பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான "தேர்தல்" இன்று காலை சரியாக எட்டு மணியளவில் ஷாதி மஹாலில் நடைப்பெற்றது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தனது ஜமாத்திற்கான தலைவரை தேர்ந்துயெடுப்பதற்க்காக வயதான பெரியவர்களும், உடல் ஊனமுற்ற சகோதரர்களும் தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் வாக்களிக்க வந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது
இளைஞர் சமுதாயமும் மிக ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குசாவடியில் குவிந்தனர்.
சில சலசலப்புக்கள்(கள்ள ஓட்டு பிரச்சினை) எழுந்தாலும் அவைகள் போலீஸாரால் தீர்த்துவைக்கப்பட்டன
இந்த தேர்தலுக்காக ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாக நியம்மிக்கப்பட்டனர்,அவர்களும் தமது பணியினை திறம்பட செய்தது குறிப்பிடதக்கது.
போலீஸாரும் இருபதுக்கு மேற்ப்பட்ட எண்ணிக்கையில் காவல் பணியை மேற்க்கொண்டனர்.காலையிலும் ,மாலையிலும் சிதம்பரம் காவல் இனை கண்காணிப்பாளர் திரு, நரேந்திர நாயர் மேற்பார்வையிட்டு சென்றார்.
பரங்கிப்பேட்டையை சேர்ந்த முதியவர்களிடம் இந்த தேர்தலைப்பற்றி கருத்து கேட்டோம்
அவர் தனது வாழ்நாளில் இதுப்போன்று "ஜமாத்"தலைவரை தேர்ந்துயெடுப்பதற்காக தேர்தல் எல்லாம் வைத்ததுயில்லை எனசொன்னார்.
ஊர் ஜமாத் தலைவரை தேர்ந்தெடுக்க மிகப்பெரிய அளவில் தேர்தல் வைத்து தேர்ந்தெடுத்தது தமிழ்நாட்டை பொருத்தவரை இதுவே முதல் முறையாக இருக்ககூடும்.
இந்தஜமாத் தேர்தல் அறிவித்த நேரத்தில் முதலில் M.S.முஹமது யூனுஸ் அவர்களும், அடுத்ததாக டாக்டர்.S.நூர் முஹம்மது அவர்களும், மூன்றாவதாக கா.மு. கவூஸ் அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடைசி நேரத்தில் கா.மு.கவூஸ் அவர்கள் வாப்பஸ் வாங்கியதால் இரண்டு வேட்பாளர்கள் மட்டும் களத்தில் இருந்தனர் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக