ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

11 மார்., 2011

காங்கிரஸ்ஸுக்கு விருத்தாசலம்,திட்டக்குடி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, மார்ச் 11, 2011 No comments



தி.மு.க. கூட்டனியில் காங்கிரஸ் இடம்பெற்ற நிலையில் ஐவர் குழு அறிவாலயத்தில் தொகுதி பங்கிடு பற்றி தி.மு.க.தேர்தல் குழுவினர்களுடன் இன்று நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகள் கிடைக்ககூடும் என நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்,
எனினும் திண்டிவனம் செய்யாறு தொகுதிகள் மற்றும் பிற தொகுதிகளுக்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடைப்பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்



அறிவாலயத்திலிருந்து, ஹம்துன் அப்பாஸ்

சவுதிஅரேபியாவில் ஆர்ப்பாட்டங்கள்...?!

Posted by ஹம்துன்அஷ்ரப் On வெள்ளி, மார்ச் 11, 2011 No comments


நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக பரவி வரும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது சவூதிஅரேபியாவிலும்,பரவ ஆரம்பித்துள்ளது.

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை அன்று ஆர்பாட்டகாரர்கள் கும்பல் ஒன்றை கலைக்க கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டதாகவும் இதில் சுமார் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறும்போது சவூதிஅரேபியா காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்ட ஆர்பாட்டகாரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் துப்பாகி சூடு நடத்தப்படும் சப்தமும் கேட்டதாக தெரிவித்தார். 
ஆர்பாட்டத்தில் பங்கு பெற்ற ஒருவர் கூறும்போது இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நான்கு பேர்கள் காயம் அடைந்ததாக கூறினார்.

10 மார்., 2011

உடைகிறதா இ .யூ. முஸ்லிம் லீக்?

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 10, 2011 No comments






                                                          தி.மு.க., அணியில் சலசலப்பு உடைகிறது முஸ்லிம் லீக்?




நன்றி; தினமலர்

மீனவர்கள் கடத்தல்..விடுவிப்பு

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 10, 2011 No comments

பரங்கிப்பேட்டைஅருகே மீனவர்கள் கடத்தப்பட்டதற்கு பதிலாக பழையார் மீனவர்கள் நான்கு பேரை பரங்கிப்பேட்டை மீனவர்கள் நேற்று அதிகாலை கடத்தி வந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரசுராமன் (45), கோடீஸ்வரன் (65), சிலம்பரசன் (25), வினோத் (24). இவர்கள் நான்கு பேர் நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டையில் இருந்து 8 மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது நாகப்பட்டினம் மாவட்டம், பழையாரை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து அதே இடத்தில் மீன் பிடிக்க வலை விரித்தனர். இதனால்இரண்டுமீனவ குருப்புக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பழையார் மீனவர்கள் பரங்கிப்பேட்டை மீனவர்கள் நான்கு பேர் உட்படபடகுடன் சேர்த்து பழையாருக்கு கடத்திச் சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த புதுக்குப்பம் மீனவர்கள் நேற்று அதிகாலை அதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பழையாரை சேர்ந்த மீனவர்கள் பாக்கியநாதன் (25), பிரபாகரன் (19), திருமுருகன் (30), ராஜ் (29) ஆகிய நான்கு பேரை படகுடன் கடத்தி வந்து பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவங்களால் பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அதையடுத்து சிதம்பரம் டி.எஸ்.பி., நடராஜன், புதுக்குப்பம் மற்றும் பழையார் மீனவ தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட மீனவர்கள் அந்தந்த பகுதி மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

எங்களால் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது..

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 10, 2011 No comments


"எங்களால் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது" என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ.அகமது தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக இ. அகமது குறிப்பிட்டார்.


நன்றி:இந்நேரம்.காம்

8 மார்., 2011

கடலூர் சாசன் கெமிக்கல்ஸிலிருந்து வாயு கசிந்தது

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், மார்ச் 08, 2011 No comments


நேற்று நள்ளிரவு கடலூர் சிப்காட் நெடுஞ்சாலையில் பரபரப்புடன் கிராம மக்கள் அங்கும் இங்கும் அலைந்து அலறியடித்து ஓடினர். சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சாஷன் கெமிக்கல்ஸ் என்கிற ஒரு ஆலையிலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதால் 65-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தது மட்டுமின்றி பலருக்கு கண் எரிச்சல், வாந்தி, தோல் அரிப்பு ஏற்பட்டது.


இந்த பாதிப்புக்கு ஆளான குடிகாடு பகுதியை சாந்த கிராம மக்கள் பலர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பாதுகாப்பு அறையை அடித்து நொறுக்கியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம் சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னர். மாவட்ட ஆட்சித்தலைவர் பாதுகாப்புடன் நள்ளிரவு சாஷன் பிரச்சினைக்குரிய தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இங்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த இரசாயண பொருட்களை இந்த விஷவாயு கசிவிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. தீயணைப்பு ஊழியர்களை கொண்டு அந்த இரசாயண பொருட்களை அப்புறப்படுத்தி அழிக்கப்பட்டது.

பிரச்சினைக்குரிய தொழிற்சாலையை உடனே இழுத்து மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டதுடன், பாதிக்கப்ட்ட கிராம மக்களை திருமண மண்டபம் மற்றம் பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார்



நன்றி: mypno.

6 மார்., 2011

கடலில் மூழ்கி பீகார் மாணவர் பலி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 06, 2011 No comments


அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும் பீகாரை சேர்ந்த மாணவர் அமீத் குமார். விடுமுறை தினத்தையொட்டி பரங்கிப்பேட்டை கடலில் குளிப்பதற்காக வந்திருந்த அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் சிதம்பரத்திலிருந்து வந்த வண்ணமாக இருப்பதால் மாணவர்கள் கூட்டத்தால் பரப்பரப்பாக மருத்துவமனை வளாகம் இருக்கிறது. மாணவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் மருத்துவமனை எதிரே அமர்ந்துள்ளனர்.

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, மார்ச் 06, 2011 No comments



  • காஜியார் தெருவில்,


 மர்ஹும் காஜா மக்தூம் அவர்களின் மகளாரும், மர்ஹும் ஹசனா மரைக்காயர் அவர்களின் மனைவியும், காஜா மொய்னுதீன், அஷ்ரப் முஹைய்யதீன், முஹம்மது ஷாஃபி, கபீர் அஹமது மதனி, ஷாஃபாத் அஹமது, அப்துல் ஹமீத். இவர்களின் தாயாரும், சேக் இஸ்மாயில் சாபு, கபீர் கான் சாபு, முஹம்மது அலி ஜின்னா.இவர்களின் மாமியாருமாகிய ஜொஹரா பீவி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்




  • நகுதா மரைக்காயர் தெருவில்,

 S.M. கவுஸ் மியான் அவர்களின் மகளாரும்,  (ஹோட்டல்) ஆக்கிஷா நகுதா அவர்களின் மனைவியுமான ஜொஹராமா அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் பக்கீர் மாலிமார் பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

5 மார்., 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, மார்ச் 05, 2011 No comments

காயிதே மில்லத் தெருவில், மர்ஹும் முஹம்மது சுல்தான் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது முராது அவர்களின் மருமகனாரும், நிசார் அஹமது, சாஹுல் ஹமீது இவர்களின் தகப்பனாருமாகிய உசேன் கவுஸ். அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

3 மார்., 2011

விருப்ப மனு தாக்கல்

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 03, 2011 No comments



மிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் 13 ல் வாக்கு பதிவு நடக்க இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதன் முதற்கட்டமாக விருப்ப மனு தாக்கல் தொடங்கி விட்ட நிலையில், நமது சிதம்பரம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிபேட்டை பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் தி.மு.க தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், இன்று பிற்பகல் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
பேரூராட்சி துணைத்தலைவர் செழியன் உள்ளிட்ட முக்கிய பலரும் பரங்கிப்பேட்டையில் இருந்து ஆறு வாகனங்களில் உடன் சென்றிருந்தனர். 


அறிவாலாயத்திலிருந்து  ஹம்துன் அப்பாஸ்

விருப்ப மனு தாக்கல்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், மார்ச் 03, 2011 No comments


பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் 6வது வார்டு உறுப்பினராக இருப்பவர் S. கைருன்னிசா.இவர் வர இருகின்ற சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனுவை சென்னை அறிவாலயத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே பரங்கிப்பேட்டையிலிருந்து A.R. முனவர் உசேன், M.K. பைசல் அலி ஆகியோர் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்க்காக விருப்பமனுவை கொடுத்துள்ளனர்.  என்பது குறிப்பிடத்தக்கது.

2 மார்., 2011

+ 2 தேர்வுகள் தொடங்கியது

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 02, 2011 No comments


தமிழகத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) தேர்வுகள் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. ஆண்டார்முள்ளிபள்ளம் (பெரியப்பட்டு), சாமியார்பேட்டை, முட்லூர், சேவாமந்திர்,பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கலிமா, மூனா ஆஸ்திரேலியன் ஆகிய எட்டு பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் மாணவ-மாணவியர் இன்று காலை முதல் பரங்கிப்பேட்டை சேவாமந்திர் கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுதி வருகின்றனர். 



தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விதிகளை பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 

  • மாணவர் தன்னிடம் உள்ள துண்டுச் சீட்டு, புத்தகங்களை தாமாக முன்வந்து கண்காணிப்பாளரிடம் தந்தால், தலைமை கண்காணிப்பாளர் ஒரு முறை எச்சரித்து விடலாம். அதே தவறை மீண்டும் செய்தால், தேர்வு அறையில் இருந்து வெளியேற்றலாம்
  • தடை செய்யப்பட்ட தேர்வு பொருட்கள் இருப்பதை கண்காணிப்பாளர் கண்டறிந்தால், எழுத்துப்பூர்வமான விளக்கம் பெற்ற பின், மாணவர், தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்படுவார்.
  •  "காப்பி'யடித்தால், தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்படுவார். ஓர் ஆண்டு வரை தேர்வு எழுத முடியாது.
  •  பிட் அடித்து பிடிபட்டால், அந்த தேர்வு மார்க் ரத்து செய்யப்படும். இருமுறை தேர்வு எழுத அனுமதியில்லை
  •  மாணவர் மற்றும் அவரை சார்ந்தவர் கண்காணிப்பாளரை தவறான நோக்கில் அணுகினால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத தடை.
  • ஆள்மாறாட்டம் செய்தால், தேர்வு ரத்து மற்றும் வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
  •  விடைத்தாளில் தேவையற்ற வார்த்தை எழுதுதல், இயக்குனர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதுதல் போன்ற குற்றங்களுக்கு, குறிப்பிட்ட பாடம் மற்றும் அனைத்து தேர்வும் ரத்து செய்யப்படும்.
  •  கண்காணிப்பாளருடன் அறைக்குள்ளும், வெளியேயும் தகராறு செய்தால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத முடியாது.
  •  தேர்வு நேரத்தில் அறைக்கு வெளியே வினாத்தாளை தந்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை.
  •  பிடிபட்ட பின் தலைமை கண்காணிப்பாளர் சொல்வதை கேட்காமலிருந்தால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத அனுமதி கிடையாது.
  •  விடைத்தாளுக்குள் பிட் இருப்பது திருத்தும் போது தெரிய வந்தால், தேர்வு ரத்து.
  •  மற்றொரு மாணவரின் விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை.
  •  விடைத்தாளில் பெயர், இன்ஷியல், வேறு குறியீடு எழுதினால், மாணவரிடம் எழுதி வாங்கிய பின் மன்னிப்பு, அல்லது அந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படும்.
  • தேர்வு அறைக்குள் வினாத்தாளை அடுத்தவர் மீது வீசினால் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.
பிட் அடிக்கும் மாணவனுக்கு மட்டுமின்றி, தேர்வறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியருக்கும் இனி தண்டனை வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தேர்வு அறையில் மாணவன் பிட் அடிப்பது கண்டறியப்பட்டால், அங்கு கண்காணிப்பு பணியில் இருக்கும் ஆசிரியர் மீது, "17ஏ, 17பி' பணியாளர் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், மார்ச் 02, 2011 No comments

தமிழக துணை முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நகர தி.மு.கழகத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 9 மணி அளவில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் அருகில் பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், தி.மு.கழக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பால், வழங்கப்பட்டது, மேலும் பரங்கிப்பேட்டை 17-வது வார்டு செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் 100 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதியும்-நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹூசேன்,  மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் J.பாண்டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் கோ.செழியன், நகர அவைத்தலைவர் S.தங்கவேல்,ஒன்றிய பிரதிநிதிகள் M.K.பைசல் யூசுப் அலி,கோமு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேலவன், கவுன்சிலர் M.G.M.ஹாஜா கமால், கவுன்சிலர் M.E.அஷ்ரப் அலி, ராஜு, K.H.ஆரிபுல்லாஹ், ரசூல் கான்,  ஜாபர், பொற்செல்வி உள்ளிட்ட தி.மு.கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

1 மார்., 2011

ரூ.40 இலட்சத்தில் மேலும் சாலைகள், வடிகால் கல்வெர்ட்..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 01, 2011 No comments


பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றக்கூட்டம், மன்ற அலுவலகத்தில் நடைப்பெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு துணை தலைவர் செழியன், செயல் அலுவலர் ஜீஜாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. 

தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தில் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு வழங்கிய ரூ.84 இலட்சத்து 60 ஆயிரம் செலவில் சிமெண்ட் சாலைகள், பக்க கால்வாய்கள், கல்வெர்ட் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.20 இலட்சம், பிற்படுத்தப்பட்டோர் மானிய நிதியில் இருந்து அரசு வழங்கும் ரூ.20 இலட்சம், ஆக கூடுதல் தொகை ரூ.40 இலட்சத்தில் மேலும் சாலைகள், வடிகால் கல்வெர்ட் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தலைமை எழுத்தர் ராணி நன்றி கூறினார். இத்தகவலை தினத்தந்தி நாளேடு வெளியிட்டுள்ளது.

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், மார்ச் 01, 2011 No comments



கிதர்சாமரைக்காயர் தெருவில்,

மர்ஹும் அப்துல் ஹமீத் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது கவுஸ் மாலிமார் அவர்களின் மருமகனும், மர்ஹும் ஹாஜா கமால், மர்ஹும் செய்யது அஹமது புகாரி, சேக் இஸ்மாயில் சாஹிப், அப்துல்காதர் மாலிமார் இவர்களின் சகோதரரும், யாகூப் ஹசன் மாலிமார், பஜுல் ஹுசைன் மாலிமார், மர்ஹும் செய்யது மரைக்காயர், இவர்களின் மச்சானும், முஹம்மது மெய்தீன் மரைக்காயர் அவர்களின் மாமனாரும், அப்துல் ஹமீத் அவர்களின் தகப்பனாரும், முஹம்மது உவைஸ் அவர்களின் பாட்டனாருமாகிய சாதிக் அலி மரைக்காயர் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்