உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணையத் தளமான டுவீட்டரை பயன்படுத்திய இங்கிலாந்தைச் சேர்ந்த 104 வயது பெண் காலமானார்.
இதனை அந்த இணையத் தளமே செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் பிராட்போர்டு மாகாணத்தை சேர்ந்தவர் லிவிபியான் (104) இவர் டுவீட்டர் இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்து ஏராளமானவர்களை நண்பர்களாக்கினார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதியுற்ற லிவிபியான் தூக்கத்தில் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. மறைந்த லிவிபியானுக்கு முன்னாள் பிரதமர் கார்டன்பிரவுன் இரங்கலை தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக