ஹம்துன் அஷ்ரப்

  • PORTONOVO MASJID

    This is the oldest masjid in the town and is formely known as ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி.[...]

  • MARINE BIOLOGY

    This is the MARINE BIOLOGY COLLEGE of ANNAMALAI UNIVERSITY, chidambaram. This is situated opposite to the ROYAL BEACH OF PORTONOVO.[...]

  • PORTONOVO LIGHT HOUSE

    This is the PORTONOVO LIGHT HOUSE. [...]

  • #

    #

17 நவ., 2010

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், நவம்பர் 17, 2010 No comments


அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்துடன் தொடங்கியது இந்த வருடத் தியாகத் திருநாள் தொழுகை.

காலை 7:30 மணிக்கு மவ்லவி ஷேக் ஆதம் மஹ்ழரி ஆற்றிய பேருரையில் ஹஜ்ஜின் சிறப்புகளையும், நபி இப்ராஹீம் அவர்களின் வாழ்க்கையையும் அழகிய முறையில் கூறினார்.

மவ்லவி அப்துஸ் ஸமது ரஷாதி முதல் ரக்அத்தில் "ஷப்பிஹிஸ்மா...என தொடங்கும் "சூரத்துல் அஃலா"-வும், இரண்டாவது ரக்அத்தில் "ஹல்லத்தாக்கா...என தொடங்கும் "சூரத்துல் காஷியா" ஓதி பெருநாள் தொழுகையை நடத்தினார். மீராப்பள்ளி இமாம் முஜிபுர் ரஹ்மான் உமரி அரபி உரையும், துஆ-வும் செய்தார்.


நேற்று-இன்று-நாளை (?) என்று பரங்கிப்பேட்டையில் பெருநாள் கொண்டாட்டங்கள் இருந்திட்ட போதிலும், இன்றைய தினம் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் நடைப்பெற்ற தொழுகைக்கு பின்னர் பாரம்பரிய உற்சாகத்துடனும் அளவிலா சந்தோஷத்துடனும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முகமனுடன் வாழ்த்துக்களுடன் அன்பை வெளிப்படுத்தி கொண்ட நிகழ்வு, வெளிநாட்டு வாழ் சகோதரர்களுக்கு கிட்டாத ஒரு பாக்கியம் தான் எனலாம்.

தியாகத் திருநாள் தொழுகையினையொட்டி மீராப்பள்ளி நிர்வாகம் வழக்கம் போல் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. மின்சாரம் தடைப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக மின்சார வினியோகம் ஜெனரேட்டர் மூலமே நடைப்பெற்றது.

வாசக அன்பர்கள் அனைவர்களுக்கும் ஊர்-உலகச் செய்தி குழுமம் சார்பில் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.

படம்: novian, pnojamaath group

16 நவ., 2010

வாக்காளர் சேர்ப்பு முகாம்...

Posted by ஹம்துன்அஷ்ரப் On செவ்வாய், நவம்பர் 16, 2010 No comments


பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து இடங்களில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் வாக்காளர் சேர்க்கும் பணி மாவட்ட முழுவதும் பல கட்டங்களாக நடத்தப் பட்டது. புதிய வாக்காளரை சேர்க்க ரேஷன் அட்டை, வயதுக்கான சான்றிதழ் உள்ளிட்ட பல விதிமுறைகள் இருந்ததால் பெரும்பாலானோரின் மனு நிராகரிக் கப்பட்டது. இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்மத்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி, சலங்காரத்தெரு தொடக்கப் பள்ளி, தேசிய தொடக்கப்பள்ளி, நெடுஞ்சாலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.

முகாமில் ரேஷன் அட் டைக்கு பதில் வி.ஏ.ஓ., சான்றிதழ், வயது சான்றிதழுக்கு தந்தை அல்லது தாய் ஒப்புதல் கடிதம் கொடுத் தால் போதும் என விதிமுறைகள் தளர்த்தப் பட்டதால் நேற்று ஏராளமானோர் புதிய வாக்கா ளர்களாக சேர்க்கப் பட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் செழியன், வி.ஏ.ஓ., ராஜாராமன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். நடுவீரப்பட்டு: பண் ருட்டி அடுத்த சி.என். பாளையம் கடைவீதியில் உள்ள நடுநிலைப்பள்ளி மையத்தில் போதிய விண் ணப்பங்கள் இல்லாததால் பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் ஜெராக்ஸ் எடுத்து வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர்.


நன்றி ; தினமலர்

15 நவ., 2010

எழுத்தோவியங்கள்...

Posted by ஹம்துன்அஷ்ரப் On திங்கள், நவம்பர் 15, 2010 No comments

இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்
இறைத்தோழர்
இபுறாஹிம்நபி
உள்ளிருந்து
ஒளிர்ந்த உண்மையால்
நம்ரூதின்
நெருப்புக்கரங்களும்
அணைக்க இயலாத
நன்னெறிப் பேரொளி
அகிலமெங்கும் படர்ந்தது
அன்பின் மார்க்கமாய்!

அன்று அது
சிந்தனையாய் பூத்த
இறைமையின் தேட்டம்.

இன்று வெடிக்கும்
சிந்தனைப் பருக்களிலோ
தான்மையெனும் சீழின் ஓட்டம்

அன்று
கற்களைச் சிதறடித்த
கத்தி
கழுத்தை அறுப்பதில்
தோற்றுப் போனது
ஆன்மிக உயிர்
அங்கே குடிகொண்டிருந்ததால்!

'வந்துவிட்டேன், இறைவா
இதோ வந்துவிட்டேன்'
அன்று முழங்கிய
ஓர் அர்ப்பணிப்பின் குரல்
காலந்தோறும்
கணீரென்று ஒலித்தபடியிருக்க...


இன்றோ
நாவெனும் வாளாலே
நல்லிணக்கம் அறுப்பதற்கும்
ஒற்றுமை சிதறடித்து
உபத்திரவம் செய்வதற்கும்
ஆணவ முழக்கங்களல்லவா
அதிகமாகிக்கொண்டிருக்கின்றன


அன்று
பாலகனுக்காய்
நீர் தேடிய
தாயின் ஓட்டம்
சத்தியத் தேடலுக்கோர்
சரியான பாதை வகுத்தது
சாட்சியாய் சரித்திரம்
காலந்தோறும்!


இன்றோ
தேடலற்ற ஓட்டங்களில்
சந்தோசமடைவதோ
சாத்தான் தான்

அறுக்கப்படவேண்டிய
மனோ இச்சைகளை
அறுத்துவிட்டாலே
அப்போது தெரியும்
தியாகத்தின் பலன்!

இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.

நன்றி ; இப்னு ஹம்துன் (எழுத்தோவியங்கள்)

13 நவ., 2010

மீன் பிடிக்க......

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, நவம்பர் 13, 2010 No comments


கடந்த சில நாட்களாக தொழிலுக்கு செல்லாமல் இருந்த மீன் பிடி விசைப்படகுகள் நேற்று முதல் கடலுக்குள் சென்றன வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீனவர்களை மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனமாவட்ட நிர்வாகம் அறிவுறித்திருந்தது. இதனால் கடந்த வாரம்முதல் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடந்த 7ம் தேதி இரவு''ஜல்'' புயல் சென்னை - நெல்லூருக்குமிடையே கரையை கடந்தது நேற்று முதல் மீன் பிடிக்க விடுக்கபட்டிருந்த எச்சரிக்கை மாவட்ட நிர்வாகத்தால் விலக்கிக் கொள் ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீனவர்கள் விசைப் படகுகளுடன் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

12 நவ., 2010

தேனீக்கள் கொட்டியது...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, நவம்பர் 12, 2010 No comments




பரங்கிப்பேட்டை கலிமா நகரில் விஷதேனீக்கள் தாக்கியதில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையறிந்த பரங்கிப்பேட்டை தீயனைப்புதூறையினர் விரைந்துவந்து விஷதேனீக்களை அழித்தனர்.

தேனீக்கள் கொட்டியதில் இரண்டுக்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11 நவ., 2010

விஷ வண்டு

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், நவம்பர் 11, 2010 No comments



கடலூரில்லிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள பெரியகுமட்டி கிராமம் அருகே வயல்வழியில் இருக்கும் பனைமரத்தில் சில இடங்களில் விஷவண்டுக்கள் கூடுக்கட்டி இருந்தன இவை அந்தவழியாக செல்பவர்களுக்கு தொந்தரவுக்கொடுத்து வந்தன இதனைஅறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்துச்சென்று விஷ வண்டுக்களை அழித்து பொதுமக்களை வண்டுக்களின் கடியில்யிருந்து காப்பாற்றினர்.

10 நவ., 2010

மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் பிருதிவிராஜ்சவான் : சிபாரிசை ஏற்று சோனியா முடிவு

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், நவம்பர் 10, 2010 No comments

ஆதர்ஷ் வீட்டு வசதி கழகத்தில் உறவினர்களுக்கு வீடு வழங்குவதில் நடைபெற்ற ஊழல் வழக்கு காரணமாக முதல்வர் பதவியை அசோக்சவான் ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் யார் என்பதில் பிரித்விராஜ் சவான் மற்றும் பாலாசாகேப் விக்கே பாட்டில் ஆகியோரது பெயர்கள் அடிப்பட்டன. இந்நிலையில் மாநில மேலிட பொறுப்பாளர்களான பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள பிரித்விராஜ் சவான் பெயரை மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஏகமனதாக ‌பரிந்துரைத்துள்ளனர். பரிந்துரைகளை கேட்டுக்கொண்டு டில்லி திரும்பிய அந்தோணியும், பிரணாபும் இன்று காலையில் டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரணாப் : மகாராஷ்டிரா காங்., எம்.எல்.ஏ., க்கள் பரிந்துரையை தலைவர் சோனியாவிடம் கூறியதாகவும் அவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

24 மணி நேரத்தில் அதிரடி : பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்குவதற்கு முன்னர் ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மகா., முதல்வர் அசோக் சவான், காமன்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அந்தோணி , பிரணாப் மும்பை பயணம், மகா., காங்., எம்.எல்.ஏ., க்கள் கூட்டம் , டில்லியில் சோனியாவுடன் சந்திப்பு, என 24 மணி நேரத்தில் பரபரப்பு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ராகுல் கணிப்பு : மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் "தூய்மை'யானவராக இருப்பார். அவர் திறமையற்றவராக இருக்கும்பட்சத்தில், உடனடியாக திரும்பப்பெறப்படுவார்.இவ்வாறு ராகுல் கூறியிருந்தார். இந்நிலையில் பிருதிவிராஜ் சவான் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளது காங்., அரசியல் வட்டாரத்தில் அ‌மோக வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் மேலிடம், சவானின் மத்திய அமைச்சர் பதவியின் அனுபவம் அவருக்கு மாநில அரசை கையாள உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் சவான் திறமைசாலி என பாராட்டியுள்ளது.

பிருதிவிராஜ் பேட்டி : முதல்வராக தேர்வு ‌செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் பிருதிவிராஜ் சவான். காங்கிரஸ் கட்சி மேலிடம் தன்னை மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்கும் படி கேட்டுக்கொண்டதாகவும், அந்த வேண்டுகோளை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். கூட்டணி கட்சிகள் ஆதரவு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இன்று மாலை மும்பை செல்வதாக கூறினார். பிரதமர் மன்மோகன்சிங் மத்திய இணை அமைச்சர் பொறுப்புக்களில் இருந்து தன்னை விடுவித்துவிட்டதாக கூறினார்.

நாளை பதவியேற்பு : இன்று மாலை மும்பை செல்லும் பிருதிவிராஜ் சவான் , கவர்னர் சங்கரநாராயணனை சந்திப்பார் என தெரிகறிது. நாளை அவர் முதல்வராக பதவியேற்றுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன..

நன்றி : தினமலர்

தொகையை வசூலிக்க எந்திரம்...

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், நவம்பர் 10, 2010 No comments

பி.எஸ்.என்.எல். போன் கட்டணத் தொகையை வசூலிக்க வாடிக்கையாளர் மையம் செயல்படுகிறது. அங்கு ரொக்கமாகவும், காசோலையாகவும் பெறப்படுகிறது. தற்போது பில் தொகையை ரொக்கமாக பெறும் நவீன எந்திரம் ஒன்றை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஏ.டி.எம். எந்திரம்போல் இந்த எந்திரத்தில் செல்போன் அல்லது டெலிபோன் எண்ணை அழுத்தினால் கட்டணம் எவ்வளவு என்பதை காட்டும். அந்தத் தொகையை எந்திரத்தில் போட்டு விடவேண்டும். அதை ஏற்றுக் கொண்டு ரசீதை வழங்கும்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் சென்னையில் முதல் கட்டமாக மூன்று இடங்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. கோடம்பாக்கம் , அண்ணாநகர், அடையார் ஆகிய வாடிக்கையாளர் சேவை மையத்தில் பில் தொகை வசூலிக்க நவீன எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பது எப்படி?

Posted by ஹம்துன்அஷ்ரப் On புதன், நவம்பர் 10, 2010 No comments


உடற்பயிற்சி செய்துவந்தால், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பலநோய்கள் அண்டாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வறிஞர் ஹன்னா ஆரெம் என்பவர் தன் ஆய்வுகளின் படி, வாரத்துக்கு சுமார் இரண்டரை மணி நேரமாவது உடல் பயிற்சி செய்யும் பெண்களை கர்ப்பப் பை புற்றுநோய் தாக்குவதில்லை என்று கூறியுள்ளார்.


பொதுவாக, நாற்பது வயதுக்கு மேல் பெண்களை மிரட்டும் நோய்களில் தலையாய இடம் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உரியது. இந்த நோயைத் தடுக்க வாரத்துக்கு சுமார் இரண்டரை மணி நேரமாவது உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்று ஹன்னா ஆரெம் கூறுகிறார்.

மேலும் குண்டான பெண்கள் கூட உடல் பயிற்சி செய்தால் கர்ப்பப்பை புற்றுநோயைத் தவிர்க்க முடியும் என்று சுமார் 6,000 பெண்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் அறிய முடிந்திருக்கிறது.

உடற் பயிற்சி என்று தனியாக நேரம் ஒதுக்கி செய்ய முடியாவிட்டாலும் கடுமையாக உடல் உழைப்பு செய்கிறவர்களுக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் வராது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அத்துடன் புற்றுநோய் மட்டும் அல்லாமல் வேறு சில நோய்களையும் உடற் பயிற்சி தடுக்கிறது என்கிறார் ஹன்னா.

நன்றி; http://www.inneram.com

8 நவ., 2010

ஜகா வாங்கியது ஜல்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On திங்கள், நவம்பர் 08, 2010 1 comment

கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை புயலாக மாறி ''ஜல்'' என்றபெயரில் ஊர் உலா வந்தது நாம் அறிந்ததே, காலம் கடந்து தொடங்கிய பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபொழிந்தாலும், சில இடங்களில் மழையின் சுவடே தெரியவில்லை என்பது குறிப்பிடதக்கது.மழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு சமீபத்திய மழை மகிழ்சியை கொடுத்தாலும்,வரும்காலங்களில் விவசாயத்திற்க்கு தண்ணிர் தேவை அதிகமாகவே இருக்கும் எனநம்பலாம்.கடந்தகாலத்தில் புயலாக ஊருக்குவந்த ''நிஷா-லைலா''க்களால் பாதிப்பு அதிகமிருந்தாலும், விவசாயத்திற்க்கு தேவையான தண்ணீர் கிடைத்தது ஆனால் இந்தவருடம் தண்ணீரின் தேவை விவசாயிகளுக்கு கண்ணீரைதான் வரவைக்கும்.






பரங்கிப்பேட்டையை பொருத்தவரையில் நேற்று விடாமல் தூறிய மழை 10 மி.மீட்டரோடு தன் பணியை நிறுத்திக்கொண்டு வெயிலுக்கு வெள்ளைக் கொடி காட்டியது. இந்நிலையில் கடலூர் உட்பட 11 மாவட்டங்களின் கல்வி நிறுவனங்களுக்கு மழைக்காரணமாக தமிழகரசு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7 நவ., 2010

மழைக்காலப் பரங்கிப்பேட்டை......

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, நவம்பர் 07, 2010 No comments










மழை துளிகள்...

Posted by ஹம்துன்அஷ்ரப் On ஞாயிறு, நவம்பர் 07, 2010 No comments

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள (ஜல் புயல்) காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்துவருகிறது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலிலுருந்து மத்திய மேற்குவங்க கடலை நோக்கி நகர்வதால் சென்னை அருகே இன்றிரவு கரையை கடக்கும் என எதிப்பார்க்கப்படுகின்றது...

இதன்காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது , நேற்றிரவிலிருந்து நமதூர் பரங்கிப்பேட்டையில் ஆங்காங்கே மழை பெய்ந்து வருகிறது. இதனால் கடலோரகிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்கசெல்லவில்லை.மாவட்டநிர்வாகமும்,முனெச்சரிக்கையாக ''புயல்-வெள்ள பாதுகாப்புக்காக தயார் நிலையில் தீயணைப்பு வீரர்களை வைத்துள்ளது.








ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்க்காக இன்றிரவு விமானநிலையம் செல்லயிருந்த ஹஜ் பயணிகள் புயல்-மழைக்காரணமாக முன்கூட்டியே செல்லயிருக்கிறார்கள்.

6 நவ., 2010

உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பெண் மரணமடைந்தார்.

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On சனி, நவம்பர் 06, 2010 No comments

உலகின் மிக மூத்த நபராக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பெண் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.இவருக்கு வயது 114. கரிபியன் தீவு அருகே உள்ள செயிண்ட் பர்த்தலேமியைச் சேர்ந்தவர் யூஜின் பிளான்சர்ட். இவர், கடந்த 1896 ம் ஆண்டு, பிப்ரவரி 16 ம் தேதி பிறந்தார். இவர், பல வருடங்களாக டச்சுத் தீவுகள் அருகே உள்ள கொராக்கோவில் வசித்தார். கடந்த முப்பது ஆண்டுகளாக, செயிண்ட் பார்த்தலேமியில் உள்ள மருத்துவமனையில் சேவை செய்து வந்தார். அமெரிக்காவில் உள்ள தன்னார்வ சேவை நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், யூஜின் தான் உலகின் மிக வயதானவர் என்று தெரியவந்தது. இதனால் இவர்பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில், யூஜின் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

5 நவ., 2010

புதிய புயல் ஜல்....!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வெள்ளி, நவம்பர் 05, 2010 No comments

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்துவருகிறது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலிலுருந்து மத்திய மேற்குவங்க கடலை நோக்கி நகர்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு குறைந்ததோடு ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

தற்போது வங்கக்கடலில் புதிய புயல்சின்னம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து 1200 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு தினங்களுக்கு சூறைக் காற்றுடன், பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் ஆந்திராவில் நாளை முதல் கண மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த குறைந்தக்காற்றழுத்த தாழ்வு நிலைக்கு ஜல்... என்று பெயரிடப்பட்டுள்ளது

4 நவ., 2010

பள்ளிக்கூடம்...

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On வியாழன், நவம்பர் 04, 2010 No comments




தண்ணிர் குடிக்க
தனி குவளை
ஒவ்வொரு பொழுதும்
தண்ணிர் குடிக்கும்போதும்
ஜாதியை நினைவுப்படுத்தும்
என் பள்ளிக்கூடம்

நன்றி : வார்ப்பு