ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

28 பிப்., 2011

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், பிப்ரவரி 28, 2011 No comments


ஆத்தாங்கரை தெருவை சேர்ந்த, மர்ஹும் செய்யது நூர் அவர்களின் மகளாரும்,மர்ஹும் S.சேக் முஹம்மது அவர்களின் மனைவியும், S.M.ஜலீல் அவர்களின் தாயாருமாகிய ஹாஜியா.செய்யது நிஷா பீவி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

27 பிப்., 2011

போலியோ ‌சொட்டு மருந்து வழங்கப்படுகிறது

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 27, 2011 No comments

தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட போலியோ ‌சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் செட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

26 பிப்., 2011

கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்..

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 26, 2011 No comments

பரங்கிப்பேட்டை அப்பா பள்ளி சமுதாய கூட கமிட்டி சார்பாக, கல்வியில் பின் தங்கியுள்ள மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக நாளை மஹ்முதியா ஷாதி மஹாலில் "கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்" நடைப்பெறுகிறது
இதில் M.S. முஹம்மது யூனுஸ் (தலைவர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,பேரூராட்சி மன்றம்) தலைமையேற்கிறார், முஸ்லிம்களின் எதிர்காலம் என்கிற தலைப்பில் C.M.N. சலிம் M.A. அவர்களும், முஸ்லிம் பெண்களின் சமுதாய முன்னேற்றம் என்கிற தலைப்பில் செய்தா பானு அவர்களும் உரையாற்றுகிறார்கள்


திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, பிப்ரவரி 26, 2011 No comments

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் வருவதையொட்டி, அதிமுக, திமுக உள்ளிட் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வருகி்ன்றன. இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை, முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனை சந்தித்துப் பேசினார். சந்தி்ப்பிற்கு பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த காதர் மொய்தீன் கூறியதாவது, வெற்றிக்கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கூ்டடணி வெற்றிக்கு பாடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார். 

விருப்ப மனு தாக்கல்

Posted by ஹம்துன்அஷ்ரப் On சனி, பிப்ரவரி 26, 2011 No comments


தமிழகத்தின் 14-வது சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும், கூட்டணி தொடர்பாக முனைப்பாக பணியாற்றி வருகின்றன.இந்நிலையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுவினை நேற்று முதல் மார்ச் 7-வரை பெற திட்டமிட்டுள்ளது.

முதல் நாளான நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்காக பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் மாவட்ட தி.மு,க பிரதிநிதியும், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், பரங்கிப்பேட்டை ஒன்றிய பிரதிநிதியும், 10-வது வார்டு செயலாளருமான M.K. பைசல் யூசுப் அலி ஆகியோர் விருப்ப மனுவினை தி.மு.க தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஹஸன் முஹம்மது ஜின்னா உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளிடம் சமர்ப்பித்தனர்.  A.R.முனவர் ஹுசேன் கடந்த முறை புவனகிரி தொகுதிக்காக விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் போது நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி கோமு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேலவன், சேக் அப்துல் ரஹ்மான், ஹாஜா, நெய்னா, யாசீன், சலீம், அப்துல் காதர், ஆரிப், பக்ருதின், சாஹுல் ஹமீது உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர். 


நன்றி: mypno.com

25 பிப்., 2011

அ.தி.மு.க.+தே.மு.தி.க. பேச்சுவார்த்தை தொடங்கியது..

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 25, 2011 No comments


வரஇருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்று முடிவு செய்த தேமுதிக, பிப்ரவரி 24ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். தேமுதிக தரப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், சுந்தரராஜன், சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதிமுகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. பேச்சுவார்த்தை குறித்த விபரங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த்திடம் தெரிவிக்கப்படும்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று தெரிவித்த அவர், ஆட்சியில் பங்கு கேட்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார். 
மேலும் தொகுதி பங்கீடு உறுதியான பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திப்பார் என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

23 பிப்., 2011

மன்னர் அப்துல்லாவின் சலுகைகள்..!

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், பிப்ரவரி 23, 2011 No comments


சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். உடல் நலம் குன்றியிருந்து மன்னர் மொராக்கோவில் சிகிச்சை பெற்ற பின்னர் இன்று (23.02.2011) சவுதி திரும்பினார்.
நாடு திரும்பியதும் அவர் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தில் 15 சதவிகிதம் உயர்வு வழங்குவதாக அறிவித்தார். இது தவிர வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி, வேலையில்லாமல் இருக்கும் சவுதி பிரஜைகளுக்கு உதவித் தொகை, கடன் வாங்கி செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களின் கடனை அரசு வழங்கும் என பல சலுகைகளை அளித்துள்ளார். இவ்வாறு ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உதவித் திட்டங்களை அப்துல்லா அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் ஆளுகின்ற அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவது தொடர்ந்து நடைபெற்று வருகையில் சவுதி மன்னரின் இந்த அறிவிப்பு மக்களை அமைதிப்படுத்தும் முயற்சியாக தெரிகிறது.
நன்றி:

வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 23, 2011 No comments


நேற்று பெய்த திடீர் மழையின் காரணமாக தடைப்பட்டிருந்த வாத்தியாப்பள்ளி தெரு தார் 

சாலை அமைக்கும் பணி இன்று காலை முதல் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.







பரங்கிப்பேட்டையில் மார்க்கக் கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித் தொகை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 23, 2011 No comments

இரத்த கொடையாளர்களே வருக....

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், பிப்ரவரி 23, 2011 No comments

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிப்பேட்டை லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் நாளை (24-02-11)ல் B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹாலில் நடைப்பெருகிறது.
Ln. Agri.M.இராதாகிருஷ்ணன் விழாவுக்கு தலைமைதாங்குகிறார்
,Ln.ஹாஜி.M.S.முஹம்மது யூனுஸ் (தலைவர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,மற்றும் பேரூராட்ச்சி மன்றம்) அவர்கள் முகாமை துவக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.மற்றும் ஹாஜி. கலிமா.K.சேக் அப்துல் காதர் மரைக்காயர், Dr.P.சரவணகுமார், Ln.காதர் அலி மரைக்காயர், Ln.G.வெங்கடேசன், Ln. புருஷோத்த்மன். அகியோர் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பிக்கிறார்கள். 

22 பிப்., 2011

பள..பளக்கும் சிமெண்ட் சாலைகள்..!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், பிப்ரவரி 22, 2011 No comments



பரங்கிப்பேட்டை நகரில் பல்வேறு இடங்களில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைப்பெற்று முடிவடைந்து வருகிறது. காஜியார் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை ஜமாஅத் - பேருராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் நேற்று பகல் பார்வையிட்டார். இதனிடையே வாத்தியாப்பள்ளி தெரு தார் சாலை பராமரிப்பு பணிகளுக்காக சாலையின் ஓரங்களில் இருந்த மணல் அள்ளப்பட்டு பணி துவங்க இருந்த நிலையில் இன்று காலை முதல் பெய்து வரும் மழையின் காரணமாக அப்பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

இறப்புச் செய்தி

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், பிப்ரவரி 22, 2011 No comments


  1. கோட்டாத்தாங்கரை சந்தில், மர்ஹும் நூர்தீன் மரைக்காயருடைய மகளாரும், 
மர்ஹும் ஹாஜா,   முஹம்மது சுல்தான், முஹம்மது கவுஸ் இவர்களின் தாயாரும்,  மர்ஹும் அமீர் வாத்தியாருடைய மனைவியுமான ஹலிமா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷh அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்


     2.    பரங்கிப்பேட்டை பாரக் வீடு மர்ஹும் ஹனீபா அவர்களின் மருமகனும், செய்யது அமீன் அவர்களின் தகப்பனாருமாகிய செய்யது உமர் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்சா அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் சிதம்பரம் வண்டிகேட்டில்.






20 பிப்., 2011

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 20, 2011 No comments


அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்
 
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர்  கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி  தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.

மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.
--
 

நிலவு ஆராய்ச்சி....?!

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 20, 2011 No comments

நேற்று இரவு 8 மணி முதல் பரங்கிப்பேட்டை முழுதும் பரபரப்பான செய்தி பரவ, அனைவரும் வானத்தை நோக்கி முழுநிலவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். சிலர், 'அட! ஆமாங்க, தெரியுதுங்க!' என்கின்றனர். சிலர், 'எனக்கு ஒன்னுமே தெரியலயே...!' என்கிறன்றனர். 'அட நல்லா உத்து பாருங்க... கிளியரா தெரியுது' என்று வேறு சிலர்.

ஆண்களைவிட பெண்கள் முந்திக்கொண்டு, வீட்டு வாசல்களுக்கும் - மொட்டை மாடிக்கும் சென்று நிலாவுக்கு செல்லாமலேயே தங்கள் ஆராய்ச்சியை துவங்கிவிட்டனர்.

அவர்கள் நோக்கும் விசயம் தெரிகிறதோ இல்லையோ செய்தி மட்டும் மொபைல் போன் மூலமாக காட்டுத்தீ போல பரவுகிறது. இரவு 10 மணியை கடந்தும் சுமார் 11 மணிவரை இந்த நிலாவில் படம் பார்க்கும் படலம் நீடித்தது.

அப்படி என்னதான் என்று கேட்கின்றீர்களா? ஒன்னுமில்ல! 'இத்தனை காலமாக நிலாவில் பாட்டி வடை சுட்ட விசயத்தை விட்டு விட்டு நேற்று அந்த நிலாவில் அல்லாஹ்வின் பெயர் தெரிகிறது என்று யாரோ ஒரு வதந்தியை பரப்பி, பீதிய கௌப்பிட்டாங்க!

நன்றி:
mypno

பிரபாகரனின் தாயார் மரணம்.

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, பிப்ரவரி 20, 2011 No comments


 பிரபாகரனின் தாயார் பார்வதிஅம்மாள். 81 வயதான இவர் இலங்கையில் வசித்து வந்தார். முதுமை காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சர்க்கரை நோயாலும், இருதய கோளாறாலும் அவதிப்பட்டு வந்தார். பக்கவாதமும் தாக்கியது. அவரை இந்தியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
இதற்கு உரிய அனுமதி கிடைக்காததால் பார்வதிஅம்மாள் வந்த விமானம் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் மலேசியாவில் சில மாதங்கள் சிகிச்சை பெற்றார்.   அதன்பிறகு இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள வல்வெட்டித் துறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு அங்கு சிலமாதங்களாக அவர் மருத்துவசிகிச்சை பெற்றுவந்தார்.சமீபகாலமாக உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்டு சுயநினைவு இழந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.10 மணிக்கு பார்வதிஅம்மாள் காலமானார்.