சமூக ஒற்றுமைக்கு சிறப்பான உதாரணங்களுள் நமது பரங்கிப்பேட்டையும் ஒன்று. சகோதர மதத்தவர்/இனத்தவர்களுடனான வெளிப்புறத்து ஒற்றுமைகள் மட்டுமின்றி, ஒரே இன/மதத்தவர்களுள் நிலவும் உள்ஒற்றுமையும் கருத்தொருமிப்பும் யாரையும் 'மாஷா அல்லாஹ்' என்று சொல்லவைக்கும்.
கடந்த ஜனவரி 18ம்தேதி நடந்த ஊர் ஜமாத் பொதுகுழுவில் கருத்துவேறுபாடு கொண்டிருந்த ஒருசில சகோதரர்களும் இந்த ஒற்றுமை நீரோட்டத்தில் இரண்டற ஒன்றாகக் கலந்து மனம் விட்டுப் பேசியது நெகிழ்ச்சியான உணர்ச்சிப் பெருக்கை ஒவ்வொரு உள்ளத்திலும் ஏற்படுத்தியது.
இந்த ஒற்றுமையை வசப்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தபடியும், இந்நிலை இனிவரும் நாள்களிலும் தொடர்ந்திடப் பிரார்த்தித்தபடியும்.....
"ஷாதி மஹாலில் " ஊர் ஜமாத் சார்பாக மெகா விருந்து நடைப்பெற்றது இதில்பரங்கிப்பேட்டையைச் சார்ந்த அனைத்து முஸ்லிம் குடும்பங்களுக்கும் குடும்பத்தலைவரின் பெயரில் அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டது
இந்த மெகா விருந்து நிகழ்ச்சியில் பெருவாரியான ஆண்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்
இந்த விருந்து அழைப்பிதழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் ஜமாஅத்துகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நிகழ்ச்சியில் தெரியவந்தது.
பார்ப்பதற்க்கு கண் கொள்ளாகாட்சியாக இருந்த இந்த சந்தோஷ விழா அழைப்பிதழில் போட்டிருந்தபடி சரியாக 11மணியளவில் ஆரம்பமாகியது
உற்றார்-உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் உற்சாகமாய் கலந்துக்கொண்டு களப்பணியாற்றியது , நம்மை யாரும் இனி பிரிக்கமுடியாது என்பதைச் சொல்லாமல் சொல்லியது
விருந்து நடைபெற்ற நேரத்தில் எங்கே தால்ச்சா, எங்கே மறுசோறு, அங்கே ஒரு சஹன் வையுங்க போன்ற சந்தோஷ குரல்கள் ஷாதிமஹால் எங்கும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது
இந்த விழாவில் மத நல்லிணக்கத்தை பேணும் விதமாக மாற்று மத சகோதரர்களும் கலந்துகொண்டார்கள் .
தகவல்;
ஹம்துன் அஷ்ரப்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக