ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

18 ஜூன், 2011

பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, ஜூன் 18, 2011 No comments


சுயநிதியில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணத்தை, நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு வெளியிட்டது. இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலகத்தில் பள்ளி நிர்வாகங்களிடம், நேற்று புதிய கட்டண பட்டியலை வழங்கினர். மொத்தம் 310 பள்ளிகளில், 125 மெட்ரிக் பள்ளிகள், 156 நர்சரி பள்ளிகள், 16 மாநில பாடத்திட்ட பள்ளிகள் என, 297 பள்ளிகளுக்கு கட்டணம் வெளியிடப்பட்டது.
மேற்படி இணைய  தளத்தில்  வெளியாகியுள்ள நம் ஊர் பள்ளிகளின் கட்டண விபரம் :
 பள்ளியின்  பெயர் , முகவரி
 LKGUKG II III IV 
சாக்ரடீஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல்
25, வரதராஜ பெருமாள் கோயில் தெரு
பரங்கி பேட்டை
 30503050 36503650 3650 3650 3650 
மஹ்மூதியா ஓரியண்டல்   நர்சரி & பிரைமரி ஸ்கூல்
14A , மீராப்பள்ளி தெரு
பரங்கி பேட்டை
 15001500 1850 1850 1850 1850 1850 
பாபா வித்யாலயா  நர்சரி & பிரைமரி ஸ்கூல்
 28A, பீட்டர் தெரு
பரங்கி பேட்டை
 335033503600 3600 3600 3600 3600 
ஸ்ரீ லட்சுமி நர்சரி & பிரைமரி ஸ்கூல்
சஞ்சீவிராயர்   தெரு
பரங்கி பேட்டை
 2850 2850 28503650 3650 3650 3650 
 
 LKG
UKG 
II 
III 
IV 
V 
சேவா மந்திர் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்
பரங்கி பேட்டை
 41504150 4800 4800 4800 4800 4800 

 VI 
 VII 
 VIII 
 IX 
 
 XI
 XII 
  5250 5250  5250  6700  6700 17100 17100 
 கலிமா  மெட்ரிகுலேஷன் ஸ்கூல்
பெரிய தெரு
பரங்கி பேட்டை

 LKG
UKG 
II 
III 
IV 
V 
 2050 2050 3750 3750 3750 37503750 
 VI
VII 
VIII 
IX 
XI 
XII 
 6100 6100 6100  8200  8200 11300 11300

16 ஜூன், 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On வியாழன், ஜூன் 16, 2011 No comments


ஜுன்னத் மியான் தெருவில் மர்ஹும் ரஹ்மதுல்லாஹ்ஷா அவர்களின் மகளாரும், செய்யது அஹமது அவர்களின் மனைவியும், ஹாஜா மக்தூம், முஹம்மது காசிம், உமர் ஆகியோர்களின் சகோதரியும், சிராஜ் அவர்களின் தாயாருமாகிய உம்முசல்மா அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். நேற்று புதன்கிழமை (15-06-2011) மாலை 5 மணிக்கு அப்பா பள்ளியில் நல்லடக்கம்செய்யப்பட்டது,

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

14 ஜூன், 2011

இந்திய ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகை...

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், ஜூன் 14, 2011 No comments


ந்திய ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளை, மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார். டெல்லியில் நடந்த அகில இந்திய ஹஜ் கமிட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில், 70 வயதான ஹஜ் பயணி, தனக்கு துணையாக ஒருவரை அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவார். அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட டிக்கெட் கிடைக்கும். இந்த சலுகை இந்த ஆண்டு முதலே அமல்படுத்தப்படும்.
ஹஜ் பயணத்துக்கு 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தும், குலுக்கலில் இடம் கிடைக்காதவர்களுக்கு, 4-வது ஆண்டில் உடனடியாக அனுமதி வழங்கப்படும். அவர்கள் குலுக்கலில் கலந்து கொள்ள வேண்டியது இல்லை என்றார். மேலும் ஹஜ் பயணிகளுக்கு, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் முகாம்கள் அமைத்து முறையான பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நன்றி
மாலைமலர்

13 ஜூன், 2011

"கிரிக்கெட்'' வெற்றிப்பெற்றது பரங்கிப்பேட்டை அணி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், ஜூன் 13, 2011 No comments

 சி.முட்லூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பரங்கிப்பேட்டை RCC, அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் சேலஞ்சர் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது.சிவசங்கரன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முனுசாமி,ராமநாதன்ராமச்சந்திரன்,  நம்மாழ்வார்,  முன்னிலை வகித்தனர். வரதராஜன் போட்டியை துவக்கி வைக்க பாபு சீருடை வழங்கினார். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த நூற்றுஐம்பத்துக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.இந்தபோட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சி.முட்லூர் விளையாட்டுத் திடலில் நடந்தது. அணித் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முன்னாள் கிரிக்கெட் வீரர் பானுச்சந்தர் முன்னிலை வகித்தார். முதல் பரிசு 6,666 ரூபாய் பரங்கிப்பேட்டை ஆர்.சி.சி., அணியும், இரண்டாம் பரிசு 5,555 ரூபாய் ஒரத்தூர் நாட் ரீச்சபிள் அணியும், மூன்று மற்றும் நான்காம் பரிசுகளாக 7,777 ரூபாயை சி.முட்லூர் சேலஞ்சர் இரு அணிகளும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். தமிழ் நன்றி கூறினார்.

11 ஜூன், 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, ஜூன் 11, 2011 No comments


தெசன் தைக்கால் தெருவில்,மர்ஹும் முஹம்மது அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் மகளாரும், பீர்கான் அவர்களின் மனைவியும், முஹம்மது முராது, நகுதா மரைக்காயர், ஜாபர் அலி ஆகியோரின் சகோதரியும் ஆகிய ரோஜா (எ) கவுஸ் பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.
 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்.

8 ஜூன், 2011

கிடைக்கவில்லை ஜாமீன்..?!

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூன் 08, 2011 No comments


திமுக எம்பி கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. முன்னதாக 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரின் ஜாமீன் மனுக்களையும் விசாரணை நீதிமன்றம் மே 20-ம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. அதை எதிர்த்து கனிமொழியும், சரத்குமாரும் தில்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்றத்தில் மே 30-ம் தேதி முடிவடைந்தது. அதன் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 2ஜி ஊழலில் தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் சேர்ந்து சதி செய்தார் என கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


தீர்ப்பு வாசிக்கப்படும்போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்தனர்.
2ஜி ஊழல் பணத்தில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டிவிக்காக ரூ 200 கோடியை பெற்றார் என நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நன்றி;
mypno.blogspot.com

ஆம்னி பேருந்து விபத்து

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், ஜூன் 08, 2011 No comments

சென்னையில் இருந்து திருப்பூருக்கு தனியார் ஆம்னி பஸ் 07-06-2011 இரவு சென்று கொண்டு இருந்தது. வேலூர் மாவட்டம் ஓச்சேரியை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே சற்று முன் சென்ற போது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி 15 அடி பள்ளத்துக்குள் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்து டிரைவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார். பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் தீயில் கருகி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வேலூர் கலெக்டர் நாகராஜ் மற்றும் வேலூர் சரக டிஐஜி ஜெயராம், தீயணைப்புத்துறை வேலூர் சரக துணை இயக்குனர் டேவிட் வின்சென்ட் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்