ஹம்துன் அஷ்ரப்

17 நவ., 2010

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்...!

Posted by பந்தர்.அலி ஆபிதீன். On புதன், நவம்பர் 17, 2010 No comments


அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்துடன் தொடங்கியது இந்த வருடத் தியாகத் திருநாள் தொழுகை.

காலை 7:30 மணிக்கு மவ்லவி ஷேக் ஆதம் மஹ்ழரி ஆற்றிய பேருரையில் ஹஜ்ஜின் சிறப்புகளையும், நபி இப்ராஹீம் அவர்களின் வாழ்க்கையையும் அழகிய முறையில் கூறினார்.

மவ்லவி அப்துஸ் ஸமது ரஷாதி முதல் ரக்அத்தில் "ஷப்பிஹிஸ்மா...என தொடங்கும் "சூரத்துல் அஃலா"-வும், இரண்டாவது ரக்அத்தில் "ஹல்லத்தாக்கா...என தொடங்கும் "சூரத்துல் காஷியா" ஓதி பெருநாள் தொழுகையை நடத்தினார். மீராப்பள்ளி இமாம் முஜிபுர் ரஹ்மான் உமரி அரபி உரையும், துஆ-வும் செய்தார்.


நேற்று-இன்று-நாளை (?) என்று பரங்கிப்பேட்டையில் பெருநாள் கொண்டாட்டங்கள் இருந்திட்ட போதிலும், இன்றைய தினம் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் நடைப்பெற்ற தொழுகைக்கு பின்னர் பாரம்பரிய உற்சாகத்துடனும் அளவிலா சந்தோஷத்துடனும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முகமனுடன் வாழ்த்துக்களுடன் அன்பை வெளிப்படுத்தி கொண்ட நிகழ்வு, வெளிநாட்டு வாழ் சகோதரர்களுக்கு கிட்டாத ஒரு பாக்கியம் தான் எனலாம்.

தியாகத் திருநாள் தொழுகையினையொட்டி மீராப்பள்ளி நிர்வாகம் வழக்கம் போல் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. மின்சாரம் தடைப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக மின்சார வினியோகம் ஜெனரேட்டர் மூலமே நடைப்பெற்றது.

வாசக அன்பர்கள் அனைவர்களுக்கும் ஊர்-உலகச் செய்தி குழுமம் சார்பில் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.

படம்: novian, pnojamaath group

0 கருத்துகள்: