பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கியில் A.T.M., வசதி செய்து தர தி.மு.க., இளைஞரணி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் பரங்கிப்பேட்டையில் இந்தியன் வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் A.T.M., வசதியில்லாததால் தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் A.T.M,ற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகரித்து வரும் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உடனடியாக A.T.M, வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக