நேற்றிரவு முதல் இன்றுமதியம் வரை பெய்த மழை கடலூர்மாவட்டத்திலேயே பரங்கிப்பேட்டையில் அதிகபட்சமாக"22" சென்டிமீட்டர் பெய்ந்து மாவட்டத்திற்க்கு முதலிடத்தை வாங்கிக்கொடுத்துள்ளது.
பரங்கிப்பேட்டையைப்பொருத்தவரை தாழ்வான பகுதிகளில் எப்போதும் போல் மழைவெள்ளம் குறிப்பாக தில்லிசாஹிப் தர்கா தனி தீவு போன்றுக்காட்சியளித்ததாக அங்குள்ளவர்கள் வருத்ததுடன் கூறினார்கள்.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் தலைவர் யூனுஸ் நானா அவர்களின் தலமையில் தூரிதகதியில் செயல்பட்டு வெள்ளநிவாரண பணிகளில் தங்களை ஈடுப்படுத்திக்கொண்டார்கள்.மேலும் மழையினால் பாதிக்கபட்டவர்களை காண்பதற்காக வந்த தாசில்தார் தில்லிசாஹிப் தர்கா மற்றும் பரங்கிபேட்டையின் பல்வேறு பகுதிகளை தலைவருடன் சேர்ந்து பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் முயற்ச்சியால் பாதிக்கபட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது ''மினி ஷாதி" மஹாலில் 2000 நபர்களுக்கு தேவையான உணவுதாயாரிக்கபட்டு ஜமாஅத்தின் தண்ணார்வ தொண்டர்கள் வழியாக பரங்கிப்பேட்டையின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கபட்டது.ஊரில் பல்வேறு தெருக்களில் சில வீடுகளில் மழைநீர் புகுந்து வீடுகள் இன்னமும் குளம் போன்றுதான் காட்சியளிக்கின்றன.
மீராபள்ளிக்குளம் நிரம்பி வழிந்தோடுகிறது இதனால் இங்கு எப்போதும்போல் இளைஞர்களின் கூட்டமும் நிறைந்துதான் காணப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் வரும் மழை தாமதமாக வந்தாலும் ஓரே இரவில்... அடை மழையாக வந்து தான் யார் என்பதை காட்டிவிட்டது ஏன்றே சொல்லலாம.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக