருந்து வருகிறேன்” என்ற மாய் மேலும் சொன்னார்: “நான் (இப்போது) வாழ்ந்து வருவதும், ஒரு யுத்த பூமியில் (லெபனானில்) தான். அரசியல் படுகொலைகள், உள்நாட்டு கலகங்கள், எழுச்சி முழக்கங்கள் எல்லாம்தான் என் வாழ்வினூடாகக் கண்டு வருகிறேன்”.

மத்தியக் கிழக்கின் சிறந்த ஆவணப்பட இயக்குநராகத் திகழும் மாய் ஃபலஸ்தீனியத் தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர். 1982ல் இஸ்ரேல் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் லெபனானின் ஷாட்டிலா நகரில் ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் அரக்கத்தனத்துடன் கொத்துக்கொத்தாய் செய்த கொலைகளை, வன்புணர்வுகளைப் பார்த்திருக்கிறார்.

“அந்தக் கொடுஞ்சம்பவத்துக்குப் பின்னர் நாங்கள் தெருக்களில் சென்றபோது எங்கும் துயரமும் ஓலமுமாயிருந்தது. வாழ்வின் மிக மோசமான தருணம் அது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் கோரமுகம். அப்போதுதான், திடீரென்று ஒன்றுமறியா குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டேன். குண்டுகள் துளைத்திருந்த சுவர்களுக்குப் பின்னாலிருந்து நம்பிக்கைக் கீற்று மிளிர அந்தப் பிஞ்சுகளின் முகங்கள் தெரிந்தன. இறந்து கிடந்தவர்களெல்லாம் வாழத் திரும்பிவிட்டதைப் போன்றிருந்தது எனக்கு! அப்போது தான் படங்கள் எடுப்பதைத் தீர்மானித்தேன்” என்கிறார் மாய். “ அதன் மூலம் தான் ஆறுதல் தேடிக்கொள்கிறேன்”

“தொடக்கத்தில் 1980களில் படமெடுப்பது அத்தனை எளிதாக இல்லை. உளவாளிகளையும் (போர்)விமானங்களையும் பார்க்கும் பார்வையினையே படக்கருவிகள் மீதும் மக்கள் வைத்திருந்தார்கள். ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சி நிலையின் போது அந்த அச்சம் அகன்றது. ஒரு புரிந்துணர்வு அரும்பியது”

தன்னுடைய படங்களின் மூலம் வரும் லாபத்தை அகதி முகாம்களிலுள்ள குழந்தைகளின் படிப்புதவித் தொகையாகத் தந்து உதவி வருகிறார் மாய். “குழந்தைகளே மாற்றத்தின் விசை! அவர்கள் தன்னியல்பானவர்கள். சார்பற்றவர்கள், கற்பனாசக்தி நிரம்பியவர்கள்”

ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞியாக இருந்த காலங்களையும் நினைவு கூர்கிறார் மாய். “படம் எடுப்பவளாக, இப்போது நான் எதிர்கொள்ளும் அபாயங்களும் மிக யதார்த்தமானவை. துப்பாக்கிச்சூடுகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள், அதுவுமில்லாமல் கலவரக்காரர்கள் இவற்றினூடே தான் என் காமிராவும் பயணிக்க வேண்டியிருக்கிறது”

“இந்தக் காமிரா கூட ஓர் ஆயுதம் தான்” தனது படக்கருவியைச் சுட்டிக்காட்டுகிறார் மாய்.

“என்னிடமில்லாத வலிமையை இதன் மூலமே நான் பெறுகிறேன்” என்கிற மாய் ஒரு ஆவணப்பட இயக்குநராக மாற்று வழிகளையும் யோசித்துவைத்திருக்கிறார். தனது சொந்த ஊரான நபுலஸ்ஸுக்கு முதன்முறை மாய் சென்றிருந்தபோது அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பதுங்கிப் பதுங்கி பாதுகாப்பாக படம் பிடித்தேன். சூழலுக்கேற்ப நடந்துகொண்டேன். ஆவணப்படத்துக்கான கதைக்கருவை யோசிக்கத் தேவையேயில்லாமல் அங்கே நிலைமையே அதுவாக இருந்தது”

தனது ஆவணப்பட ஆக்கங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஃபலஸ்தீன் பற்றிய பிம்பத்தையே குறிப்பிடுகிறார் மாய். “உதுமானிய ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, கடைசியாக இஸ்ரேலின் ஆக்ரமிப்பு என்று காலாகாலத்துக்கும் அது நிழல்தேசமாகவே இருக்கிறது – அநாதரவானவர்களின் பூமியாக; மக்களே இல்லாமல் போகும் தேசமாக!

“ஒவ்வொரு ஃபலஸ்தீனியரிடத்திலும் ஒரு திரைப்படக் கரு இருக்கிறது. அவரவர்க்கு நிகழ்ந்த சம்பவங்களையும், செவியுற்றதையும் ஒவ்வொருவரும் மனதில் திரும்பத்திரும்ப ஓட்டிப்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்” என்று மாய்-யின் கூற்று தான் எத்தனை உன்னிப்பானது!

விருது பெற்ற மாய் மஸ்ரியுடைய ஆவணப்படங்கள் யாவும் உண்மையின் தேடலாய் அமைந்தவையே. ஆனால் அவை யுத்தம் பற்றியதல்ல. மிக மோசமான சூழலிலும் இளைஞர்களின் கனவுகள், வாழத் தலைப்படும் நம்பிக்கைகள், அன்பின் சிரிப்பு ஆகியவற்றையே அப்படங்கள் பேசுகின்றன.

“யுத்தம் மக்களிடம் அவர்களின் நல்ல பக்கத்தையும், மோசமான தன்மையையும் வெளிக்கொணர்வதாக அமைகிறது” என்கிற மாய் மஸ்ரியுடைய இந்தப்படங்கள் ஏற்படுத்திய விளைவுகள் ஆச்சரியமானவை. ஒரு ஜப்பானிய இசையமைப்பாளர் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு அகதிமுகாம் குழந்தைகளுக்கு இசைக்கருவிகள் அனுப்ப விரும்பினார். இவருடைய “33 நாள்கள்” படம் பார்த்த ஒரு இஸ்ரேல் தம்பதியினர் கண்கலங்கினார்கள். இதே படத்தை ஆம்ஸ்டர்டாமில் பார்த்த இஸ்ரேலிய பெண் இயக்குநர் ஒருவர் பித்துபிடித்தாற் போல மழையில் இரவு முழுக்க அலைந்து திரிந்திருக்கிறார். இப்படம் தந்த உந்துதலில் அதே இயக்குநர் “அர்னாவின் குழந்தைகள்” என்கிற திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இத்தாலியில் ஓர் ஊமைச் சிறுவன் “33 நாள்கள்” படத்தைப் பார்த்துவிட்டு, குமுறிப் பேசத் தொடங்கியிருக்கிறான்.

இப்படியாக, தனது போராயுதமான படக்கருவியால் உயிர்களைப் போக்கிடச் செய்யாமல் இதயங்களைத் தட்டி எழுப்புவதை மாய் செய்து வருகிறார் எனும் போது அது பாராட்டப்படவேண்டிய செயலல்லவா!

கட்டுரை: இப்னு ஹம்துன்

நன்றி;
சத்தியமார்க்கம்.காம்

2 டிச., 2010

வெள்ள அபாய எச்சரிக்கை.

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், டிசம்பர் 02, 2010 No comments



கடலூர்மாவட்டத்தில் 200 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளாறில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சேத்தியா தோப்பு, பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 200 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


1 டிச., 2010

போதும் மழை..!

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், டிசம்பர் 01, 2010 No comments







நேற்றிரவு முதல் இன்றுமதியம் வரை பெய்த மழை கடலூர்மாவட்டத்திலேயே பரங்கிப்பேட்டையில் அதிகபட்சமாக"22" சென்டிமீட்டர் பெய்ந்து மாவட்டத்திற்க்கு முதலிடத்தை வாங்கிக்கொடுத்துள்ளது.
பரங்கிப்பேட்டையைப்பொருத்தவரை தாழ்வான பகுதிகளில் எப்போதும் போல் மழைவெள்ளம் குறிப்பாக தில்லிசாஹிப் தர்கா தனி தீவு போன்றுக்காட்சியளித்ததாக அங்குள்ளவர்கள் வருத்ததுடன் கூறினார்கள்.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் தலைவர் யூனுஸ் நானா அவர்களின் தலமையில் தூரிதகதியில் செயல்பட்டு வெள்ளநிவாரண பணிகளில் தங்களை ஈடுப்படுத்திக்கொண்டார்கள்.மேலும் மழையினால் பாதிக்கபட்டவர்களை காண்பதற்காக வந்த தாசில்தார் தில்லிசாஹிப் தர்கா மற்றும் பரங்கிபேட்டையின் பல்வேறு பகுதிகளை தலைவருடன் சேர்ந்து பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் முயற்ச்சியால் பாதிக்கபட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது ''மினி ஷாதி" மஹாலில் 2000 நபர்களுக்கு தேவையான உணவுதாயாரிக்கபட்டு ஜமாஅத்தின் தண்ணார்வ தொண்டர்கள் வழியாக பரங்கிப்பேட்டையின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கபட்டது.ஊரில் பல்வேறு தெருக்களில் சில வீடுகளில் மழைநீர் புகுந்து வீடுகள் இன்னமும் குளம் போன்றுதான் காட்சியளிக்கின்றன.
மீராபள்ளிக்குளம் நிரம்பி வழிந்தோடுகிறது இதனால் இங்கு எப்போதும்போல் இளைஞர்களின் கூட்டமும் நிறைந்துதான் காணப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் வரும் மழை தாமதமாக வந்தாலும் ஓரே இரவில்... அடை மழையாக வந்து தான் யார் என்பதை காட்டிவிட்டது ஏன்றே சொல்லலாம.

பரங்கிப்பேட்டையில் பெய்யும் மாமழை..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், டிசம்பர் 01, 2010 No comments











நேற்றிரவு தொடங்கிய மழை மிக பலத்த மழையாக இப்போதும் தொடர்கிறது, நகரின் தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி பெரும்பாலான தெருக்களும் மழை நீரால் சூழப்பட்டு வெள்ளமாக காட்சியளிக்கிறது. கொட்டும் மழையில் நகரை வலம் வந்த நமது நிருபரின் கேமரா காட்சிகள் சில இங்கே.