வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2 இலட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி மகேஷ்வரி இந்த தீர்ப்பை அளித்தார். பின்னர் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை அளித்ததைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார்.150 பக்கங்கள் கொண்டிருந்த இந்த வழக்கின் தீரப்பை வாசித்த நீதிபதி மகேஷ்வரி, ஊழல் என்னும் புற்று நோய் இந்திய சமூகத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஊழல் புரிந்தால் மொத்த சமூக அமைப்பும் கோபமுற்று அரசு திட்டங்கள் பாதிக்கப்படும். எனவே ஊழல் அரசு ஊழியர் சமூகத்திற்கு பெரிதும் அச்சுறுத்தல் என்று கூறினார்.அரசியல் சமூக அமைப்பில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று என்றும் அதில் ஊழல் கலப்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், மாதிரியாகக் கருதப்படும் தலைவர்களே ஊழலில் ஈடுபடும்போது பொதுமக்களிடம் நேர்மையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.1991 முதல் 1996 வரை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வருமானத்திற்கு அதிகமாக 42.5 மில்லியன் சொத்து சேர்த்தது உறுதிப்படுத்தப்பட்டு அந்த தொகையை பறிமுதல் செய்யவும் நீதி மன்றம் உத்தரவிட்டது.1996ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் சுக்ராமின மகன் உள்பட மொத்தம் 79 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.முன்னாள் பிரதமர்களான தேவகவுடாவுக்கும் நரசிம்மராவுக்கும் இடையில் நடைபெற்ற அரசியல் சன்டையில் அப்பாவியான தனது கட்சிக்காரர் சுக்ராம் பாதிக்கப்பட்டதாக அரவது வழக்கறிஞர் மினோச்சா கூறினார்.
நன்றி;
இந்நேரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக