ஹம்துன் அஷ்ரப்

22 பிப்., 2009

பதவியேற்ப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 22, 2009 No comments




இன்று காலை 10.30,மணியளவில் ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பதவியேற்பு விழா நடைப்பெற்றது
விழாவில் ஜனாப்,B.ஹமீது கெளஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். ஜனாப், கலிமா,K.ஷேக் அப்துல் காதர்(நவாப்ஜான் நானா) தலமையேற்க்க, ஹாஜி,அப்துல் சமது ராஷதி கிராத் ஓதினார்.
ஜமாத் சார்பாக அமைக்கப்பட்ட தேர்தல் குழு தலைவர் ஜனாப்,ஹாஜி.Y. அஜிஸ் மியான் அவர்கள் தலைவருக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
தலைவர் தனது உரையில்
ஜமாத்தில் கூடியவிரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கபடுவார்கள் என்றார்.
இளைஞர்களுக்கு முக்கியதுவம் கொடுத்து அவர்களின் குறைகளை கழைய குழு அமைக்கப்படும் என்றார்.
பெண்களுக்கு ஓட்டுரிமைகுறித்தும், வெளிநாட்டில் வசிக்கும் பரங்கிப்பேட்டை முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓட்டுரிமை குறித்தும் கலந்துஅலோசிக்கப்படும் என்றார்.
தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட தலைவர், தான் தோல்வியடைய பல்வேறு சூழ்சிக்கள் தோன்றியது என்றும் அதில் ஒன்றுதான் பெண்கள் ஜமாத் என்ற பெயரில் வெளிவந்ததாகவும் இது எனது வளர்சியில் பொறாமைக்கொண்ட மாற்று சமுகத்தவர்களால் பின்னால் இருந்துக்கொண்டு இயக்கபட்டது கூறினார்.
அடுத்ததாக ஜமாத் வளர்சிக்கு பொதுமக்கள் தானாகவே முன்வந்து நிதி கொடுக்கவேண்டும் எனகேட்டுக்கொண்ட தலைவர் இவ்வளவு பெரிய ஊரில் ஜமாத் சந்தா தொகை ரூபாய்,1400 மட்டும் வசூலாவது மிகவுக் குறைவானது எனவும் ஜமாத் வளர்சிக்கு முக்கிய பங்கு வெளிநாட்டு வாழ் நமதூர் முஸ்லிம் சகோதரர்களுடையது என்றும் இந்த அமைப்புக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
தலைவருக்கு, உலமாக்கள்,அமைப்புசார்ந்தவர்கள், தனி நபர்கள், பரங்கிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்.திரு,ராமபாண்டியன்,மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்
அதனுடன் சேர்ந்து நமது ஊர் உலகச் செய்திகள் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

0 கருத்துகள்: