ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

20 பிப்., 2009

பதவியேற்ப்பு...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 20, 2009 No comments


சமிபத்தில் நடைப்பெற்ற பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனாப்.M .S.முஹம்மது யூனுஸ் அவர்கள் வருகிற 22,ம் தேதி மிகவும் எளிமையாக தனது பதவியை ஏற்றுக்கொள்கிறார். இதன் பிறகு ஓரிருவாரங்களில் தனது நிர்வாககமிட்டியை
அமைத்துக்கொள்வார் என தெரியவருகிறது .இவர் மூன்று முறை தலைவர் பதவிக்கு ஊர் பொதுமக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்த தடவை தேர்தல் நடத்தி அதன் மூலம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
ஜமாத் தலைவரின் பணி சிறக்க portonovonews.blogspot.com தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

முதன் முதலாக

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 20, 2009 No comments



முதன் முதலாக ஒரு பெண் அமைச்சரை நியமித்து சவூதி அரேபிய அரசு வரலாறு படைத்துள்ளது. நூரா பின்த் அப்துல்லாஹ் அல்-ஃபாயிஸ் என்ற பெண்மணி, கல்வித்துறையில் பெண்கள் விவகாரத்திற்கான துணை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். "இந்த நியமனம் எனக்கு மட்டுமல்லாது சவூதிப் பெண்கள் அனைவருக்குமே பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. திறன் மிகுந்த செயற்குழுவின் உதவியுடன் சவால்களைச் சந்திக்கவும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தவும் என்னால் முடியும் என்று நம்புகிறேன்" என அமைச்சர் நூரா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

19 பிப்., 2009

இந்தவார சந்தை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 19, 2009 No comments


இந்தவாரம் சந்தையில் விலை சென்ற வாரம் போன்றுதான் காணப்பட்டது


  1. தக்காளி ரூ, 6.00

  2. பல்லாரி ரூ, ௧௫

  3. கோஸ் ரூ6.00

  4. இஞ்சி ரூ, 60.00

  5. வெண்டைகா ரூ, 10.00

  6. பூண்டு (சிறியது) ரூ,12.00

  7. பூண்டு (பெரியது) ரூ,15.00

  8. அவரைகாய் ரூ, 20.00

  9. புளி ரூ,35.00

  10. கொத்தவரங்காய் ரூ20.00

  11. உருளைகிழங்கு ரூ, 8.00

  12. சட்டி கருனை ரூ, 10. 00

  13. சின்ன கருனை ரூ16.00

  14. சின்னவெங்காயம் ரூ, 20.00

  15. கேரட் ரூ,10.00

18 பிப்., 2009

இறப்புச் செய்தி

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 18, 2009 No comments

ரேவ் மெயின் ரோடு தோனித்துறை மர்ஹூம்.முஹம்மது கெளஸ் அவர்களின் மனைவியும்,மர்ஹூம். இப்றாஹிம் மரைக்காயர் அவர்களின் தாயாரும், ஜனாப். Y.அஜிஸ்மியான்(முன்னால் தாசில்தார்)அவர்களின் மாமியாரும், யூசுப் அலி,முஹம்மது கெளஸ், இவர்களின் பாட்டியாருமாகிய

செய்யது பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இவர்களின் நல்லடக்கம் இன்று மாலை 4.00,மணிக்கு மீராப்பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

17 பிப்., 2009

எஸ்.எம். அப்துல் மஜீத்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On செவ்வாய், பிப்ரவரி 17, 2009 No comments

முன்னாள் தமிழக அமைச்சர் கடையநல்லூர் எஸ்.எம். அப்துல் மஜீத் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. அவரது ஜனாஸா திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நைனா முஹம்மது குத்பா பள்ளியில் தொழுகை நடைபெற்று தாருஸ்ஸலாம் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், வேல்துரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிர காஷ், நகராட்சித் தலைவர் எஸ்.ஏ.ஏம். இப்ராஹீம், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட னர். முன்னாள் அமைச்சர் எஸ்.எம். ஏ. மஜீத் மறைவுக்கு தமிழக முதல்வர் கலைஞர், அமைச்சர்கள், பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீரா சாமி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு ஆகியோர் இரங்கல் தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளனர். மர்ஹூம்

16 பிப்., 2009

ஓட்டு போடுறாங்கோ

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், பிப்ரவரி 16, 2009 No comments




இரு வேட்பாளர்களும் தமது ஓட்டினை பதிவுசெய்யும் காட்சி ஜமாத் தேர்தல்

15 பிப்., 2009

வெற்றி கனியை பறித்தார்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments

வெற்றி கனியை பறித்தார் தற்போதைய தலைவர் யூனுஸ் நானாபதிவான ஓட்டுக்கள்; 1966

யூனுஸ் நானா வாங்கியவை; 1263
நூர் முஹம்மது வாங்கியவை; 686
செல்லாதவை; 17

இதுவே முதல் முறை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான "தேர்தல்" இன்று காலை சரியாக எட்டு மணியளவில் ஷாதி மஹாலில் நடைப்பெற்றது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தனது ஜமாத்திற்கான தலைவரை தேர்ந்துயெடுப்பதற்க்காக வயதான பெரியவர்களும், உடல் ஊனமுற்ற சகோதரர்களும் தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் வாக்களிக்க வந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது
இளைஞர் சமுதாயமும் மிக ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குசாவடியில் குவிந்தனர்.
சில சலசலப்புக்கள்(கள்ள ஓட்டு பிரச்சினை) எழுந்தாலும் அவைகள் போலீஸாரால் தீர்த்துவைக்கப்பட்டன
இந்த தேர்தலுக்காக ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாக நியம்மிக்கப்பட்டனர்,அவர்களும் தமது பணியினை திறம்பட செய்தது குறிப்பிடதக்கது.
போலீஸாரும் இருபதுக்கு மேற்ப்பட்ட எண்ணிக்கையில் காவல் பணியை மேற்க்கொண்டனர்.காலையிலும் ,மாலையிலும் சிதம்பரம் காவல் இனை கண்காணிப்பாளர் திரு, நரேந்திர நாயர் மேற்பார்வையிட்டு சென்றார்.
பரங்கிப்பேட்டையை சேர்ந்த முதியவர்களிடம் இந்த தேர்தலைப்பற்றி கருத்து கேட்டோம்
அவர் தனது வாழ்நாளில் இதுப்போன்று "ஜமாத்"தலைவரை தேர்ந்துயெடுப்பதற்காக தேர்தல் எல்லாம் வைத்ததுயில்லை எனசொன்னார்.
ஊர் ஜமாத் தலைவரை தேர்ந்தெடுக்க மிகப்பெரிய அளவில் தேர்தல் வைத்து தேர்ந்தெடுத்தது தமிழ்நாட்டை பொருத்தவரை இதுவே முதல் முறையாக இருக்ககூடும்.

இந்தஜமாத் தேர்தல் அறிவித்த நேரத்தில் முதலில் M.S.முஹமது யூனுஸ் அவர்களும், அடுத்ததாக டாக்டர்.S.நூர் முஹம்மது அவர்களும், மூன்றாவதாக கா.மு. கவூஸ் அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடைசி நேரத்தில் கா.மு.கவூஸ் அவர்கள் வாப்பஸ் வாங்கியதால் இரண்டு வேட்பாளர்கள் மட்டும் களத்தில் இருந்தனர் .

தேர்தல் களம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments





ஜமாத் தேர்தல்

தேர்தல் களம் -2

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 15, 2009 No comments





தேர்தல் களம் -2

13 பிப்., 2009

ஓட்டு வேட்டை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, பிப்ரவரி 13, 2009 No comments





இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் தேர்தல் வரும் பிப்ரவரி 15ம் தேதி நடைப்பெற இருக்கின்ற
நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் , தாம் பதவியில் இருந்தபோது செய்த சாதனைகளையும் .தற்போது வெற்றிப்பெற்று தலைவர் பதவிக்கு வந்தால் செய்யப்போகும் பணிகளையும் பட்டியல்லிட்டு நோட்டீஸ் அடித்து வாக்காளர்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமுதாயத்தை பொருத்தவரையில் இந்த "ஜமாத்" தேர்தல் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.வெளிநாட்டில் வசித்துவரும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களும் இந்த தேர்தலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

12 பிப்., 2009

கவிதை

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 12, 2009 No comments




துளிர்க்கின்ற எதுகண்டும் துலங்கும் உள்ளம்

களிக்கின்ற மனதுக்கே கவிதை வெள்ளம்

அளிக்கின்ற குணமிருக்கும் அதனால் 'தரு'வாம்

வளர்க்கின்ற எவருள்ளும் வாசம் மிகவாம்!

மகிழ்வின் உணர்வை மனதில் சுவையாய் நிகழ்த்தும்

இயற்கையின் நெஞ்சம்-திகழுற ஆயிரம் காவியம்

ஆங்கே தமக்குள்ளே தூயமொழி பேசும் துளிர்.



இப்இப்னு ஹம்துன் னு ஹம்துன்

நன்றி :வார்ப்பு

காய்-கனி சந்தைநிலவரம்

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், பிப்ரவரி 12, 2009 1 comment


பரங்கிப்பேட்டை மாநகரில் வியாழன் தோறும் கூடும் வாரசந்தையில் இந்த வாரம் காய்கறி மற்றும் கனி வகைகளின் விலை வீழ்ச்சியடைந்து காணப்பட்டது தங்கத்துக்கு நிகராய் விற்க்கப்பட்ட "தக்காளி" தகரத்துக்கு நிகராய் மிகவும் விலை குறைந்து விற்க்கப்பட்டது
அதுப்பற்றிய விலை விபரம்
கிலோ விலையில்.
பல்லாரி, ரூ.17
சின்ன வெங்காயம்.ரூ20
தக்காளி ரூ, 5
உருளை ,ரூ.10
கத்திரிகாய், ரூ,15
இஞ்சி, ரூ,44
பூண்டு, ரூ, 15
கோஷ், ரூ.10
அவரை ,ரூ,20
பச்சை மிளகாய், ரூ,16
வெண்டை, ரூ20
முள்ளங்கி, 4
பீட்ரூட், ரூ. 8
சவ்சவ், ரூ.10
கொத்தவரங்காய், ரூ.12
ஆப்பிள் கிலோ, ரூ 45
கமலாபழம், கிலோ, ரூ 25
திராட்ச்சை கிலோ, ரூ ௨0


8 பிப்., 2009

6 வயதுக் குழந்தையின் காதுகளைப்பிடித்து உயரத்தூக்கி...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On ஞாயிறு, பிப்ரவரி 08, 2009 No comments



தலித் இனக் குழந்தையொன்றை பொலிஸார் தாக்கி சித்திரவதை செய்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதையடுத்து உத்தரபிதேச மாநிலம் முழுவதும் அச்சம்பவத்துக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா,உத்தரப் பிரதேச மாநிலம் எடாவா, ஜஸ்வந்த்பூரில் உள்ள லோகமண்டி எனும் வணிகச் சந்தையில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தன்னிடம் வைத்திருந்த 280 ரூபா பணத்தை சந்தைக்கு வந்திருந்த தலித் இனத்தைச் சேர்ந்த கோமள் என்ற 6 வயதுக் குழந்தை திருடிவிட்டதாக ஒருவரால் பொலிஸில் புகார்செய்யப்பட்டது. இதையடுத்து மேற்படி சந்தைப்பகுதிக்கு வந்த பொலிஸார் குறித்த சிறுமியை அடித்துத் துன்புறுத்தினர்.இதன்போது ஷியாம்லால் யாதவ் என்ற உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அச்சிறுமியின் இரண்டு காதுகளையும் பிடித்து உயரத் தூக்கியதோடு தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து உயரத்தூக்கி அச்சிறுமியை உலுக்கியது பார்ப்போரின் இதயங்களை வேதனையில் ஆழ்த்திய போதும் பொலிஸுக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை.இருந்தபோதிலும் இந்தக் கோரக் காட்சி ஒருவரால் ரகசியமாக கைத்தொலைபேசி மூலம் பதிவுசெய்யப்பட்டு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து அச்சிறுமியை சித்திரவதைக்குட்படுத்திய உதவி பொலிஸ் அதிகாரியை மாநில காவல்துறைத் தலைவர் பணிநீக்கம் செய்துள்ளார்.

நன்றி:http://www.mrishan.blogspot.com/

4 பிப்., 2009

கடையடைப்பு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், பிப்ரவரி 04, 2009 No comments

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்தும்,
போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.
தமிழர் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் சில அரசியல்கட்சிகளால்
முழு அடைப்புக்கு அழைப்புவிடப்பட்டிருந்தது
இதனையடுத்து நமதூர் பரங்கிப்பேட்டையில் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன எப்போதும் பரபரபாக காட்சியளிக்கும் சஞ்சீவிராயர் கோவில் கடைத்தெரு மக்கள் நடமாற்றம் அதிகமின்றி வெறிச்சோடிகாணப்பட்டது.
அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள் வழக்கம்போல் திறந்திருந்தன
"டீ" கடைகள் அனைத்தும் அடைக்கபட்டிருந்ததால் டீ பிரியர்கள் சைக்கிளில் விற்பனையாகும் கேன் டீயை நாடிச்சென்றனர்.
பஸ் போக்குவரத்தும் அதிகமில்லை பஸ்ஸிலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.