ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

28 பிப்., 2009

குறைகிறது கட்டணங்கள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 28, 2009 No comments





மார்ச் 1-ஆம் தேதி முதல் பி.எஸ். என்.எல். நிறுவனம் லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசுகளாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசுகளாகவும் குறைக்கிறது.
இத்தகவலை மாநிலங்களவையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.
இந்தியா கோல்டன் 50 என்ற புதிய திட்டம் மூலம் பிரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே - 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி, பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ். என்.எல். நிறுவனம் தெரி வித்துள்ளது. தற்போது, இந்த வசதியை வைத்து இருக்கும் சந்தாதாரர்கள் இனி மேல் எஸ்.டி.டி. பேசுவதற்கு 0 என்ற எண்ணை உபயோகிக்க வேண்டும் என்றும் பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

நன்றி;

இந்நேரம்

27 பிப்., 2009

தயக்கம் ஏன்! எழுதப் பழகுங்கள்!!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 27, 2009 No comments


இஸ்லாத்திற்கு எதிராக பனிப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிராக நடத்தும் எழுத்து மற்றும் கருத்துப்போரை பார்க்கும்போது அந்த பனிப்போர் உச்சத்தை அடைந்துவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். அதைப்போல நாலொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிருப்பதால் தொலைகாட்சி கேட்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் விழ வைத்திருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம் அல்லாதவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நமக்கு பல சான்றுகள் தருகின்றன.ராவுத்தர்கள் எடுக்கும் படத்தில்கூட முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அதே போல முஸ்லிம் அல்லாதவர்கள் நடத்தும் இணையதளத்தில் ஒரு முஸ்லிம் இந்துமதத்தைப் பற்றி எழுதினால் வரவேற்கிறார்கள், பதிவு செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப்பற்றி எந்த செய்தியும் பதிவு செய்வதில்லை. (அப்படியே பதிவு செய்தாலும் அது தர்கா புராணமாகத்தான் இருக்கும்).காந்தியை கொன்ற கோட்சே 'அவர்' என்று மரியாதையாகவும் சந்தேக கேஸில் மாட்டிக்கொண்ட முஸ்லிம்களை 'அவன்' என்று மரியாதை குறைவாகவும் செய்திகள் வெளியிடுவை பார்க்கலாம்.இதற்கு தூபம் போடத்தான் அன்றே, பாட நூல்களில் மொகலாயர்களின் படையெடுப்பு, ஆரியர்களின் வருகை என்று ஆக்கிவிட்டார்கள் போலும்.ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற மீடியா, இன்னொரு பக்கம் தீவிர வாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று செய்திப்பத்திரிக்கைகளை புரட்டினால் பி.ஜே.பி அல்லது ஆர்.எஸ்.எஸ் செய்திதான் அதிக இடத்தை பிடித்திருக்கிறது. ஒரு குக்கிராமத்தில் இவர்களின் கூட்டம் நடந்தால் கூட அது வெளிச்சப் படுத்தப்படுகிறது.அவர்களுக்கு முஸ்லிம்களை தன் வலையினுள் கொண்டுவருவது மிகச்சுலபம். ஆட்டோ ஓட்டுகிறாயா? வா! எங்களின் ஆட்டோ சங்கத்தில் இணைந்துக்கொள். கார் ஓட்டுகிறாயா? வா எங்கள் கார் சங்கத்தில் இணைந்துக்கொள். எங்கள் தலைவர் பி.ஜே.பி என பேத்தலாம்.எங்கள் தலைவரின் தலைவர் ஆர்.எஸ்.எஸ். -ல் அங்கம் வகிக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு உதவும் நல்மனம் கொண்டவர். அவரின் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கலாம். அவர் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல என்று முஸ்லிம்களை மூலைச்சலவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வகுப்பு சண்டைகள் நடந்த இடத்தின் வரலாற்றைப் புரட்டி பார்ப்போமேயானால் ஒன்றை மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.இவர்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர்தானே, நண்பரின் சகோதரி தானே, குழுந்தைதானே என்றெல்லாம் எந்த எண்ணமும் வருவதில்லை. முஸ்லிம் என்றால் பரவாயில்லை கற்பழிக்கலாம், கொல்லலாம், கண்டந்துண்டுகளாக வெட்டலாம், உயிருடன் எரிக்கலாம் என்றுதான் இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள், இல்லையில்லை புரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். குஜராத்தின் சம்பவம்தான் இதற்கு வெட்ட வெளிச்சம். குஜராத் மோடியின் மனிதப் படுகொலைக்காக குரல் கொடுத்த கவிஞர்களின் சில வரிகளை இங்கேஉங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

கவிக்கோ அப்துல் ரகுமான்:முன்பு இந்துத்துவா என்றால்பாரதப் பண்பாடு
இப்போதுகர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்துசிசுக் கருவைஎடுத்துத் தீயில் வீசுதல்

கவிஞர் இன்குலாப்எரியும் கொழுந்துகளில்ஆண்கள்பெண்கள்வகிர்ந்த வயிற்றிலிருந்துகுருதி சொட்டும்கொப்புள் கொடியோடுகண் விழிக்காதகருவறைச் சிசுக்கள்

கவிஞர் பொன்னீலன்குறிகளுடனும் குண்டாந்தடிகளுடனும்வாள்களுடனும்,சூலாயுதங்களுடனும்மறுபடியும்குகை விட்டுக் கிளம்பின - அந்தக்கற்கால மிருகங்கள்....நிறைச் சூலி வயிறுகீறிகண் திறவா பசும் குருத்தைகோரைப் பற்கள் துருத்தும்கடைவாயில் சிவப்பொழுககிழித்துக் கிழித்துவிழுங்கி ஆனந்தித்தன.

கவிஞர் சுகுணா திவாகர்சுன்னத் குறியினரை தேடியலையும்வாளின் பசி முன்கையறு நிலையன்றி யாதுமில்லைமறைப்பதற்கோ, காட்டிக்கொடுப்பதற்கோவென்றாயின அடையாளங்கள்

இப்படிப்பட்டவர்களிடம் கட்டைப் பஞ்சாயத்து நீதிக்கென கதவைத் தட்டுகிறார்கள். வாடகை வீட்டை காலி செய்யனுமா? வா நம் அண்ணனிடம் போகலாம் என்று முஸ்லிம்களை அழித்தொழிப்பவர்களிடமே தஞ்சம் போகிறார்கள். வரப்பு யாருக்குச் சொந்தம் என்ற சண்டை வக்கீலிடம் போனால் வயல் வக்கீலுக்கு சொந்தமாகிவிட்டது என்பார்கள். அதுபோலத்தான்.அண்ணன் தம்பி பிரச்சினைக்கு தாதாக்களிடம் கட்டைப்பஞ்சாயத்துக்கு போக, சொத்து அண்ணனுக்கும் அல்ல தம்பிக்கும் அல்ல அவர்களுக்கு ஆகிவிடுகிறது. குரங்கு அப்பத்தை பங்கு போட்ட கதைதான்.சரி இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் எப்பொழுது சமூகத்திற்கு சுட்டிக்காட்ட போகிறீர்கள்?. இத்தகைய அநியாயங்களை தோலுரித்துக் காட்டுவது நம் அனைவரின் பணியல்லவா?எழுதப்பழகுங்கள்! உங்களுக்கென்று பல மக்கள் மன்றங்கள், விவாத அரங்குகள், வலைப்பூக்கள் இணையத்தில் இருக்கின்றது.படியுங்கள், கண்ணியமாக கருத்துச் சொல்ல பழகுங்கள் பல இணையதளங்கள் இருக்கின்றது. உங்கள் எழுத்தினால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன்கிடைக்குமா என்று பார்த்து எழுதுங்கள் (புகழுக்காக அல்ல.அதிகமாக எழுதுபவர்களை, அவர்களுக்கு ஃப்ரீ நேரம் இருக்கிறது என்று விமர்ச்சிக்கிறார்கள். அதிகமான எழுத்தாளர்கள் அவர்களின் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு, நண்பர்களிடம் பிரச்சினைகளை பகிர்வதை விட்டுவிட்டு, மனைவி குழந்தைகளிடம சந்தோசமாக பேசிமகிழும் நேரத்தை குறைத்துக்கொண்டு, வெளியில் ஜாலியாக போய் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு எழுதுகிறார்கள் என்பதுதான் உண்மை.தயக்கம் ஏன் தோழர்களே!எழுதப் பழகுங்கள்!!புதிய சரித்திரம் படைத்திடுங்கள்!!!

நன்றி:
ஏகத்துவ ஆசியருக்கு...





26 பிப்., 2009

ஆர்ப்பாட்டம்...இது...ஆர்ப்பாட்டம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 26, 2009 No comments

பரங்கிப்பேட்டை பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ஒழுக்க சீர்கேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.நகர செயலாளர் G.வல்லரசன் தலைமை தாங்கினார்,கடலூர் மாவட்ட செயலாளர் திரு,T.மணி வாசகம் கண்டண உரையாற்றினார்.நகர செயலாளர் பேசுகையில், ஆசிரியர்களை மாணவர்கள் மாதா பிதா குரு தெய்வம் எனசொல்வார்கள் ஆனால் அந்த ஆசிரியர்களோ, மாணவிகள் முன்னால் அருவறுக்கதக்க முறையில் சண்டையிட்டுள்ளார்கள். இது மிகவும் கண்டிக்கதக்கது இந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதுமட்டுமில்லாமல், அனைத்து ஆண் ஆசிரியர்களையும் பணியிடைமாற்றம் செய்யவேண்டுமென்றார்,இல்லையெனில்இந்திய கம்யூனிஸ்ட் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துமென்றார்.மாவட்ட செயலாளர் T. மணிவாசகம் பேசுகையில் இந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பொருத்தவரை பெண் ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கபடவேண்டும், ஆசிரியர் தாழ்வு மனப்பான்மையால் ஒருவரையொருவர் சண்டையிட்டு கொண்டிருந்த போது நீண்டகாலமாக சண்டையை கண்டுக்கொள்ளாத தலைமை ஆசிரியர் மீது கல்வி இலாகா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சமுக பொறுப்பை உணர்ந்து மற்றவர்கள் மதிக்க தக்கமுறையில் தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றார்.

ஊழல்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 26, 2009 No comments


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2 இலட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி மகேஷ்வரி இந்த தீர்ப்பை அளித்தார். பின்னர் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை அளித்ததைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார்.150 பக்கங்கள் கொண்டிருந்த இந்த வழக்கின் தீரப்பை வாசித்த நீதிபதி மகேஷ்வரி, ஊழல் என்னும் புற்று நோய் இந்திய சமூகத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஊழல் புரிந்தால் மொத்த சமூக அமைப்பும் கோபமுற்று அரசு திட்டங்கள் பாதிக்கப்படும். எனவே ஊழல் அரசு ஊழியர் சமூகத்திற்கு பெரிதும் அச்சுறுத்தல் என்று கூறினார்.அரசியல் சமூக அமைப்பில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று என்றும் அதில் ஊழல் கலப்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், மாதிரியாகக் கருதப்படும் தலைவர்களே ஊழலில் ஈடுபடும்போது பொதுமக்களிடம் நேர்மையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.1991 முதல் 1996 வரை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வருமானத்திற்கு அதிகமாக 42.5 மில்லியன் சொத்து சேர்த்தது உறுதிப்படுத்தப்பட்டு அந்த தொகையை பறிமுதல் செய்யவும் நீதி மன்றம் உத்தரவிட்டது.1996ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் சுக்ராமின மகன் உள்பட மொத்தம் 79 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.முன்னாள் பிரதமர்களான தேவகவுடாவுக்கும் நரசிம்மராவுக்கும் இடையில் நடைபெற்ற அரசியல் சன்டையில் அப்பாவியான தனது கட்சிக்காரர் சுக்ராம் பாதிக்கப்பட்டதாக அரவது வழக்கறிஞர் மினோச்சா கூறினார்.


நன்றி;
இந்நேரம்


23 பிப்., 2009

ஆசிரியரா இவர் ???

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், பிப்ரவரி 23, 2009 No comments

நமதூர் பரங்கிப்பேட்டை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இரு ஆசிரியர்களிடையே ஏற்பட்ட வாய் தகராறு மோதலில் முடிந்தது அதில் ரவிச்சந்திரன் என்கிற ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ஆசிரியரால்(?) மிகவும்
கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டு தாக்கப்படார்.இந்த சம்பவம் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் முன்னிலையில் நடந்ததுதான் கொடுமையிலும்,கொடுமை. +2, தேர்வு நெருங்கிவரும் நிலையில் மாணவிகள் எதிரில் காட்டுமிராண்டி தனமாய் நடந்துக்கொண்ட அந்த ஆசிரியர் மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்தப்படாமல் தகுந்த தண்டனை கொடுக்கப்படவேண்டும்
பெண்கள் பள்ளியில் இதுப்போன்ற சம்பவங்கள் இனி நடைப்பெறாமல் இருக்க
பெண் ஆசிரியர்கள் அதிகளவில் இந்த பள்ளியில் நியமிக்கப்படவேண்டும் ஆண் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு மாற்றப்படவேண்டும்.நமது இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் இந்த விசயத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்வரவேண்டும்.

22 பிப்., 2009

பதவியேற்ப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 22, 2009 No comments




இன்று காலை 10.30,மணியளவில் ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பதவியேற்பு விழா நடைப்பெற்றது
விழாவில் ஜனாப்,B.ஹமீது கெளஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். ஜனாப், கலிமா,K.ஷேக் அப்துல் காதர்(நவாப்ஜான் நானா) தலமையேற்க்க, ஹாஜி,அப்துல் சமது ராஷதி கிராத் ஓதினார்.
ஜமாத் சார்பாக அமைக்கப்பட்ட தேர்தல் குழு தலைவர் ஜனாப்,ஹாஜி.Y. அஜிஸ் மியான் அவர்கள் தலைவருக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
தலைவர் தனது உரையில்
ஜமாத்தில் கூடியவிரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கபடுவார்கள் என்றார்.
இளைஞர்களுக்கு முக்கியதுவம் கொடுத்து அவர்களின் குறைகளை கழைய குழு அமைக்கப்படும் என்றார்.
பெண்களுக்கு ஓட்டுரிமைகுறித்தும், வெளிநாட்டில் வசிக்கும் பரங்கிப்பேட்டை முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓட்டுரிமை குறித்தும் கலந்துஅலோசிக்கப்படும் என்றார்.
தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட தலைவர், தான் தோல்வியடைய பல்வேறு சூழ்சிக்கள் தோன்றியது என்றும் அதில் ஒன்றுதான் பெண்கள் ஜமாத் என்ற பெயரில் வெளிவந்ததாகவும் இது எனது வளர்சியில் பொறாமைக்கொண்ட மாற்று சமுகத்தவர்களால் பின்னால் இருந்துக்கொண்டு இயக்கபட்டது கூறினார்.
அடுத்ததாக ஜமாத் வளர்சிக்கு பொதுமக்கள் தானாகவே முன்வந்து நிதி கொடுக்கவேண்டும் எனகேட்டுக்கொண்ட தலைவர் இவ்வளவு பெரிய ஊரில் ஜமாத் சந்தா தொகை ரூபாய்,1400 மட்டும் வசூலாவது மிகவுக் குறைவானது எனவும் ஜமாத் வளர்சிக்கு முக்கிய பங்கு வெளிநாட்டு வாழ் நமதூர் முஸ்லிம் சகோதரர்களுடையது என்றும் இந்த அமைப்புக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
தலைவருக்கு, உலமாக்கள்,அமைப்புசார்ந்தவர்கள், தனி நபர்கள், பரங்கிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்.திரு,ராமபாண்டியன்,மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்
அதனுடன் சேர்ந்து நமது ஊர் உலகச் செய்திகள் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

21 பிப்., 2009

மாற்றம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 21, 2009 No comments


கடலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர்கள்,மற்றும் துனை ஆய்வாளர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு மாற்றப்பட்டனர்.நமதூர் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த துனை ஆய்வாளர் திரு,மதிவாணன். ரெட்டிச்சாவடிக்கு மாற்றப்பட்டார்,இவருக்கு பதிலாக குமராட்சியில் பணிபுரிந்த திரு,செல்வராஜ் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிய உள்ளார்.மேலும் திருப்பாதிரிபுலியுரில் பணியாற்றிய பெண் துனன ஆய்வாளர் கவிதா பரங்கிப்பேட்டைக்கு மாற்றப்பட்டார்.

விடிவு காலம் பிறக்குமோ?

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 21, 2009 1 comment





நீங்கள் புகைப்படத்தில் பார்ப்பது பரங்கிப்பேட்டை பேருராட்சியில் ஆறாவது வார்டில் இருக்கும் காஜியார் தெரு.
இந்த தெரு நீண்ட நாட்களாக கவனிக்கப்படாமல் ரோடுகள் மிகவும் மோசமானநிலையில் இருக்கிறது.
இரு சக்கரவாகணங்களில் செல்பவர்கள் முதற்கொண்டு, ரோட்டில் நடந்து செல்பவர்கள் வரை அனைவருக்கும் இந்த ரோடு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.
மழைக்காலங்களில் இந்த ரோட்டில் குளம் ஒன்று உருவாகிவிடும்.
பரங்கிபேட்டையில் பல்வேறு சாலைகள் நன்றாக இருந்தாலும்,இந்த சாலை மட்டும் அப்படியே தான் உள்ளது.
என்றைக்குதான் இதற்க்கு விடிவு காலம் பிறக்குமோ?


போட்டாச்சு ரோடு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 21, 2009 No comments



பல மாதங்களாக கவனிக்கப்படாமல் இருந்து வந்த வாத்தியாப்பள்ளி ரோடு சமிபத்தில் நெடுஞ்சாலைதுறையால் கவனிக்கப்பட்டு ரோடுபோடும் பணிநடைப்பெற்றுவருகிறது.
இன்னும் ஒரிரு தினங்களில் இப்பணி நிறைவடையும் போல் தெரிகிறது.


20 பிப்., 2009

நன்றி அறிவிப்பு....

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 20, 2009 No comments



சமீபத்தில் நடைப்பெற்ற இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட

இரு வேட்பாளர்களும் தமக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு தங்களுது நன்றியை

தெரிவித்துக்கொண்டனர்.

பதவியேற்ப்பு...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 20, 2009 No comments


சமிபத்தில் நடைப்பெற்ற பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனாப்.M .S.முஹம்மது யூனுஸ் அவர்கள் வருகிற 22,ம் தேதி மிகவும் எளிமையாக தனது பதவியை ஏற்றுக்கொள்கிறார். இதன் பிறகு ஓரிருவாரங்களில் தனது நிர்வாககமிட்டியை
அமைத்துக்கொள்வார் என தெரியவருகிறது .இவர் மூன்று முறை தலைவர் பதவிக்கு ஊர் பொதுமக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்த தடவை தேர்தல் நடத்தி அதன் மூலம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
ஜமாத் தலைவரின் பணி சிறக்க portonovonews.blogspot.com தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

முதன் முதலாக

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 20, 2009 No comments



முதன் முதலாக ஒரு பெண் அமைச்சரை நியமித்து சவூதி அரேபிய அரசு வரலாறு படைத்துள்ளது. நூரா பின்த் அப்துல்லாஹ் அல்-ஃபாயிஸ் என்ற பெண்மணி, கல்வித்துறையில் பெண்கள் விவகாரத்திற்கான துணை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். "இந்த நியமனம் எனக்கு மட்டுமல்லாது சவூதிப் பெண்கள் அனைவருக்குமே பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. திறன் மிகுந்த செயற்குழுவின் உதவியுடன் சவால்களைச் சந்திக்கவும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தவும் என்னால் முடியும் என்று நம்புகிறேன்" என அமைச்சர் நூரா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

19 பிப்., 2009

இந்தவார சந்தை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 19, 2009 No comments


இந்தவாரம் சந்தையில் விலை சென்ற வாரம் போன்றுதான் காணப்பட்டது


  1. தக்காளி ரூ, 6.00

  2. பல்லாரி ரூ, ௧௫

  3. கோஸ் ரூ6.00

  4. இஞ்சி ரூ, 60.00

  5. வெண்டைகா ரூ, 10.00

  6. பூண்டு (சிறியது) ரூ,12.00

  7. பூண்டு (பெரியது) ரூ,15.00

  8. அவரைகாய் ரூ, 20.00

  9. புளி ரூ,35.00

  10. கொத்தவரங்காய் ரூ20.00

  11. உருளைகிழங்கு ரூ, 8.00

  12. சட்டி கருனை ரூ, 10. 00

  13. சின்ன கருனை ரூ16.00

  14. சின்னவெங்காயம் ரூ, 20.00

  15. கேரட் ரூ,10.00

18 பிப்., 2009

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 18, 2009 No comments

ரேவ் மெயின் ரோடு தோனித்துறை மர்ஹூம்.முஹம்மது கெளஸ் அவர்களின் மனைவியும்,மர்ஹூம். இப்றாஹிம் மரைக்காயர் அவர்களின் தாயாரும், ஜனாப். Y.அஜிஸ்மியான்(முன்னால் தாசில்தார்)அவர்களின் மாமியாரும், யூசுப் அலி,முஹம்மது கெளஸ், இவர்களின் பாட்டியாருமாகிய

செய்யது பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இவர்களின் நல்லடக்கம் இன்று மாலை 4.00,மணிக்கு மீராப்பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

17 பிப்., 2009

எஸ்.எம். அப்துல் மஜீத்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், பிப்ரவரி 17, 2009 No comments

முன்னாள் தமிழக அமைச்சர் கடையநல்லூர் எஸ்.எம். அப்துல் மஜீத் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. அவரது ஜனாஸா திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நைனா முஹம்மது குத்பா பள்ளியில் தொழுகை நடைபெற்று தாருஸ்ஸலாம் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், வேல்துரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிர காஷ், நகராட்சித் தலைவர் எஸ்.ஏ.ஏம். இப்ராஹீம், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட னர். முன்னாள் அமைச்சர் எஸ்.எம். ஏ. மஜீத் மறைவுக்கு தமிழக முதல்வர் கலைஞர், அமைச்சர்கள், பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீரா சாமி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு ஆகியோர் இரங்கல் தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளனர். மர்ஹூம்