-
PORTONOVO MASJID
This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]
-
MARINE BIOLOGY
This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]
-
PORTONOVO LIGHT HOUSE
This is the PORTONOVO LIGHT HOUSE. [...]
#
#
10 ஏப்., 2009
17 மார்., 2009
வினோத குரங்கு ?
..ச்சேச்சே..உங்க ஊருக்கு வந்தது (?) நான் இல்லே நான் சுத்த சைவம், உங்க ஊருக்கு வந்து பிரியாணில்லாம் சாப்பிட நம்மால் முடியாது.
ஆமாம், நேத்து சாயங்காலம் அவரு பார்த்தாராம், செல்போன எடுத்துட்டு வந்து போட்டோ எடுக்குறத்துகுள்ள ஓடிடிச்சாம், இவரு வூட்டு மாடிலே தான் தங்கி இருந்திச்சாம்" இப்படி மணிக்கொருதரம் மெருகூட்டப்படும் கலவையான கருத்துக்களுடன், பரங்கிப்பேட்டை பகுதி பரபரப்பின் பிடியில் ஆழ்ந்து போய் இருக்கின்றது, எல்லாம் ஒரு குரங்கு செய்த சேஷ்டை தான், அது பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.
பரங்கிப்பேட்டை தோணித்துறை பகுதியில் மனித குரங்கு (?) உலாவுவதாக பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பகலிலும், சில நேரங்களில் இரவிலும் நடமாடுகின்றது என்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த குரங்கின், முகம், கை-கால் ஆகியவை கறுப்பு நிறத்தில் இருப்பதாக சிலர் வதந்தியை பரப்பியுள்ளதாக தினமலர் நாளேடு (15-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.
சாதரணமான குரங்குகளை விட சற்று வினோதமாக காணப்படுவதாகவும், கரடி போல் அதிகமாக முடி உள்ளதாகவும், மேலும், இந்த குரங்கு நேற்று முன்தினம் ரேவு மெயின் ரோடு, ஆற்றங்கரை தெரு போன்ற பகுதிகளிலும் சுற்றி வந்ததாகவும், தினத்தந்தி நாளேடு (16-03-2009) செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பு: படத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படம் - மாடல்
15 மார்., 2009
14 மார்., 2009
ரோ(ஓ)டு போட்டாச்சு...!!!



தமிழ் கூறும் நல்லுலகத்தில் புதியதாக ஆராய்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட பல சொலவடைகளில் இதுவும் பிரசித்தி பெற்ற ஒன்று தான், அது என்ன தெரியுமா?"கோடு போட சொன்னால் போதும் ரோடே போட்டுவிடுவார்கள்" என்பது தான்
மழைக்காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை முதல் படத்திலும்,
குளிர் காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை இரண்டாவது படத்திலும்
கோடை காலத்தில் காஜியார் தெருவின் நிலையினை மூன்றாம், நான்காம் படத்திலும் கண்டு களியுங்கள் (?!)
இப்போது-அப்போது என்று காத்திருந்து வெறுத்து போன திருவாளர் பொதுஜனம் தனது பங்காக சாலைகளில் இருக்கும் பள்ளத்தை ஓடுகளை கொண்டு நிரப்பி விட்டார். பரங்கிப்பேட்டை நகரின் பெரும்பாலான தெருக்களில் சாலைகள் போடப்பட்டிருக்கையில் இந்த காஜியார் தெரு மட்டும் தார் வாடையை நுகராமல்
இருப்பது ஏனோ ?
12 மார்., 2009
சிறுபாண்மை இனத்தினர்காக அனைவர்க்கும் கல்வி

ஜெர்மனியில் 17 வயது மாணவன் சுட்டு 15 பேர் பலி
நன்றி; இந்நேரம்
திடீர் மழை : 40 செம்மறி ஆடுகள் பலி

புதுச்சத்திரம் அருகே திடீர் மழையால் 40 செம்மறி ஆடுகள் இறந்தன. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர்காட்டுச்சாகை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், 300க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு கிராம வயல் வெளியில் செம்மறி ஆடுகளை தங்க வைத்து, மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையில், செம்மறி ஆடுகள் மழையில் நனைந்தன.
நேற்று காலை திடீரென 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இறந்தன. இதனால் பெரியப்பட்டு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பெரியப்பட்டு ஊராட்சி தலைவர் கஸ்தூரி பரங்கிப்பேட்டை கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை டாக்டர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். திடீர் மழை காரணமாக உஷ்ணம் அதிகரித்தும், குளிர் தாங்கமுடியாமலும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர் 12-03-2009
11 மார்., 2009
இறப்புச்செய்தி
10 மார்., 2009
மாறிவரும் வானிலை

மழைக்காலம் ?!


அக்னி வெயிலாக இருக்குமோ என மக்களை சந்தேககொள்ளும் படி சில தினங்களாக (நன்னாரி சர்பத்,மற்றும் பல குளிர் பானங்களை நாடும்படி) தன் வேலையை காட்டிய வெயில் யாரிடமும் சொல்லாமல் திடீரென ஜகா வாங்கியது. 
9 மார்., 2009
மூடப்பட்டிருக்க வேண்டும் டாஷ்மார்க்
நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 10ம் தேதி அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட் டிருக்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி வரும் 10ம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடப்பட்டிருக்க வேண் டும். டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில் லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர் கள் 10ம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை மீறி கடை திறந்து வைத்திருந் தால் கடை மேற்பார்வையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.நன்றி;
மைபிஎன் ஒ.காம்
மழையும்-மனசும்

கடந்த சில தினங்களாக மக்களை வாட்டி வதைத்த வெயில் இன்று காணாமல்போக, காலைமுதல் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது குளிர்ந்த காற்றும் அடிக்கதொடங்கியது. பகலில் தூறலாக மக்களை நனைத்த மழை பிற்பகலில் சற்றே வேகம்காட்டினாலும் , மழையை ரசிக்கும் மூடில் மக்கள் இல்லை கவிழ்ந்தது டெம்போ..

மாசி மகம் தீர்த்தவாரியை முன்னிட்டு முட்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இன்று காலை முதல் பரங்கிப்பேட்டை கடற்கரையை நோக்கி மக்கள் வெள்ளம் கரைப்புரண்டது. இத்திருவிழாவில் கலந்துக்கொள்வதற்காக, டெம்போ டிராவலரில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வந்த வாகனம் ஒன்று பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் அருகே கவிழ்ந்தது, இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர், அவர்களை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை செய்தனர்.அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ வாகனத்தை இயக்க முடியாத சூழ்நிலையில், தகவலறிந்த பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகம் தனது ஆம்புலன்ஸ் வாகனத்தை உடனடியாக அனுப்பி, கவலைக்கிடமான நோயாளிகளை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பேருதவி புரிந்தது. இவ்விபத்தில் காயமடைந்தவர்களை பேரூராட்சி மன்ற தலைவரும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முஹம்மது யூனுஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
7 மார்., 2009
தள்ளு வண்டி
5 மார்., 2009
உண்ணாவிரதம்

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும், வருகிற 10-ந்தேதி அதிமுக சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். மற்ற மாவட்டத் தலை நகரங்களில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அதில் முதலில் எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு நிதியை அளித்து தொடங்கி வைக்க உள்ளேன். அந்தந்த மாவட்டங்களில் வைக்கப்படும் உண்டியலில் செலுத்தப்படும் நிதிகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் பின்னர் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.என்று கூறியுள்ளார்.







